வீரத்தையும், மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு வீரமரபில் வந்த ஒப்பற்ற வீரன்!
ஆயுதமேந்தி, காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திட்டபோதும் கண்ணியமும், ஒழுக்கமும் துளியும் பிறழாது வாழ்ந்த ஒழுக்கச்சீலன்! வாசாத்தி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அறச்சீற்றம் கொண்டு நீதிகேட்ட எல்லைச்சாமி!
உயிரைவிட உரிமை உன்னதமானது எனும் உயரியக் கோட்பாட்டுக்கேற்ப, காவிரி நதிநீர் உரிமைக்காகப் போர்க்குரல் எழுப்பிய போராளி! கர்நாடகாவில் தமிழின மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடும் இனக்கலவரத்தை எதிர்த்து நின்ற மானத்தமிழன்!
கர்நாடகாவில் தமிழ் மறையோன் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் குரலெழுப்பிய பெருமகன்!
அரச வன்முறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஒருநாளும் அஞ்சாது, வீரத்தின் உருவாய் காட்டுக்குள் நின்ற மாவீரன்!
தமிழர் நிலத்தையும், வனத்தையும் ஐயனாராய் காத்து நின்ற எல்லைக்காவலன் எங்கள் ஐயா வீரப்பனார் அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
விஜயின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களில் தவறான தகவல்களை அளித்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் பொழுது நேற்று நிதிபதி வி.லட்சுமிநாராயணன் "கோடீஸ்வரர்களிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது என கேட்டால் அவருக்கு எப்படி தெரியும்? ஆடிட்டர் செய்த தவறுக்காக விஜய் எப்படி பொறுப்பாவர்?" என்று கேட்டிருக்கிறார்.
நமது கேள்வி என்னவென்றால்,
கோடீஸ்வரர் ஆகிவிட்டால் தான் வாங்கிய சொத்து விவரங்கள் அவருக்கு மறந்துவிடுமா? 600 கோடியில் 30 கோடி மறைப்பது குற்றமில்லை என்றால் எத்தனை கோடி மறைப்பது குற்றம்?
வேட்புமனு உறுதிமொழி பத்திரத்தில் எல்லா விவரங்களும் உண்மையானது மற்றும் சரியானது என்றும், எந்த பகுதியும் பொய்யானவை அல்ல என உறுதி அளித்து கையெழுத்த்திட்டிருக்கிறார் விஜய். அப்படியென்றால் இருக்கும் விவரங்களுக்கு கையெழுத்திட்டவர் தானே பொறுப்பு? நீங்கள் எப்படி அவர் பொறுப்பில்லை என்கிறீர்கள்?
கோடீஸ்வரர்களின் சொத்துக்கணக்கை அவரின் ஆடிட்டர் வருமானவரி தாக்கலின் பொழுது தவறாக சமர்பித்தாலும் இதே போல் அந்த கோடீஸ்வரர் பொறுப்பாக மாட்டாரா? அதற்கு எந்த தண்டனையும் இல்லையா?
என்னங்க நியாயமாரே!!!!
If I’m being honest,
this is what I experienced back in 2014. @Seeman4TN 😏was the man who gave me a vision that changed the way
I looked at it.✨
How many of you share the same perspective?🙇🏽♂️🙇🏽♂️🙇🏽♂️
#NTK4TN#Seemanism
சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பிவந்தது.
தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது.
வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்?
எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?
படிவம் 6 தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிக்காகப் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, செப்டம்பர் 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அக்டோபர் 5 அன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றம் வழங்காத ஒப்புதலை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது ஏன்? உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கொடுத்தது யார்?
எந்த அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பும், விளக்கமளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதா? முறையீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன? என்பதற்குத் தெளிவான பதில் வேண்டும். எதிர்ப்புகள் பதிவான கோப்புகள் எவை, அவற்றுக்கான பதில்கள், ஒப்புதல் வழங்கப்பட்ட பதிவுகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இயல்பானவைதான், ஆனால் முடிவுகள் ஒருமித்த முறையில் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களில் எனில், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் விதிகளின்படியே அம்முடிவு தோற்றுப்போன முடிவாகும். அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்களும் செல்லத்தக்கவை அல்ல!
