வெற்றி என்றால்,வியந்து பேசும் மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும்:
`தி.மு.கழக இளைஞர் அணிக்கு நிகராக ஆள் இல்லை’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும்!
கரூரில் நடைபெற்ற `களத்தில் இளைஞர் அணி’ கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதய��ிதி ஸ்டாலின் பேச்சு!
கரூரில் நடைபெற்ற, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுடன் ‘களத்தில் இளைஞர் அணி’ தேர்தல் பிரச்சாரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், ``இளைஞர் அணி தம்பிமார்கள் சிறப்பாக ���ேலை பார்த்தார்கள், தி.மு.க. இளைஞர் அணிக்கு நிகராக ஆள் இல்லை’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும். வெற்றி என்றால், அது சாதாரண வெற்றியாக இருக்கக்கூடாது. எல்லாரும் வியந்து பேசும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.
கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
காலையில் கோயம்புத���தூரில் ஆரம்பித்து, கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டு, அதன் பிறகு ஈரோட்டுக்குச் சென்று ஈரோடு, நாமக்கல் இளைஞர் அணி நிர்வாகிகளைச் சந்தித்து, இப்பொழுது கடைசியாகக் கரூருக்கு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
முதலில் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? எனக்கு காயம் ஏற்பட்டு ஒரு மாதம் ஆகிறது, எலும்பு முறிவு என்று தெரிவதற்கே ஒரு வாரம் ஆ��ிவிட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஓய்வில் இருக்கச் சொன்னார்கள். இருந்தாலும் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதனால், மூன்று நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கும்போது இன்னும் ஒரு 10 நாட்களாவது ஆகும், நீங்கள் தொடர்ந்து சுற்றுப்பயணத்திலேயே இருங்கள், வீட்டுக்குச் செல்லாதீர்கள் என்று மருத்துவர்கள் சொன்னதற்கு இணங்க இன்று மீண்டும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன்.
காலையிலிருந்து எல்லா நிர்வாகிகளும் என்னிடம் கேட்கக்கூடிய கேள்வி இதுதான். ``நலமாக இருக்கிறீர்களா? உங்கள் விரல் நலமாக இருக்கிறதா? தலைவர�� நலமாக இருக்கிறாரா? தலைவரைக் கேட்டதாகச் சொல்லுங்கள், உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்பதுதான் அனைவரும் சொல்வது. நீங்கள் இருக்கும்போது எனக்கோ தலைவருக்கோ எதுவுமே நடக்காது. எங்களது பலமே நீங்கள்தான். அப்படிப்பட்ட நிர்வாகிகளான உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
தனிச்சிறப்பு உண்டு
நம் கழகத்தைப் பொறுத்தவரைக்கும் இந்த கரூருக்கு என்று தனி இடம், தனிச்சிறப்பு உண்டு. திரு���்பூருக்கும் உண்டு. இந்த கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய குளித்தலை தொகுதியில்தான் நம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதன்முறையாகப் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குளித்தலை, இந்த கரூர் மாவட்டம்தான் அவரை முதல்முறை சட்டமன்றத்துக்குள் அனுப்பியது. அதன் பிறகு பார்த்தீர்கள் என்றால், அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற���றார் என்றால், அந்த வெற்றியைத் தொடங்கி வைத்தது இந்த கரூர் மாவட்டம். அப்படிப்பட்ட கரூர் மாவட்டத்துக்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். ஏதோ வருடத்துக்கு ஒரு முறை வருபவன் கிடையாது. செந்தில் பாலாஜி அவர்கள் அடிக்கடி என்னை கரூர் மாவட்டத்துக்கு அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். மூன்று ��ாதங்களுக்கு ஒரு முறையாவது நான் கரூருக்கு வந்திருக்கிறேன்.
தி.மு.க-வின் கோட்டை
கடந்த மாதம்தான் நிர்வாகிகள் சந்திப்பினை நாம் கோவையில் மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பாக நடத்தினோம். அந்தச் சந்திப்பிலும் நீங்கள் அனைவரும் உங்களின் உழைப்பால் அந்தச் சந்திப்பைத் கிட்டத்தட்ட ஒரு மாநாடு போல நீங்கள் நடத்திக் காட்டினீர்கள். அதற்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்���ிறேன். இன்று கரூர் மட்டும் தி.மு.க-வின் கோட்டை கிடையாது, இந்த மேற்கு மண்டலம் முழுவதுமே தி.மு.க-வின் கோட்டை என்று நாம் நிரூபித்துக் காட்ட வேண்டிய காலம் வந்திருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு இதே கரூரில்தான் நம் முப்பெரும் விழா நிகழ்ச்சியை, செந்தில் பாலாஜி அவர்கள் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். அந்த நிகழ்ச்சிக்கு உங்களில் பல பேர் நிச்சயமாக வந்திருப்பீர்கள். அன்று அந்த மு��்பெரும் விழா நிகழ்ச்சியில் கொட்டும் மழையில் நம் தலைவர் பேசினார். அப்பொழுது மூன்று விஷயத்தைத் தலைவர் உரக்கச் சொன்னார், அதனை முழக்கமாகச் சொன்னார்.
தமிழ்நாட்டை நான் தலைகுனிய விடமாட்டேன். தமிழ்நாடு போராடும், நிச்சயம் தமிழ்நாடு வெல்லும் என்று அன்று கரூரில் முப்பெரும் விழாவில் நம் தலைவர் அன்று சொன்னார்கள். தலைவர் அன்று சொல்லச் சொல்ல நாமெல்லாம் திரும்பச் சொன்னோம். அந்த உறுதிமொழியை நாம் அன்று எடுத்தோம். அந்த உறுதிமொழியை நிறைவேற்றிக் காட்டவேண்டிய காலத்தின் க��்டாயத்தில் நாம் இப்பொழுது இன்று இருக்கிறோம்.
தனி உற்சாகம் ஏற்படும்
மிக மிக முக்கியமான தருணத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்கள். இன்னும் 32 நாட்கள்தான் இருக்கின்றன. 23-ஆம் தேதி தேர்தல். நான் அடிக்கடி சொல்வதுண்டு, எப்பொழுதெல்லாம் உங்களைச் சந்திக்கிறேனோ, பல்வேறு நிகழ்ச்சிகளில் சந்திக்கிறேனோ, எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும், இந்த ���ளைஞர் அணி நிர்வாகிகளைச் சந்திக்கும்போது எனக்குத் தனி உற்சாகம் ஏற்பட்டுவிடும். என் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு என் உறவினர்கள், சகோதரர்களைச் சந்திக்கிற மாதிரி ஓர் உணர்வு எனக்கு ஏற்படும். அந்த உணர்வுடன்தான் நான் இன்று வந்திருக்கிறேன்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது `களத்தில் இளைஞர் அணி’ என்கின்ற முன்னெடுப்பை ஆரம்பித்து நீங்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள். வாக்காளர்களைச் சந்தித்தீர்கள். உங்களின் அந்தப் பிரச்சாரத்தால்தான் நாம் 100 சதவிகித வெற்றியை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெற்றோம். இன்று மீண்டும் அந்த முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். களத்தில் இளைஞர் அணி என்று களத்துக்கு இளைஞர் அணி நிர்வாகிகள் நாம் செல்ல வேண்டும். மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் அந்த 100 சதவிகித வெற்றியை நாம் பெற��றாக வேண்டும். இந்தியாவில் இருக்கக்கூடிய பல கட்சிகள் இன்று வாக்குச்சாவடி குழு அமைப்பதற்குத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று இளைஞர் அணிக்குப் பார்த்த��ர்கள் என்றால் வாக்குச்சாவடிக்கு ஒரு நிர்வாகியை நாம் நியமித்திருக்கிறோம். எல்லா இயக்கத்திலும் இதெல்லாம் சாத்தியம் கிடையாது. தி.மு.க இளைஞர் அணியில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம். இவ்வளவு பெரிய ஓர் இளைஞர் படையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றால் தேர்தல் என்கின்ற அந்தப் போருக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தப் படையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.
முதன்மையான அணி
தி.மு.க-வில் 25 அணிகள் இருக்கின்றன. ஆனால், கலைஞர் எப்பொழுதும் சொல்வார், எத்தனையோ அணிகள் இருந்தாலும் இளைஞர் அணிதான் முதல் அணி, முதன்மையான அணி என்பார். தலைமை என்ன சொன்னாலும், தலைவர் என்ன சொன்னாலும் அதை, களத்தில் முதலில் இறங்கிச் செயல்படுத்திச் செய்து முடிப்பது இளைஞர் அணியாகத்தான் இருக்கும். இப்பொழுது மீண்டும் நாம் அதை நிரூபிக்க வேண்டும். தலைவர் அவர்கள் அந்த அளவுக்க��� இளைஞர் அணி மேல் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார். அந்த வார்த்தையை நாம் காப்பாற்ற வேண்டும்.
இளைஞர் அணியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு சிறந்த பயிற்சிக் களம். எடுத்த உடனே எல்லாரையும் முதன்மைப் போட்டியில் விளையாட விட்டுவிட மாட்டார்கள். விளையாடத் தெரிந்தாலும் சரி, விளையாடத் தெரிகிறதா, எந்த நேரத்தில் எப்படி விளையாடுகிறான் என்பதைச் சரிபார்ப்பதற்குத்தான் `வலைப் பயிற்சி’ கொடுப்போம் என்று சொல்வார்கள். எனவே நமக்கு மிகப்பெரிய பொறுப்புகள் வருவதற்கான ஒரு பயிற்சிக் களம்தான் இந்த இளைஞர் அணி பொறுப்பு. இங்கே நீங்கள் எடுக்கக்கூடிய பயிற்சிதான் நாளைக்கு உங்களை மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்போகிறது.
நாம் கடந்த ஐந்து வருடங்களாகப் பல்வேறு பணிகள் செய்திருக்கிறோம். இளைஞர் அணி சார்பாகவே பல்வேறு பணிகள் செய்திருக்கிறோம். கடுமையாக உழைத்திருக்கிறோம். மக்களுடன் சேர்ந்து இருக்கிறோம். மக்கள���டன் தொடர்பில் வைத்திருக்கிறோம். இப்பொழுது கடைசி நேரத்தில் இன்னும் அதிகமாக, இறுதி உந்துதல் என்று சொல்வார்கள். கடைசி நேரத்தில் இந்தக் கூடுதல் முயற்சியை நாம் நிச்சயம் செய்ய வேண்டும். அதுதான் இந்த அடுத்த 30 நாட்கள். இந்த 30 நாட்களும் மக்களைச் சந்திப்பதற்குத் தயாராகிவிட்டோம்.
திராவிட மாடல் அரசு சாதனை
எந்தத் தைரியத்தில் தயாராகியிருக்கிறோம்? ஐந்து வருடங்களாக நம் திராவிட மாடல் அரசு, நம் தலைவர் முதலமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை மக்களுக்குச் செய்து கொடுத்திருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் நாம் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் செய்து காட்டியிருக்கிறோம் என்கின்ற அந்தத் தைரியத்தில் மக்களைச் சந்திக்கிறோம். இன்று இந்தியாவிலேயே மக்களை தினமும் சந்திக்கின்ற, நேரடியாகச் சந்திக்கின்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் அவர்கள்தான். எந்தத் தைரியத்தில் சந்திக்கிறார்? மக்களுக்குச் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றியிருக்கிறோம் என்கிற தைரியத்தில் சந்திக்கிறார்.
