பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?
இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
SRM குழுமத்தின் நிறுவனர் திரு. பாரிவேந்தர் அவர்களின் பேத்தியும், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து அவர்களின் மகளுமான செல்வி ஹரிணி ரவி அவர்களுக்கும், PGP குழுமத்தின் நிறுவனர் திரு. பழனி G. பெரியசாமி அவர்களின் பேரன் திரு. விக்ரம் பெரியசாமி குமார் அவர்களுக்கும் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
மணமக்கள் இருவரும் அன்பும், மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்த இல்லற வாழ்வில் இணைந்து, வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, பல்லாண்டு காலம் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
பெரியதாதம்பாளையம் ஏரியை மீட்டெடுத்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம். 53.5 ஹெக்டேர் நிலத்திற்குப் பதிலாக சேலம் மாவட்டத்தில் 106 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு வழங்குவது தொடர்பாக ஏற்கனவே கரூர் மற்றும் சேலம் இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கிடையே நடைபெற்றுள்ள கடிதப் பரிமாற்றங்களின் அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அரசை வலியுறுத்துவோம்.
கரூர் மக்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற, நீர்நிலைகளை மீட்டெடுப்பதும், பசுமையை அதிகரிப்பதும், அமராவதி உபரிநீரை இப்பகுதிக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதும் அவசியம். இந்தப் பகுதி மக்களின் குரலை அரசுக்குக் கொண்டு செல்ல, சுற்றுவட்டாரக் கிராமங்களில் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்போம்.
இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, தங்களது நேரத்தையும் உழைப்பையும் சமூகத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும். நமது @WTLFoundation அமைப்பின் நோக்கம், ஒவ்வொரு தன்னார்வலரையும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தலைவர்களாக உருவாக்குவதுதான்.
தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். படித்த இளைஞர்கள், விவசாயப் பெருமக்கள், சமூக அக்கறை கொண்ட நல்லவர்கள், குறிப்பாகப் பெண்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் முன்வந்து போட்டியிட்டு, தங்கள் ஊரின் வளர்ச்சிக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், கடந்த பத்தாண்டுகளாகத் தண்ணீரின்றி, ஆக்கிரமிப்புகளாலும் கழிவுகளாலும் சீரழிந்து கிடந்த நங்காஞ்சி (நல்காசி) ஆற்றை, நமது @WTLFoundation தன்னார்வலர்கள் கடந்த 45 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளின் முதற்கட்டப் பணிகளை நிறைவு செய்து, இன்று நங்காஞ்சி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வருவதற்கான பாதையை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
ஒரு குழுவாக இணைந்து, உறுதியுடன் செயல்பட்டால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்பதற்கு நங்காஞ்சி ஆற்றின் மறுசீரமைப்பே சிறந்த எடுத்துக்காட்டு.
இன்று மாலை, கரூர் மாவட்டத்தில், 'தாதம்பாளையம் ஏரியை மீட்போம், கரூரைக் காப்போம்' விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நீர்நிலைகளைப் பாதுகாப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மழைநீரைச் சேமிப்பது ஆகியவை எதிர்காலத் தலைமுறைக்கான நமது கடமைகள். தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுத்து, நீர்வளத்தை மேம்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கம்.
மேலும், வனத்துறையின் கைவசம் உள்ள எரியின் பகுதிகளை பொதுப்பணித்துறை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது பிரதான கோரிக்கையாகும்.
நமது @WTLFoundation சார்பில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். மக்கள் பங்கேற்புடன்
நீர்நிலைகளை மீட்டெடுத்து,
நீர்வளத்தைப்
பெருக்கி, வளமான தமிழகத்தை உருவாக்குவோம். (1/2)
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதி, கோட்டூர் பகுதியில், நமது @WTLFoundation தன்னார்வலர்கள் சார்பில் இன்று நடைபெற்ற 2,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதும் நம் ஒவ்வொருவரின் கடமை. மரக்கன்றுகளை நடுவதோடு நின்றுவிடாமல், அவற்றைப் பராமரித்து வளர்த்து, அடுத்த தலைமுறைக்கு வளமான இயற்கைச் சூழலை விட்டுச் செல்வோம். பசுமையான தமிழகம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இன்று, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், நமது @WTLFoundation சார்பில் நடைபெறும், நல்காசி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகளைப் பார்வையிட்டதுடன், ஆற்றுப்படுகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். நமது நீர்வளத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாத்து, வரும் தலைமுறைக்கு பசுமையான சூழலை விட்டுச் செல்வோம். மக்கள் பங்கேற்புடன் இயற்கையைக் காக்கும் நற்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமையல் கலைஞர் திரு. செஃப் தாமு அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது தனித்துவமான சமையல் திறமையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன், இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்.
