சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ��ர் அ��சியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட��ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் ��ுற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீத��� பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்க��விலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?
‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர���களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை வீட்டில் சென்று பார்க்காமல்..
சென்னைக்கு வரவைத்து 2 சொட்டு கண்ணீர் விட்டவரின் சாயத்தை வெளுத்து தொங்கவிட்ட விஜய சேதுபதி.
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
#BREAKING | “குற்றவாளிகள் தஞ்சமடையும் குப்பைத் தொட்டியாக தவெக மாறியுள்ளது”
பெசன்ட் நகரில் குற்றப் பின்னணி கொண்ட தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சனம்
#SunNews | #UdhayanidhiStalin | #TVK | #சட்டம்ஒழுங்கு
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவ���ியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வ���ர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அவரின் ��னவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி @PremallathaDMDK அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!