சில திட்டங்களை மட்டும் இங்கே நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ��ட்சிப் பொறுப்பேற்றவுடன் நம் தலைவர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு விடியல் பயணத் திட்டம். 920 கோடி பயணங்கள் மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். ஐந்து வருடத்தில், ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு மாதமும் 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் மட்டும் சேமித்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இன்று பல்வேறு மாநிலங்கள் இந்த விடியல் பயணத் திட்டத்தைப�� பெயர் மாற்றி அவர்களின் மாநிலங்களில் செயல்படுத்தியிருக்கிறார்கள்.
21 லட்சம் குழந்தைகள்
முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான காலை உணவு, அதன் பிறகு தரமான கல்வி வழங்கப்படுகிறது. 21 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள்.
அரசுப்பள்ளியில் படித்து எந்தக் கல்லூரியில் சேர���ந்தாலும் மாணவனாக இருந்தால் தமிழ்ப்புதல்வன் திட்டம், மாணவியாக இருந்தால் புதுமைப்பெண் திட்டம் மூலமாக மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 13 லட்சம் மாணவ மாணவிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள்.
உயர்கல்வி சேர்க்கை விகிதம் (Gross Enrollment Ratio) என்பார்கள். பள்ளியில் படித்துவிட்டு எத்தனை பேர், உயர்கல்வியில் படிப்பதற்காகச் சேர்கிறார்கள் என்பதுதான் இந்த உயர்கல்விச் சேர்க்கை விகிதம். இந்தியாவின் மொத்தச் சேர்க்கை விகிதம் 26 சதவிகிதம். தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் 50 சதவிகிதம். இந்தியாவின் ஜி.இ.ஆர் (GER)-ஐ விட இரண்டு மடங்கு தமிழ்நாட்டின் ஜி.இ.ஆர் GER அதிகம். அதற்குக் காரணம் இப்படிப்பட்ட திட்டங்கள் - முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகியவைதான்.
10 லட்சம் மடிக்கணினிகள்
தலைவர் அறிவித்து ஒரே மாதத்தில் 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை அறிவித்துக் கொடுத்து முடித்துவிட்டோம். மடிக்கணினி என்றால் அ.தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் மாதிரி கிடையாது. அதைச் சில பேர் உண்மையை மறைக்கிறார்கள். என்ன தெரியுமா சொல்கிறார்கள்? ``அ.தி.மு.க ஆட்சியில் கொடுத்துக் கொண��டிருந்தார்கள், அதை நீங்கள் நிறுத்திவிட்டீர்கள்’’ என்று. கிடையாது, அ.தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 2019- ஆம் ஆண்டிலேயே அ.தி.மு.க ஆட்சியில் அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். ஆனால் நம் தலைவர் ``கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி இன்னும் பயனுள்ளதாக இருக்கும், அதுவும் படித்து முடித்துவிட்டு அவர்கள் வேலைக்குச் செல்லும்போது அவர்களின் வேலைக்��ும்
#VoteForDMK
உதயசூரியன் என்பது சுவரில் எழுதும் சின்னம் கிடையாது. அது நம் உயிரோடு, உணர்வோடு கலந்திருக்கும் சின்னம் உதயசூரியன். கோவை மட்டுமல்ல ஒட்டு மொத்த மேற்கு மண்டலமும் திராவிட மு��்னேற்றக் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய நேரம் இந்த சட்டமன்றத் தேர்தல்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு உட்பட்ட @dmk_youthwing-ன் மாவட்ட- மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை இன்று காலை திண்டுக்கல்லில் நேரில் சந்தித்தோம்.
இல்லந்தோறும் சென்று இளம் வாக்காளர்களிடம் நாம் மேற்கொள்ளவிருக்கும் #களத்தில்_இளைஞர்_அணி தேர்தல் பிரச்சாரம் குறித்து ��லோசனை மேற்கொண்டு, ஐந்தாண்டுக்கால #திராவிடமாடல் ஆட்சியில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாட்டைப் பின்னுக்கு இழுக்க நினைக்கும் டெல்லியின் பழைய மற்றும் புதிய அடிமைகளை வீழ்த்த உறுதி ஏற்றோம்!
2026-சட்டமன்றத் தேர்தலில் வெல்வோம்! வரலாறு படைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது ���ன்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#FairDelimitation
தமிழ்நாடு என்றும் ட��ல்லிக்கு Out of controlதான் என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும். கருத்துக்கணிப்புகளில் வரும் முடிவுகளை விட இரண்டு மடங்கு வெற்றியை நாம் பெற வேண்டும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
அரசு அலுவலகங்களுக்குக் கோரிக்கை மனுக்களுடன் மக்கள் சென்ற நிலையை மாற்றி, அவர்களின் வீடுகளுக்கே அரசு அலுவலர்கள் சென்று தீர்வுகளை தரும் நிலையை #உங்களுடன்_ஸ்டாலின் என்ற முன்னோடித் திட்டத்தின் மூலம், நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
`எல்லார்க்கும் எல்லாம்’ எனும் நம் #திராவிடமாடல் அரசின் திட்டங்களும், சேவைகளும் ஒவ்வொரு தமிழ்நாட்ட�� இல்லங்களுக்கும் சென்று சேரட்டும். #ஓரணியில்_தமிழ்நாடு செழிக்கட்டும்!
#DMK4TN #ChepaukTriplicane
Addressed the media regarding yet another proud sporting moment for Tamil Nadu. We are all set to welcome the world once again as Mamallapuram gears up to host the Asian Surfing Championships 2025, scheduled from August 3 to 12.
We officially announced this prestigious international event today, which will see participation from over 150 top surfing talents from across Asian countries.
Our sincere thanks to the Honourable Chief Minister @mkstalin Avargal for sanctioning Rs. 3.3 crore to ensure the smooth and successful conduct of the championship.
Significantly, this event will serve as the final qualifying competition for the 2026 Asian Games in Japan, further elevating its importance on the global sporting stage.
Let us unite to make this championship a grand success and continue to showcase Tamil Nadu’s growing stature as a premier destination for international sports.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS #AsianSurfingChampionships2025
நாள் : 15
----------
----------
இன்று ஈரோடு மத்திய மாவட்டம் பவானி தெற்கு ஒன்றியம்
பவானி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
காவலர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் 10,12 வகுப்பிற்கான கல்வி உதவித்தொகை மற்றும் உயர்கல்வித்துறை தொகை உயர்த்தி வழங்கப்படும்!
- சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்���ர் திரு @mkstalin அவர்கள்
#DMK4TN #TNAssembly
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில், சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில், கழக இளைஞர் அணி சார்பில், ஒன்றிய அரசைக் கண்டித்து, மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திராவிட இயக்க பேச்சாளர் @NanjilPSampath அவர்களும், கழக இளம் பேச்சாளர் க. செல்வமணி அவர்களும் பங்கேற்று, மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, ஒன்றிய அரசின் பட்ஜெட்ட��ல் தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு அநீதி எனத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் விளக்கியும் உரையாற்றினர்.
ஆதிக்கவாதிகள் அஞ்சி நடுங்கும் கழகத் தலைவர் அவர்களின் உரிமைக் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்தது.
#தலைவர்72 #கழக_இளைஞர்_அணி #FairDelimitationForTN #StopHindiImposition
@MRKPanneer @Dmkmalik1 @AmuthaV77624361
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில் விக்��ிரவாண்டி தொகுதியில், கழக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கழக செய்தி தொடர்புக்குழு துணை செயலாளர் @SuriyaKML , கழக இளம் பேச்சாளர் மு. ரோஜா அவர்களும் பங்கேற்று மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு அநீதி எனத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் விளக்கியும் உரையாற்றினர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்ற கழகத் தலைவர் அவர்களின் உரிமைக் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்தது.
#தலைவர்72 #கழக_இளைஞர்_அணி #FairDelimitationForTN #StopHindiImposition
@gauthamponmudy @Dmkmalik1 #Dhinakaran