திரு. செஃப் தாமு அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Heartiest congratulations to Team India on a historic milestone at the Asian Para Games, achieving our best-ever tally of 114 medals and a stellar 4th-place finish!
Immensely proud of our team members from Tamil Nadu as our state's athletes made the nation shine on the grand stage, bringing home an incredible haul of Gold, Silver, and Bronze medals across Badminton, Table Tennis, Powerlifting, and Long Jump.
தேச விடுதலைக்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி, வீரத்துடன் போராடிய மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் வெளியிட்ட ஜம்புத்தீவு பிரகடனம், அவர்களின் வீரத்திற்கும் விடுதலை வேட்கைக்கும் சான்றாகத் திகழ்கிறது. சிவகங்கைச் சீமையை மீட்டு, வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தியதில் அவர்களின் பங்கு மகத்தானது.
காளையார் கோவில், மானாமதுரை, திருமோகூர், குன்றக்குடி உள்ளிட்ட திருத்தலங்களின் ஆன்மீகப் பணிகளிலும் சிறந்து விளங்கிய மாவீரர்கள் மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
“அறம் செய்ய விரும்பு” என்பதே நமது @WTLFoundation அமைப்பின் தாரக மந்திரம்.
அரசியல் பின்புலமில்லாத பெண்களையும் இளைஞர்களையும் தலைமைத்துவத்திற்குக் கொண்டுவருவதுமே நமது நோக்கம்.
தாரகை திட்டத்தின் கீழ், ஏற்கனவே இணைந்துள்ள 8 மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன், அடுத்த 6 மாதங்களில் மேலும் 25 மகளிர் குழுக்களை உருவாக்கி, பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளித்து, அவர்களைச் சுயசார்புடையவர்களாகவும் தலைவர்களாகவும் உருவாக்குவோம்.
நாட்டின் பல மாநிலங்களில் வாழ்ந்து, பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் எனக்குத் தெரியும். அதனால், எனக்கு யாரும் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்.
தமிழ்நாடும் வளர வேண்டும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பு, நாட்டின் இறையாண்மைக்குப் பாதுகாப்பு, இதுவே நமது நோக்கம்.
#Jailer2 is 🔥🔥🔥
A true showcase of @rajinikanth sir’s star power, swag & aura! A Commercial Entertainer that keeps the adrenaline pumping!
Brother... @anirudhofficial KILLED IT! All the artists, technicians & the producer have poured their hearts into this film. The Showman @Nelsondilpkumar garu delivers the coolest hit with a BANG!
చొక్కా నలగకుండా 500 CR+ కొట్టడం ఒక్క రజినీ గారికే సాధ్యం! 🖤
Congratulations to the entire team! @sunpictures
இன்று கிருஷ்ணகிரியில், நமது @WTLFoundation சார்பில் நடைபெற்ற பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
பெண்களின் தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் நிறைந்த நிகழ்வாக இந்த மாநாடு அமைந்தது.
பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ‘தாரகை’ பெண்கள் அமைப்பைத் தொடங்கியதுடன், TPSOH நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) மேற்கொள்ளப்பட்டது, இந்த மாநாட்டின் முக்கிய மைல்கற்களாக அமைந்தன.
சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கவும், எதிர்காலத் தலைமுறையை வழிநடத்தவும் துடிப்புடன் செயல்படும் சகோதரிகளைச் சந்தித்தது பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
பெண்கள் வளர்ந்தால் சமூகம் வளரும். நமது சகோதரிகளின் ஆற்றலை சமூக மாற்றத்திற்கான சக்தியாக மாற்றும் நமது பயணம் தொடரட்டும். (1/3)
நாட்டிற்கு நல்லது செய்யும் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில், தவறு என்று தோன்றுவதைத் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டோம்.
CJP கட்சியை நாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அவர்களின் நோக்கம் வேறு. நமது நோக்கம் வேறு. ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் போராடும் உரிமை உண்டு. ஆனால், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையைச் சீர்குலைப்பதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், கைது நடவடிக்கைகள் சட்டப்படியும் முறையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து.