மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை (MGNREGA) மாற்றி VB- G RAM G என ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தில்:
- வேலை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தும் சட்டங்கள் இல்லை.
- 100 நாள் முதல் 125 நாட்கள் வரை வேலை கிடைக்கும் என எழுத்தில் இருந்தாலும், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் அதை வழங்க இயலாத நிலையே உள்ளதென சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்
- இதற்கான நிதியை 40% மாநில அரசு வழங்க வேண்டுமென்ற விதி, மாநில அரசுகளின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்
- வருகைப் பதிவேடு டிஜிட்டல் முறையில் செயல்படுத்தும் முறையிலேயே ஏகப்பட்ட சிக்கல்களை வேலை செய்பவர்கள் சந்திக்கும் நிலையில், மோசடிகளை களைய AI தொழில்நுட்பத்தை கொண்டு வரப்போகிறோம் என புதிய திட்ட வரைவில் கூறியிருப்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதை முன்னிட்டே, ஜூலை 1 முதல், நாடு முழுக்க கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த, உழைப்பாளர் சார் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
அடித்தட்டு மக்களின் நன்மைக்காக கொண்டுவரப்பட்ட
MGNREGA திட்டத்தை, நீர்த்துபோக வைக்கும் வேலையைத் தான் ஒன்றிய அரசு செய்கிறது!
https://t.co/m97NwfYAIU
மேற்கு வங்கத்தில் ஜூன் 21 அன்று, மோடி பங்குபெறும் சர்வதேச யோகா தின நிகழ்விற்காக கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதி 7 நாட்களுக்கு மக்கள் பயன்பாட்டிலிருந்து மூடப்படுவதாக அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரெட் ரோடு பகுதியில் முஸ்லிம்கள் பெருநாள் தொழுகை நடத்த ஒரு மணி நேரம் கூட அனுமதி வழங்கப்படவில்லை! ஆனால், யோகாவிற்காக ஒரு வாரம் சாலையை மூட பாஜக அரசு அனுமதிக்கிறது என TMC கட்சியை சேர்ந்த MP மஹுவா மோயித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்!
தங்களின் அரசியல் சுய இலாபத்திற்காக எவ்வித பாரபட்சமான செயலையும் பாஜக அரசு செய்யும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது!
https://t.co/xJUDoO6Cep
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஹூக்லி மாவட்டத்தை சேர்ந்த 71 வயதான ஷேக் ஷா ஆலம் என்ற இஸ்லாமியரை, ஜூன் 15 அன்று அவரது வீட்டிற்கே சென்று அடித்து கொலை செய்துள்ளனர்.
ஷேக் ஷா ஆலம் TMC கட்சியின் ஆதரவாளர் என்ற விரோதத்தில்,
பாஜக ஆதரவாளர்கள் அவரை கொலை செய்துள்ளனர் என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அவர் TMC கட்சியில் இல்லை என்றும் குடும்பத்தினர் கூறுகின்றனர். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலே முஸ்லிம்களுக்கு எதிரான சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளன.
குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!
https://t.co/rLsV0BpQC5
#WATCH | கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூகுள் CEO சுந்தர் பிச்சை உரையாற்ற வந்தபோது வெளிநடப்பு செய்த மாணவர்கள் 'Free Palestine' என முழக்கமிட்டனர்.
2021-ல் இஸ்ரேல் அரசாங்கம் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு கூட்டாக 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த போரட்டத்தை மாணவர்கள் நடத்தினர்.
பாலஸ்தினம் இனஅழிப்பு அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே!
#SunNews | #SundarPichai | #FreePalestine
https://t.co/RXDOaqeTnE
#NewsUpdate | "பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் 10 முறை மன்னிப்புக் கடிதம் எழுதினார்.."
-கொள்ளுப்பேரன் சத்யாகி சாவர்க்கர் வாக்குமூலம்
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் யார், ஆங்கிலேயனுக்கு அடிமை சாசனம் செய்தது யார் என்ற வரலாற்றை திரித்தாலும், உண்மையை மறைக்க முடியுமோ?
#SunNews | #Savarkar
ம.பி.ல் ஆகஸ்ட் 3, 2022ல் மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற நிசீர் அஹமத் மற்றும் இருவரை ஹிந்துத்துவ வெறியர்கள் தாக்கினர். நசீர் அஹ்மத் இதில் கொல்லப்பட்டார்.
இது குறித்த வழக்கு ம.பி.ல் நர்மதாபுரம் மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 14 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது!
மோடி ஆட்சியில் ஏராளமான முஸ்லிம்கள் ஹிந்துத்துவ வெறியர்களால் கொல்லப்பட்ட நிலையில், இவ்வழக்கில் வழங்கப்பட்டுள்ள நீதி இஸ்லாமிய சமூகத்திற்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஊட்டுகிறது!
குற்றவாளிகளின் பெயர் கீழ்வருமாறு:
Deepak(38), Ajju (36), Prakash Kaushal (33), Chetan Maratha (23), Pawan Bathav (31), Amar (38), Kanhaiya Bathav (32), Devendra (22), Sandeep (26), Anuj (24), Sanju (39), Akash (31), Gaurav Yadav (24) மற்றும் Akash Sarathe (33).
https://t.co/UpMFOXsMmG
Charged with gathering vegetables and wildflowers
A moment of the Israeli army terrorizing and abducting Palestinian children an unknown location
Without platforms like X, these scenes would not have reached the world
Exposing is a duty for every free person around the world
மேற்குவங்க மாநிலத்தின் ரஜர்ஹாட் நியூ டவுன் பகுதியிலுள்ள 164வது பூத்தில் 88% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அந்த பூத்தில் பதிவான 656 வாக்குகளில், பாஜக 637 வாக்குகளை பெற்றுள்ளது. CPI(M)-ISF கூட்டணி 1 ஓட்டும், TMC கட்சி 5 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளன.
88% முஸ்லிம்கள் வசிக்கும் பூத்தில், 97% வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளார்கள் என்பது நடக்காத செயல். மக்களின் வாக்குகளை ஏமாற்றி பாஜக வென்றுள்ளது!
https://t.co/7jb4xVSDW8
``உண்மையான நேர்மைன்னா
என்னனு தெரியுமா..!’’
"என் வெளிநாட்டு Client-ஐ சந்திக்கும் அவசரத்தில், ₹156 ஆட்டோ கட்டணத்திற்கு பதில் ₹15,682 அனுப்பிவிட்டேன். அது எனக்கே தெரியாது. இறுதியில் மீட்டிங் சொதப்பிய விரக்தியில் கீழே வந்தபோது, ஆட்டோ டிரைவர் அல்தாப் எனக்காக காத்திருந்து மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்தார். முதல் போணி எனக்கூறி அவரின் பணமான ரூ.156-ஐ கூட வாங்க மறுத்தார்
ஒரு வாரம் கழித்து அந்த பிசினஸ் டீல் ஓகே ஆன மகிழ்ச்சியான தருணத்திலும் எனக்கு அல்தாஃபின் முகம்தான் நினைவுக்கு வந்தது. உடனே அவருக்கு ₹500 அனுப்பி நன்றிக்கடன் செலுத்தினேன். நம்மை யாரும் கவனிக்காத நேரத்திலும் நேர்மையாக இருப்பதுதான் உண்மையான நேர்மை"
- மும்பையை சேர்ந்த `ஹிங்லீஸ்’ நிறுவனத்தின் CEO சுபம் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு வைரல்
உங்கள் செல்வங்களை, உங்களுக்கிடையே தவறான முறையில் உண்ணாதீர்கள்!
திருக்குர்ஆன் 2:188
ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2072
#CEO #Mumbaibased #Hingleys #autofare #thanthitv
கொடூர குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கூட என்கவுண்டர் எனும் பெயரில் காவல்துறை சுட்டுக் கொல்லும் போது, வெளிப்படையாக வீடியோ எடுத்து பரப்புவதில்லை.
மோடி ஆட்சியில் காவல்துறையை காட்டிலும் கட்டற்ற சுதந்திரம் ஹிந்துத்துவ வெறியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. Love Jihad எனும் பெயரில் முஸ்லிம் இளைஞரை மிக கொடூரமாக தாக்கி அதை வீடியோ எடுத்தும் பரப்பும் மனநோயாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
https://t.co/3UoBxR778i
பக்ரீத் பண்டிகையை ஒட்டி, மே 11 - 29, 2026 வரை முஸ்லிம்களுக்கு எதிராக 46 வன்முறை சம்பவங்களை சங்பரிவார கூட்டம் நடத்தியுள்ளதாக, The Association for Protection of Civil Rights (APCR) அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் இசைவோடு சங்பரிவார கூட்டம் ஆடும் மதவெறியாட்டத்திற்கு, அரசுத்துறைகளும் அமைதி காத்து ஆதரவாக நிற்பது கண்டிக்கத்தக்கது.
https://t.co/VwgRzY8kmF
#BREAKING | ஈரான் உடனான போரை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
ட்ரம்பின் சொந்த கட்சி உறுப்பினர்கள் 4 பேர் இதற்கு ஆதரவாக வாக்களிப்பு.
மக்களின் மனநிலைக்கு எதிராகச் செயல்படும் ஆட்சியாளர்கள், வரலாறு நெடுகிலும் இதுபோன்ற சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைக் காண முடிகிறது.
#SunNews | #DonaldTrump | #USHouse | #Iran
தென்னிந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடத்தில், $15 பில்லியன் மதிப்பில் Data Centerஐ, Google நிறுவனம் கொண்டுவர உள்ளது.
தங்களது நிலத்தை விற்க சொல்லி நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தலித் மக்கள் குமுறுகின்றனர். இந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் குறைவான அளவே நிலம் வைத்துள்ள நிலையில் அதையும் பிடுங்குவதற்கு அரசுகள் அனுமதி வழங்குவது மனிதநேயமற்ற செயலாகும்.
https://t.co/rngjJ0oGt7
அமெரிக்கா, ஈரான் போர் துவங்கப்பட்ட நாளான மார்ச் 1, 2026 முதல் மே 12 வரை, 12 மாநிலங்களில் 53 ஊர்களுக்கு சென்று 81 கூட்டங்களில் மோடி பங்கெடுத்துள்ளார்!
இவற்றில் வெறும் 13 கூட்டங்கள் மட்டுமே அரசு சார்ந்த நிகழ்வாகும். மற்ற அனைத்தும் கட்சி சார்ந்த கூட்டங்கள். அதிலும் பெருபாலானாவை 5 மாநில தேர்தல் பரப்புரைக்காக நடத்தப்பட்டவை தான்.
எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி மக்களுக்கு உரையாற்றியவர், பல இலட்சங்களை அரசியல் நிகழ்வுகளுக்காக செலவழித்துள்ளது தற்போது அம்பலமாக்கியுள்ளது. மோடி நாட்டு நலனில் துளியும் அக்கறை இல்லாதவர் என்பதையே இது வெளிக்காட்டுகிறது!
https://t.co/coNkgwpc36
⚠️Sensitive Content ⚠️
“He had just come back from school, I swear…”
🚨 BREAKING: A father is devastated after his son was killed by Israeli forces while returning home from school in Jabalia camp, northern Gaza Strip.
⚠️ Disturbing footage: The moment Mohammad Abu Jiab arrived at the hospital after being shot and killed off the coast of Gaza while trying to secure food for his family.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 20 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்துவ மதத்தை தழுவினர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக RSS மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள், அக்குடும்பத்தினருக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.
தண்ணீர் உரிமை மறுப்பு, அரசு திட்டத்தின் மூலம் வேலை பெறுவதற்கான அனுமதி மறுப்பு, இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு, அவர்களின் விவசாய பயிர்களை நாசப்படுத்துவது, கட்டாயமாக ஹிந்து மதத்திற்கு மாறச் சொல்லி அடித்து துன்புறுத்துவது என ஹிந்துத்துவ குண்டர்கள் பல கொடுமைகளை செய்துள்ளனர்.
இவர்கள் மீது வழக்கு போடுவதற்கே பெரும் சிரமத்தை பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்துள்ளனர். வழக்கு போடப்பட்டவர்களும் பிணையில் வெளியில் வந்துள்ளனர். ஹிந்துத்துவ குண்டர்களின் நெருக்கடியால் 10 குடும்பத்தார் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளனர். பலர் கிராமத்தை விட்டே வெளியேறியுள்ளனர்.
ஹிந்துத்துவ குண்டர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!
https://t.co/pHwtabDfLl
இத்தனை இழப்புகளை சந்தித்த போதும், ஹஜ் பெருநாளை கொண்டாட காஸா மக்கள் காத்துக் கொண்டிருக்கும் வேலையில், அப்பாவி பிஞ்சுகளின் மீது குண்டுகளை வீசி இஸ்ரேலிய தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.
'ஹப்புனல்லாஹ் வ நிஃமல் வக்கீல்' என்பதை வாயால் மட்டும் மொழியாமல், வாழ்க்கையாகவே வாழும் சிறந்த மனிதர்கள் பாலஸ்தீனியர்கள்.
டெல்லியில் உள்ள பிதம்புரா எனும் பகுதியில், பாஜகவின் MLA கர்னாயில் சிங் தலைமையில் ஹிந்துத்துவ குண்டர்கள் திரண்டு சென்று முஸ்லிம்கள் பயன்படுத்தும் மதரசாவின் சுவரை இடித்துள்ளனர்.
அந்த இடம் Delhi Development Authorityக்கு (DDA) சொந்தமானது என கூறி இடித்துள்ளனர். காவல்துறை நின்று அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறது! மதரசா சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்பதை பாஜகவின் MLAவே முடிவெடுப்பார் என்றால் நீதிமன்றம் எதற்கு?
இதில் ஈடுட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை பாய வேண்டும். இடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு, மீண்டும் மதரசாவின் சுவரை அரசே கட்டித்தர, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
https://t.co/ApaxedaHD0