June 14 - Sunday
உலக குருதி கொடையாளர்கள் தினம்.
ஆண்டிற்கு ஒரு முறையாவது இரத்த தானம் செய்வோம்.
நாம் அளிக்கும் 350 ML மூன்று உயிரை காக்கும் வாய்ப்பு உள்ளது.
#Blood#BloodDonation#BloodDonorsDay
Congratulations to Shri @narendramodi ji on becoming India’s longest continuously serving elected Prime Minister. In a diverse democracy like ours, sustained public trust is a significant feat. May our collective focus remain on India’s progress and the welfare of our fellow citizens.
Target 2029 & 2031 @maiamofficial.
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப் போட்ட எவனுமில்லை🔥.
கண்டா வர சொல்லுங்க
கர்ணன @ikamalhaasan கையோட கூட்டி வாருங்க🥺.
#TVK எனும் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே நம்பிக்கையை இழந்து வருகிறது.
வெறும் சினிமா கவர்ச்சிக்காக வாக்களித்த பலர் இன்று அந்த முடிவை நினைத்து வருந்தத் தொடங்கியுள்ளனர்.
அரசியல் அனுபவமும்,நிர்வாக அறிவும் இல்லாத ஒருவரை முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க நினைத்தது தமிழ்நாட்டிற்கும்,அடுத்த தலைமுறைக்கும் தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
அதேபோல் #AIADMK எனும் கட்சி இன்று தனது அடையாளத்தையும், வலிமையையும் இழந்து நிற்கிறது.ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் சக்தியாக இருந்த அந்தக் கட்சிக்கு மக்கள் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
#DMK குறித்து சொல்ல வேண்டுமெனில் மக்கள் மனதில் அதன் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
எதிர்காலத்தில் அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு மாறினாலும்,மக்கள் நலனுக்காக அல்லாமல் அதிகாரத்திற்காக எடுக்கப்படும் எந்த முடிவும் அந்தக் கட்சியின் வீழ்ச்சியை மேலும் வேகப்படுத்தும்.
மற்ற பல கட்சிகளைப் பற்றி பேசிக் காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.அவர்களால் தமிழ்நாட்டிற்கும் பயன் இல்லை,
அவர்களுக்கே நிலையான அரசியல் எதிர்காலம் இல்லை.
மக்களின் கடைசி நம்பிக்கை நீங்கள் தான் ஆண்டவரே.
2018 முதல் 2021 வரை நீங்கள் காட்டிய அதே வேகத்துடனும்,அதே நேர்மையுடனும் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று தமிழகம் காத்திருக்கிறது
தலைவா.
எந்த ஒரு சுயநலத்திற்காகவும் அல்லாமல்,பொதுநலத்திற்காக மட்டுமே கட்சி நடத்தி வரும் ஒரே தலைவர் நீங்கள் தான் என்ற நம்பிக்கை இன்னும் மக்களிடம் இருக்கிறது.
உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்,வெற்றியோ,
தோல்வியோ களத்தில் உங்களுடன் தனித்து நின்று போராடத் தயாராக இருக்கிறோம்.
பதவி எங்கள் இலக்கு அல்ல,
மாற்றம் தான் எங்கள் இலக்கு.
அந்த மாற்றத்தை கொண்டு வர உங்களை மீண்டும் களத்தில் காண தமிழகம் காத்திருக்கிறது🔥✊🏻.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#ComeBackAndavar #TNPolitics
விட்டுட்டு போக மனசு வரலயா!
கண்ட கண்ட ஆளுங்க எல்லாம் கட்சி ஆரம்பிக்குறாங்க, முதல்வர் ஆகுறாங்க..நீ இருக்க வேண்டிய இடம் யா அது..இந்த தற்குறி தமிழக மக்களை வெச்சுக்கிட்டு என்ன பண்றது?!!
இவருக்கு இருக்குற அறிவு எவனுக்கும் இந்த தமிழநாட்டுல இல்ல
#KamalHaasan
@CentristPulse இந்த நாட்டிற்கு நல்ல அரசியல் தேவையில்லை நம் மக்கள் அதற்கு எல்லாம் செட் ஆகமாட்டாங்க இங்கே மீடியா கிட்ட பேசக்கூடாது கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசவேண்டும் இதை கமல் செய்வாரா செஞ்சா அவர் தான் முதலமைச்சர்
தவெக ஆட்சியில் தொடரும் கொலைகள் – கடும் கண்டனம்
ஒரு நாகரிக சமூகத்தின் அடிப்படை அடையாளம் சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பாகும். ஆனால் தவெக ஆட்சியில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும்
ஏற்படுத்தியுள்ளன.
சமீப காலங்களில் அரசியல், சாதி, குடும்பத் தகராறு மற்றும் சமூக விரோதச் செயல்கள் காரணமாக பல கொலைகள் அரங்கேறி வருகின்றன. குற்றவாளிகள் சட்டத்தின் மீதான பயமின்றி செயல்படுவது, சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் பலவீனம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
மக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஒரு அரசின் முதன்மை கடமை மக்களின் உயிரையும் உரிமைகளையும் பாதுகாப்பதாகும். ஆனால் தொடர்ந்து நடைபெறும் கொலைகள், குற்றங்களைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று மக்கள் அச்சம் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
குற்றவாளிகள் மீது விரைவான விசாரணை நடத்தி, சரியாக வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோல் காவல்துறைக்கு தேவையான அதிகாரங்களும் வளங்களும் வழங்கப்பட வேண்டும்.
கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதியும் வழங்கப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
எனவே, தவெக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதே நல்லாட்சியின் அடையாளமாகும்.
மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் அடிப்படை பொறுப்பு. ஆனால், முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரிலேயே மக்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது.
ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கு ஆறு மாத காலம் இருக்கட்டும்.ஆனால் மக்கள் உயிரை காக்க நடவடிக்கை எடுக்க கால அவகாசம் பார்க்கும் தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#LawandOrder
#TVK
@Preethistarr இந்த மேயர் நல்லா சம்பாதித்து இருக்கும் அந்த திமிரும் இருக்கும் இனி இவங்களும் சம்பாதித்தா இவங்களுக்கும அந்த திமிர் வருமே எல்லாம் காசு தான் காரணம் அதை புடுங்கினா எல்லாம் சரியாகிவிடும்