முதலிலேயே சொல்ல வேண்டியது தானே ராஜினாமா பண்ண முடியாது என்று..!
ஷோபாவை வாங்கிய பிறகுதான் சொல்வீர்களா??😜
கொடுத்த ஷோபாவை திருப்பிக் கேட்டு, நெட்டகாலான் ஓலை அனுப்பியுள்ளான்.. என்ன செய்வேன்..? 🤯
🤣🤣😂😂🔥🔥
c2c - ஒரு முக நூல் பதிவிலிருந்து..
மகன் அயர்லாந்தில் இருந்து வந்திருக்கிறான் . அவனது மனைவி, மகளுடன் தலைவரை பார்க்க சென்றோம். தலைவர் மருமகளிடம் குழந்தைக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டார். அவள் தெரியும் என்றதும் அவளுக்கு கைகொடுத்து உன் பெயர் என்ன என்று கேட்டார், ஸ்மையா என்றாள்.
பிள்ளைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மருமகளிடம் எந்த ஊர் என்றார்.
அவள் பதில் சொன்னாள்.
மனம் நிறைவான சந்திப்பு.
த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, காரியாபட்டியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, ஜனநாயக ரீதியாகப் போராடும் எதிர்க்கட்சியினரை ஒடுக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
காரியாபட்டியில் மாணவரணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள தம்பிமார்களை நேரில் சந்தித்தேன். காரியாபட்டி மட்டுமின்றி தமிழ்நாடெங்கும் இதே கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்திக் கைது செய்யப்பட்ட கழகத்தினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும், அமைச்சர் திரு. சரத்குமார் அவர்கள் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதற்கு எதிராகப் போராடிய திமுகவினரைக் கைது செய்துள்ளது தவெக அரசு.
திமுகவினரை உடனடியாக விடுதலை செய்து, அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#DismissPowderMinister
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.