உன்
காதல் பிடிக்குள்
நான்
மாட்டிக்கொண்டேன்
மூச்சு காற்று கூட
என்னால் விட முடியாமல்
திணறித்தான் போகிறேன்
கொஞ்சம் நினைத்து பார்
அந்த
இடைவெளிகள் குறைந்து
போகட்டும்.
பிரிவின் பதில்
உதிர்ந்த சிறகுகள்
உன் நினைவுகள் தான்...
மீண்டும் முளைக்கும்
பாசத்தினால்!
மறைந்து நான்
செல்லவில்லை,
உன் இதயக் கூட்டில் தான்
வாழ்கிறேன்...
மீண்டும் வருவேன்
மலர்வதற்காக!
இதயத்தில்
சுமை கூடும் போது,
துவண்டு போன
என்
மனதிற்குதோள்
கொடுக்கக் காத்திருக்கும்
தோழி நீ.
கண்ணீர் துளிகள்
என்
இமைகளை நனைக்கும்
முன்னே,
அன்பால் துடைக்கத்
துடிக்கும்ஆறுதல்
கரம் நீ.
உலகமே என்னைவிட்டு
விலகி நின்றாலும்,
என்
மௌனத்தின் வலியைப்
புரிந்து
என்னோடு இருக்கிறாய்.
கலைந்த
சிறகுகள் சாட்சியாய்...
நீ
பிரிந்த திசையில்,
உதிர்ந்த
என்மௌனங்களை
கவிதையாய் கோர்க்கிறேன்!
நீ
வருவாய்யென அல்ல,
உன்
நினைவுகளில்
நான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதால்!