தவெக அமைச்சரவையில் பெரும்பாலானோர் முதல்முறை அமைச்சர்கள். அவர்கள் தடுமாறுவது இயல்பு. அப்படித் தடுமாறுபவர்களை தட்டிக் கொடுப்பதுதான் ஒரு நல்ல சமூகத்துக்கு அழகே தவிர, அவர்களை கீழே அழுத்துவது அல்ல.
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
நமது பொள்ளாச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறிலிருந்து பொள்ளாச்சி வரை, சுமார் 300 கிமீ தொலைவு மிதிவண்டியில் பயணித்து, வரும் வழியெல்லாம், 'போதை இல்லா தமிழகம்' என்ற விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த சகோதரர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றம் என்பது வார்த்தைகளால் மட்டும் வராது, தன்னலமின்றி களத்தில் செயல்படும் திரு. மணிகண்டன் போன்ற நம்பிக்கை மனிதர்களால் தான் உருவாகிறது.
மாறுவோம், மாற்றுவோம்!
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று போட்டித் தேர்வை நடத்தியது. சுமார் 42,000 தேர்வாளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வுகள், 48 பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றன. கடந்த 25.06.2026 அன்று வெளியிடப்பட்ட இந்தத் தேர்வுகளின் முடிவுகள், பல குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
பாடப்பிரிவுகளுக்கு 150 மதிப்பெண்களுக்கான தேர்வும், விளக்கவுரைக்கு (Descriptive) 50 மதிப்பெண்களுக்கான தேர்வும் நடைமுறைப்படி நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் துறையில், 150 மதிப்பெண்களுக்கு 111 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த தேர்வாளருக்கு, விளக்கவுரை தேர்வில், பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே போல, கணினி அறிவியல் துறையில் 107/150 மதிப்பெண்கள் பெற்றவருக்கு, விளக்கவுரை தேர்வில், 1/50 மட்டுமே கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில், இயற்பியல் பாடப்பிரிவில், 54/150 பெற்றவர், விளக்கவுரை தேர்வில், 49/50 பெற்றிருக்கிறார்.
இப்படி, மொத்தம் 43 பாடப்பிரிவுகளில், பாட மதிப்பெண் அதிகம் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்ணும், பாட மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிக அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மேலும், விளக்கவுரை மதிப்பெண்களில், 8.25, 24.75 என தசம, எண்ணிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி, தேர்வு மதிப்பீட்டு முறையின் குழப்பத்தால், பல தேர்வாளர்களின் தரவரிசையில், பல நூறு இடங்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மதிப்பீட்டு முறையின் வெளிப்படைத் தன்மை குறித்தும், நம்பகத்தன்மை குறித்தும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்காக, தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். தேர்வு மதிப்பீட்டில் இத்தனை குழப்பங்கள் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த விளக்கவுரை (Descriptive) தேர்வு மதிப்பீடு முறையை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்வை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2708 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம், 4000 பணியிடங்களையும் ஆறு மாதங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. எனவே, மீதமுள்ள பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது?
இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது. இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது.
This comes as a shocker, as three previously affiliated colleges of The Tamil Nadu Dr MGR Medical University have received deemed university status, which will lead to a reduction of 650 medical seats in this admission year. This will directly impact the admission of students selected under the 7.5% reservation for government school students, and the fee expected to be paid by students admitted to these colleges will be quadrupled, at the least.
The three colleges that have now been granted Deemed University status are St. Peter’s Medical College (250 seats) and Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences & Srinivasan Medical College (400 seats). As for who owns and controls these institutions, that is hardly a secret; it is already in the public domain.
The Tamil Nadu Dr MGR Medical University has clarified that it has not issued an NOC to either of these colleges to apply for deemed university status. However, it is also clarified that the refusal letter issued to St. Peter’s Medical College is currently being contested in court.
The UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022, in point number 5.02(i) and 5.02 (ii) clearly state that the University Grants Commission will presume that the State Government has no objection to the issuance of deemed university status if the affiliating university (in this case The Tamil Nadu Dr MGR Medical University) does not object within a window of 60 days and it will presume that the university had no objection for issuance of deemed university status.
The Tamil Nadu Dr MGR Medical University has clarified that they did not issue a NOC to Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Srinivasan Medical College.
Hence, a pertinent question arises. Did the previous DMK Govt deliberately ignore the application filed by Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Srinivasan Medical College and wait for the 60-day window to close?
I urge the TVK Govt to conduct a detailed probe into this matter and ensure that those responsible for this gross wilful negligence be punished. The future of aspiring medical students cannot be made collateral damage by administrative apathy or wilful political negligence. Their dreams of pursuing affordable medical education must not be stalled or sacrificed because those in power fail to act in time.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" (Deemed University) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்தக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், குறைந்தபட்சம் நான்கு மடங்கு உயரக்கூடும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளான, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி (250 இடங்கள்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் & சீனிவாசன் மருத்துவக் கல்லூரி (400 இடங்கள்) ஆகிய கல்வி நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்காக எந்தவிதமான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மறுப்புக் கடிதம் குறித்தான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு, UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022-இன் 5.02(i) மற்றும் 5.02(ii) விதிகளின்படி, இணைப்புப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கருதி, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க முடியும்.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.
எனவே, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பத்தை முந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு முடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
இந்த விவகாரம் குறித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவை, எதிர்காலத்தை, நிர்வாக அலட்சியம் மற்றும் யாருடைய சுயநலத்துக்கும் பலிகடாவாக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
ஆன்மீகமும், அறிவியலும், மனிதநேயமும் ஒன்றிணைந்த, நமது பாரதத்தின் சிந்தனையை உலக அரங்கில் உயர்த்திய, சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவு தினம் இன்று.
இளைஞர்களிடம், தன்னம்பிக்கை, துணிச்சல், ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றினை போதித்த மகான் விவேகானந்தர் அவர்களது சிந்தனைகள், என்றும் நம் வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக நிலைத்திருக்கட்டும்.
The news that the death toll in the Ammonia gas tragedy in a pvt company in Thiruvallur has increased to 17 is deeply disturbing. All the deceased are women and were migrant guest workers from North India.
The TN government has given Compensation of Rs. 2 lakh to the next of kin of the deceased. How is this sufficient & justified? Odisha government has given Rs. 10 Lakh as compensation to the victim. The Odisha government also facilitated the return of those migrant guest workers who were discharged after the treatment. While the State Govt arranged safe passage of the deceased, how did the State administration forget the plight of those who were discharged from hospitals, waiting to return home?
The tragic loss of lives in the Ammonia gas tragedy in the private export firm in Thiruvallur also raises a lot of questions;
1)The first & foremost being the absence of the implementation of the 1979 Inter-State Migrant Workmen Act. Principal employers of establishments that employ five or more inter-state migrant workers must be registered under the Act. However, this accident and many earlier incidents have only shown that this Act is not implemented in Tamil Nadu and that no registry is being maintained.
Whenever a crime happens that involves a migrant guest worker from North India, a bunch of innocent migrant guest workers from North India are rounded up for enquiry, as there are no ways and means for the Police Department to narrow it down due to lack of registry.
However, after we pointed it out recently, we understand that the TVK Govt has begun enforcing this Act, at least in parts, if not in full. We trust that the State Govt takes the recent accidents/incidents seriously and enforces the availability of the register of migrant guest workers across all districts. TN State Govt could draw inspiration from the Athidhi app developed by Kerala for registering migrant guest workers and to ensure their welfare.
Even in the Thiruvallur ammonia gas tragedy, it was learnt that there was difficulty in establishing the actual identity of one of the deceased women, who carried a forged Aadhaar card to secure employment. This shows the inefficiency of the functioning of the inter-state migrant workers portal launched by TN Govt in 2023.
2)The welfare board for migrant guest workers is basically non-existent and needs to be established, strengthened and should be used to address the concerns of the migrant guest workers.
Tamil Nadu has today fallen below the replacement level, with a fertility rate of 1.3. To build the State’s infrastructure and work in industrial & commercial establishments across the State, we depend on the hard work of our migrant guest workers. Hence, it is important that we focus on their state of living, as most of the migrant guest workers are compelled to live in appalling conditions and have no place to complain, and their voices are never heard.
3)It is not just the duty of the welfare board but also the duty of the Department of Industrial Safety & Health (DISH) of the state government of Tamil Nadu. Even after a catastrophe that led to the death of 17 workers due to an ammonia gas leak, there seems to be no accountability taken by this department. It is time for “Transparency”. DISH should have made public their most recent inspection of this factory and any observations they made.
The factory in which these migrant guest workers suffered had accommodations within the place of work, surrounded by hazardous pipelines. How was this even allowed?
I demand that appropriate compensation be disbursed to the victims, that the 1979 Inter-State Migrant Workmen Act be enforced in both letter & spirit, and that transparency be brought by the Ministry of Labour of the TN State Govt on the functioning of the DISH & they also be made accountable, including the owners of the establishment, for deliberately ignoring the hazardous living conditions of the migrant guest workers.
@CMOTamilnadu
Thiru TR Baalu filed a defamation case against me for publishing the assets/companies owned by him and his family through DMK Files & he had sought ₹100 Crores in damages.
As you all know, after a certain time period in the trial, I argued my own case and personally cross-examined him, and the details of which are in the public domain.
Also, during one of the cross-examinations, Thiru TR Baalu made defamatory remarks against me without substance in the court, and I had filed a case against him in the same court for making those allegations within the court premise.
Today, Thiru TR Baalu, out of his own wishes, decided to withdraw the defamation case filed against me by him. He filed the defamation case against me; to carry it further or not was his decision & not mine.
I wish to inform all concerned that I continue to stand by every single remark that I had made against the previous DMK govt and certain members of the DMK party till now.
I wish to thank Adv. Paul Kanagaraj, Adv. Kumaraguru and all members of the BJP legal team for their support during the trial of this case.
Truth always triumphs!
I thank you for your attention to this matter!
கடந்த 2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில், உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களுக்கான TNPDCL தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகக் காரணங்களைக் கூறி, இந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக, TANGEDCO அறிவித்தது. மேலும், TN Act No. 14 of 2022, TNPSC (Additional Functions) சட்டத்தின்படி, TNPSC மூலமாக, இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்றும், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்பகிர்மானக் கழக உதவி மின்பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 26.07.2024 அன்று வெளியிடப்பட்ட, பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலிப் பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக, முன்பு ரத்து செய்யப்பட்ட TNPDCL உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்களில், 195 இடங்கள், பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என்று திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வயது வரம்பும் 32 என்று அறிவிக்கப்பட்டது.
இதனால், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அந்தத் துறை சார்பான தேர்வுகள் ரத்து செய்து, எந்த மறு அறிவிப்பும் செய்யாமல் காத்திருக்க வைத்து விட்டு, அதே பணியிடங்களை, பொதுப்பணித்துறை சார்பான தேர்வுகள் மூலம் நிரப்ப முடிவு செய்தது, அந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. குறிப்பாக, அரசின் நிர்வாகக் குளறுபடி காரணமாக, தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு தளர்வு வழங்கும் தமிழக அரசின் 13.09.2021 அன்று வெளியான அரசாணை எண் 91 ன் படி, கொரோனா பெருந்தொற்றால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால், வயது உச்ச வரம்பு, 2 ஆண்டுகள் தளர்த்தப்படும். ஆனால், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, 04.07.2022 அன்றுதான். ஏற்கனவே தேர்வுகள், 2020 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், பொதுவாக வெறும் இரண்டு ஆண்டுகள் தளர்வு என்பது எப்படிப் பொருத்தமானதாக அமையும்?
இந்த நிலையில், வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள், கடந்த 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களைக் கூட தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். TNPSC அமைப்பின் இந்த நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் பணிக்காகக் காத்துக் கொண்டிருந்த தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துரதிருஷ்டவசமானது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதே போல, கடந்த 2013 ஆம் ஆண்டு, இதே போன்று, நீண்ட கால பணியிட நியமனங்கள் நடைபெறாத நிலையில், விதி 91(h) மூலம், ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை, தமிழக மின்சார வாரியம் வழங்கியிருந்தது. கடந்த 2019 முதல், 2024 வரை, எந்தப் பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில், இதே சூழ்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கும், வயது வரம்பில் தளர்வு கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, அந்த நிவாரணத்தை மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். கடந்த கால முன்னுதாரணங்களைப் பின்பற்றி, நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும். மேலும், தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ, விதிகளையோ மாற்றும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாக அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
The economic and demographic effects of corruption.
Cost of land in our urban areas is far higher than what our GDP per capita would dictate. The ratio of land value to per capita GDP is probably higher in India than anywhere else. As an example, land prices in Chennai or Bengaluru rival that of cities like New York which has a vastly higher per capita GDP.
The key reason?
First, vast sums of political corruption money is parked in real estate. This raises real estate prices and high real estate prices affect everything downstream.
Second, corruption in building approvals and the like - the famous DTCP - raises construction costs, on top of already higher real estate costs.
Third, corruption in private school regulatory compliance enforcement raises school fees.
Fourth, corruption in private hospital regulatory compliance enforcement raises health care costs.
Fifth, household goods need sales outlets and those pay higher rents due to high real estate prices and construction costs.
So housing, education, healthcare and household goods - all of these now cost higher.
As a direct consequence, the economic burden on the average person gets worse. Young people, facing all these costs, postpone marriage, and postpone children or have fewer children.
That directly affects our demographics.
While this issue exists in many parts of India, Tamil Nadu, being the most urbanized of the bigger states, is particularly hit hard.
So corruption is becoming an existential threat to our society.
If you worry about the super-low birth rate in Tamil Nadu, way below replacement, understand that corruption raising our cost of living is one of the major causes, not the only cause, but a big one in our context.
The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC), under the direction of the TVK Govt, had filed an FIR & conducted a raid yesterday at the residence and other premises associated with former DMK Minister Thiru E.V. Velu avl in connection with alleged irregularities in the execution of road contracts awarded in 2022.
I welcome the TVK Govt's efforts to investigate allegations of corruption from the previous DMK regime. I sincerely hope that the TVK Govt ensures a swift conclusion to these cases, and that anyone found guilty is held accountable in accordance with the law.
While we are on this subject, I urge the TVK Govt to look into the following scams that were exposed over the past 5 years, order an enquiry, and take action accordingly. Naming a few to begin with.
1.BGR Energy Scam – Flouting rules, re-awarding a contract, and later cancelling it after being exposed.
2.Nutrition Kit Scam – Procurement of Health Mix from private vendors at an inflated price despite Aavin coming forward to manufacture it.
3.Pongal Dhoti Scam – Use of excess polyester instead of cotton, and proofs of which were submitted to DVAC.
4.Multiple scams in the State Transport Department – Procurement of Reflective & Rear Marking Plates and much more.
5.TNMSC Scam – Procurement of Pesticides
6.MGNREGA Scam
We also hope the TVK Govt finds the time to solve a long-pending mystery. For years, we have been asking about the rather curious coincidence of Thiru Udhayanidhi Stalin avl's fan club and Noble Steels operating from the very same address, and about Noble Steels' announcement of a ₹1,000 crore investment in Tamil Nadu soon after former Chief Minister Thiru M.K. Stalin's visit to Dubai (that investment remains an announcement, is a topic for another day).
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.