இது ஒரு கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்வியல்ல; மக்களுக்காக மக்களே வழங்கிய மக்களின் தீர்ப்பை நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டிய தேர்தல் முறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி. வாக்களித்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வருங்காலத் தலைமுறையிடம் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் கேள்விகளுக்கு வெறும் அமைதி மட்டுமே பதிலாக இருக்க முடியாது.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, பெயர் நீக்கங்கள், தரவுகள் கையாளப்பட்ட விதம், ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை ஆகியவற்றை நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் வாயிலாக ரத்து செய்வதுடன், சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதிசெய்தப் பின்னர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நீ ஒரு ஆளு மயிருனு உன்னை off பண்ண முயற்சி பண்றாங்களாம், கடந்த காலத்தில் சீமானை இழிவாக பேசி பொண்டாட்டி புள்ளைக்கு சோறு போட்ட திராவிட யூடியூப் நாய்கள் போல நீயும் சீமானை பேசி வயிறு வளர்க்கும் ஒரு எச்சை! அவ்வளவு தான் உன் உயரம்!!
தோழர் விஷ்ணுவின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்!
இரண்டு செய்தி!
1)அந்த நாய் கேட்பது கேள்வி அல்ல அது திராவிட நாய்கள் வாந்தி எடுத்த அவதூறுகள்!
2)இத்தனை பிரச்சினைகள், குளறுபடிகள் உள்ள ஒரு கட்சியில் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வரைக்கும் மயிருக்கா இருந்தான்?
இதற்கு பெயர்தான் அரசியல்.
திரையரங்குகளில் டிக்கெட் எடுக்க ஓடுவது போல அடித்து கொண்டு ஓடுவது போல அல்ல அது.
அல்லது பக்கம் பக்கமாக எழுதி கொடுத்ததை வசனம் என்ற பெயரில் வாந்தி எடுப்பதும் அல்ல அது.
உதாரணமாக நிமிர்ந்து நிற்பது .
நீதிமன்றமே பாராட்டுகிற நாம் தமிழர் !
திமுக மீது குற்றச்சாட்டு வைத்தால் நாம் தமிழர் கட்சி பதில் சொல்வதாகவும், நான் வரிந்துகட்டிக் கொண்டு ட்வீட் போடுவதாகவும் எனது கருத்துகளுக்கு உள்நோக்கம் கற்பித்து, திரித்து அவதூறுப் பரப்புகிறார் அன்பிற்கினிய அண்ணன் @Ahmedshabbir20 . ரூட் மாபியா செய்யும் அதே கருத்துருவாக்கத்தை இவரும் செய்கிறார்.
சரி! அதனைக் குற்றச்சாட்டாகவே அவர் வைக்கட்டும். அதுகுறித்து சனநாயகப் பூர்வமாக விவாதம் செய்யவும், விளக்கம் அளிக்கவும் அணியமாக இருக்கிறேன்.
அண்ணன் சபீருடைய The News Minute Tamil ஊடகத்தில் விவாதமோ, நேர்காணலோ எதுவாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும். சபீர் மூத்தப் பத்திரிக்கையாளராகக் கேள்விகளைத் தொடுத்தாலும் சரி! தவெகவின் ஆதரவாளராக விவாதம் செய்தாலும் சரி! அவரோடு தர்க்கம் செய்யத் தயாராக இருக்கிறேன்?
எப்போது, எங்கு வர வேண்டுமென சபீர் அண்ணன்?
எந்த விமர்சனங்களையும் வாசித்திராத ஒரு திரைப்படத்தைக் காண்பது போல ஒரு நிமிடம் சிந்தியுங்கள். சீமான் இதுவரை எந்த பதவியை அலங்கரித்தார்? எத்தனை கேடு திட்டங்களை மக்களுக்கு பரிசளித்தார்? எதைச் சொல்லி ஏமாற்றி பதவியில் அமர்ந்தார்?
ஏன் அவர் மீது இத்தனை அவச்சொற்கள்? விமர்சனங்கள்?
உண்மையில் சீமான் பரிதாபத்திற்குரியவர்.
நாம் தமிழரின் வாக்குகள் பாதியாகிப் போன அன்று இரவு நான் உண்ணவே இல்லை. உண்மையாகவே மிகையாக வருந்தினேன். அந்த வலியிலிருந்து தேறி வரவே சில நாட்கள் பிடித்தது. அண்மையில் ஒரு நேர்காணலில், "உங்களை சமீபத்தில் அதிகம் பாதித்தது எது?" என்கிற கேள்விக்கு, தேர்தல் தோல்வியின் போது தன் அன்னை தன்னை அணைத்தபடி அழுததை "சரி விடு பிறகு செயிச்சுக்கலாம்".என அவர் சொன்ன போது லேசாக தழுதழுத்தார். உண்மையாகவே உடைந்து போனேன் நான்.
சீமான் என் நேசத்திற்குரியவர், அவர் அரசியல் வெற்றியால் என் கனவு பலித்துவிடும் என்பதெல்லாம் துளி காரணமும் இல்லை. அவர் பேசுகிற அரசியல் தமிழ் மண்ணுக்கு மிக அவசியமானது உழவுக்கு நீர் போல. அரசியலை கவனிக்கும் மக்கள் பெருக வேண்டும். அந்த அரசியல் தமிழ் மண்ணில் வெயில் கால வியர்வை போல எல்லா மக்களிடமும் வியாபிக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
மாலை நேரம் நாங்கள் மூவர் பேசிக்கொண்டிருந்த போது என் தம்பி என் மாமனை நோக்கி கேட்டான், "நீ யாருக்கு ஓட்டு போட்டா?" என்று.
"இத்த இவன் இன்பா சொல்லிதான் சீமானுக்கு ஓட்டு போட்டேன் என் ஓட்டு வேஸ்ட்டா போச்சு" என்றான். நான் சொன்னேன், "வேஸ்ட்டுனு எப்டி மாமேன் சொல்லுற நீ? நீ கொத்தனார், நான் கொத்தனார் மகன். உனக்கும் எனக்கும் பெருங்கனவாக ஏங்குறது சில பேர் பிறக்கும் போதே அவங்கிட்ட இருக்கு. அவங்க 40% வாங்குறதும், சீமான் 4% வாங்குறதும் ஒன்னுதான்" என்றேன்.
திராவிட கட்சிகள் வாக்குக்குக் பணம் கொடுத்தன. ஆனால் அந்த முதலீட்டை தவெக டீம் ஊடகங்களுக்கும் இன்னபிற விளம்பரங்களுக்கும் கொடுத்தன. தவெக"வின் இயலாமையை, ஏமாற்றும் உத்தியை பிறர் பார்வைக்கு வர விடாமல் லாவகமாக பார்த்துக்கொண்டனர். வெற்றி பெறுவார் என்கிற பிம்பத்தை மக்கள் மனதில் ஆழமாக ஊன்றினார்கள்.
ஆனால் சீமான் விடயத்தில் கவனியுங்கள். இன்றும் பேசுகிறார் சீமான். ஒரு வினாடியில் மின்னல் போல தோன்றி மறைகின்றன அவர் குறித்தான செய்திகள். அல்லது அவருக்கு எதிர்மறையான செய்திகளை ஓங்கி ஒலிக்கின்றன. இந்த ஊடகங்கள் அன்று தொட்டு இன்று வரை சீமானுக்கு செய்வது அருவருப்பான துரோகம் மட்டும்தான்.
அன்று முதல் இன்று வரை நாம் தமிழரை ஆதரிப்பவர்களின் வேலை அவர் மீதான அவதூறுகளுக்கு பதில் சொல்வதாக மட்டுமேதான் இருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பு கூட வீரமணிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை விட்டார் என்கிற பதிவுகள் சில வீரமணி குறித்து வாயே திறக்கவில்லையே என்கிறார்கள் பலர். அச்ச்சசோ என ஓடிச்சென்று ஆராந்தால் இரண்டுமே அவதூறுகள். அண்ணனின் பக்கத்தில் சென்று பார்த்தால் வீரமணிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்கிற அறிக்கை வந்து 60 மணி நேரங்கள் ஆகிறது. இதுவா அரசியல்? திரள்நிதி சீமான் பகட்டாக வாழ்கிறார் என்பவர்கள் எல்லாம் அறியாமையில் அவதிப்படுபவர்கள் என்பதுதான் என் புரிதல்.
எழுத்தாளர் ஜெயமோகனின் பழைய கட்டுரை ஒன்றில் சீமானுடனான சந்திப்பைச் சொல்கிற போது, "சீமான் தன் தம்பியர்கள் புடைசூழ வலம் வந்த காலம் அது" என அரசியலுக்கு முந்தைய சீமானை குறிப்பிடுகிறார் அவர்.. . அண்ணன் வீட்லதான் அப்பலாம் சாப்பிடுவோம்" என சொல்லாத இயக்குநர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் சினி உலகில்.
நித்தம் உழைக்கிறோம், குடும்பத்தை கரை சேர்க்க அது போதும் என்கிற எந்த நாதக காரனும் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிவிட மாட்டான் என்பதுதான் என் புரிதல். கட்சி சரிகிறது என்பது, 'மொதல்ல கவுன்சிலர் ஆகச் சொல்லுங்க'.என்பதெல்லாம் அவர் கேள்விக்கு பதிலில்லா இயலாமை ரகம். உண்மையில் கட்சியால் ஆதாயம் அடைய நினைப்பவர்கள் மட்டும்தான் விலகியுள்ளார்கள். அப்படியானவர்கள் விலகிவிட வேண்டும். அல்லது இப்போதே இனங்கண்டு கட்சி விலக்கிவிட வேண்டும் என்பது எனது அன்பான கோரிக்கை.
சீவிவிட்டதும் குபீரென சாடிவிடாது பதநீர். துளிதுளியாக வழிந்து மறுதினம் கலசம் நிறைந்திருக்கும் தூய வெண்மையாய். அப்படிதான்.
உறுதியாக ஒருநாள் இந்த மண் அண்ணன் சீமானின் கருத்துக்களால் நிறையும். ஏனென்றால் சமரசமற்ற உழைப்பும், முயற்சியும் தோல்வியில் தன் வரலாறை முடித்துக்கொண்டதாக செய்தியே இல்லை.
#சீமான்
#seeman
திமுகவிடமோ, ஜி ஸ்கொயரிடமோ பணம் வாங்கவில்லை என்று நாம் நிரூபிக்கனுமாம்! பணம் வாங்கிட்டாங்கனு சொல்லும் நாய்கள் தாண்டா ஆதாரத்தையும் தரனும்! குற்றச்சாட்டை எவன் வேணும்னாலும் வைக்கலாம்! மூத்த பத்திரிகையாளர் மூத்திர பத்திரிகையாளர் எல்லா பரதேசிகளுக்கும் தான்!
பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியையும், பின்புலத்தில் உடந்தையாக இருந்த குற்றவாளிகளையும் கண்டறிந்து, விசாரணையையும், வழக்கையும் துரிதமாக நடத்தி, மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu@Chief_Secy_TN@jagadeshwarioff@VanniTamizhVCK@tnpoliceoffl
சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்களும், அதுதொடர்பாக அடுத்தடுத்து வரும் செய்திகளும் பேரதிர்ச்சி தருகின்றன. உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் போல, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கோரப் பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டையே உறைய வைத்திருக்கின்றன; பெரும் அதிர்வை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கின்றன. கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி, விளிம்பு நிலையிலிருக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.
முந்தைய திமுகவின் ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும் வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு, கைதுசெய்யாதுவிட்டதும், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, நீதிமன்றத்தில் காவல்துறை கையைவிரித்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் கடும் கண்டனத்திற்குரியது. பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படும் காணொளி ஆதாரம் சமர்பிக்கப்பட்டும், ஜெம் வீரமணி உள்ளிட்டக் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும், அவர்களது முகத்திரையைக் கிழித்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது. மேடைகளில் பெண்ணுரிமை, சமத்துவம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கானச் செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகமாகும். இவ்வன்கொடுமை வழக்கில், முந்தைய அரசின் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்காது, நடவடிக்கை கோரிய சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் செயல்பாடே வழக்கில் நீதியை நோக்கிய முன்நகர்வைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
ஜெம் வீரமணி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பல ஆண்டுகளாக செய்து வந்ததும், அதன் பின்புலத்தில் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது என்பதுவுமான செய்திகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இதில் தொடர்புடைய அத்தனைக் குற்றவாளிகளும், துணைபோன முந்தைய அரசின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பேரவலம் நிகழ்த்தப்பட்டது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனைப் பேர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டியது பேரவசியமானதாகும். இந்த வழக்கை அரசியல் சண்டையாகவோ, தேர்தல் காலப் பரப்புரைக் கூச்சலாகவோ மட்டும் பயன்படுத்திவிட்டு முடித்துவிடக் கூடாது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து நபர்கள், உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக மேலாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதில் முற்றிலுமாகத் தோற்றுப்போய்விட்டன. பொள்ளாச்சி பாலியல் கொடூரம், சிவகங்கைச்சம்பவம் முதல் நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் பிஞ்சுக்குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வரை தமிழகத்தில் நிலவும் மிக மோசமான நிலையை எடுத்துக் காட்டுகின்றன. குற்றம் செய்தால் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி மிக இலகுவாகத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே ஜெம் வீரமணி போன்றவர்கள் துளியும் பயமின்றி, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடக் காரணமாக அமைந்திருக்கிறது.
ஒரு தொழிலதிபர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண் குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது எவ்வளவு மோசமான ஒரு இழிநிலை? இந்த 40 ஆண்டுகாலத்தில் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும், காவல்துறையினரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பெண் குழந்தைகளின் பாதுகாப்பையே முழுமையாகக் கேள்விக்குறியாக்கிவிட்டு, வாக்கு வங்கி அரசியலுக்காகப் பெண்களைப் போற்றி மேடைகளில் பேசியதெல்லாம் எவ்வளவு போலித்தனமானது? என்பதை நாட்டு மக்கள் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
திமுக, அதிமுக, தவெக எனும் மூன்று கட்சிகளுமே பெண்களுக்கு மாதா மாதம் தொகையை வழங்குவதை மட்டுமே தங்களது அதிகபட்சமான பெண்ணுரிமைச்செயல்பாடு எனக் கருதிக் கொண்டு, செயல்படுவது மிக மோசமானப் போக்காகும். ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று, பயமின்றிப் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான புறச்சூழலை உருவாக்குவதே அவர்களுக்கு அளித்திட வேண்டிய அடிப்படை உரிமையாகும். இத்தோடு, பெண்களுக்கும், பிஞ்சுக்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய வேண்டுமானால், அக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
ஆகவே, பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி, உடந்தையாக இருந்த குற்றவாளிகளான சாந்தி, மகேந்திரசிம்மன் மட்டுமின்றி, இதற்குப் பின்னால் வலைப்பின்னலில் இருக்கும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் கொண்ட ஒட்டுமொத்த குற்றச் சங்கிலியையும் கண்டறிந்து, அத்தனைப் பேரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும், இவ்வன்கொடுமை வழக்கையும், விசாரணையையும் துரிதமாக நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகள் அத்தனைப் பேருக்கும் மரணத்தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி