ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடரும் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகார வெறி..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள முகுந்தராயபுரம் ஊராட்சியில் திமுகவின் அக்ராவரம் A.K.முருகன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் , இவருக்கும் அதே ஊராட்சியில் லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்த பொது மக்களுக்கும் காஞ்சனகிரி கோயில் நிர்வாகம் தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது இது தொடர்பாக லாலாபேட்டை சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே இவருக்கு எதிராக பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்
இந்த நிலையில் திமுகவின் முன்னாள் தலைவரும் , முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு லாலாபேட்டை கிராமத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சிக்காக அக்ராவரம் A.K.முருகன் சென்றுள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை அங்கு கடுமையாக தாக்கிவிட்டு தனது கிராமமான அக்ரவாரத்திற்கு திரும்பி உள்ளார் , இவர்களின் தாக்குதலில் பாதிப்பு அடைந்த பொதுமக்கள் அரசு இலவச ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த பொழுது இவரின் சொந்த ஊரான அக்ராவரம் கிராமத்தில் வழிமறித்து ஆம்புலன்ஸில் இருந்த பொதுமக்கள் மீது தனது ஆதரவாளர்கள் மற்றும் மகன்கள் உடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார்கள்..