நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களின் குரல்களை ஒடுக்கும் பாசிச சக்திகள்!
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற #CJP-யைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தடியடி தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் போராடிய SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அரசை விமர்சித்துப் பேசினால் கைது செய்வது; எதிர்த்துப் போராடுபவர்கள் மீது வன்முறை ஏவுவது என ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தப் பாசிச அரசுகளின் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் மாணவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்!
மாணவர்களின் உயிர் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும்!
#CJPProtest #BanNEET #SaveStudents #Education
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @kannankasoka1 அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றையதினம் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாடு Vs டெல்லி என்ற உரிமைப் போரில் ஆதிக்கவாதிகளையும் அவர்களின் Agent-களையும் வீழ்த்தி, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் 7-வது முறையாக கழக ஆட்சி அமைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 100% வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @durai944 அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
வளர்ச்சித் திட்டங்கள் மூலம் மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை மலரச்செய்யும் #திராவிடமாடலா? வெறுப்பை விதைத்து பயத்தை தூண்டும் ஆரிய மாடலா? என்று வாக்காளர்களிடம் கேட்டு நம் வெற்றியை உறுதி செய்தோம்.
கடந்த தேர்தலைக் காட்டிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அண்ணன் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
திருவிழா போல் திரண்டிருந்த திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களிடம் கழகத்தின் வெற்றி வேட்பாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Govichezhian அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்று மாலை வாக்கு சேகரித்தோம்.
இந்தியாவின் No.1 மாநிலமான தமிழ்நாட்டில், டெல்லியின் No.1 அடிமைகளுக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கி , திருவிடைமருதூரில் நான்காவது முறையாக அண்ணன் கோவி. செழியன் அவர்களை தேர்வு செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டியது தொகுதி மக்களின் கடமை என்று உரையாற்றினோம்.
#திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு