தமிழகத்தின் டெல்லி பிரதிநிதி - விஜய் நியமனம் செய்த நபர் இவர் தான்... இது போல் ஆந்திரா கர்நாடகா கேரளாவில் செய்திருந்தால் பெரும் போராட்டமே வெடித்திருக்கும்..
விஜய்க்கு செய்வது அதிகார ஆணவ திமிர் அன்றி வேறு இல்லை.. என்ன ஆணவம் இருந்தால் பிறந்து , பிசினஸ் முழுக்க கர்நாடாகவில் செய்து கொண்டிருக்கும் முழு ஒருத்தரை - இந்த மாநிலத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரை நியமனம் செய்து அதை சரி என்று நம்மை ஏற்க கூறுவார்கள் இந்த TVK அமைச்சர்கள்... இதை எந்த விலை கொடுத்தேனும் தமிழக அரசியல் கட்சிகள் வீழ்த்த வேண்டியது அவசியம்..
உனக்கு கஷ்ட காலத்தில் இருந்தார் என்பதற்காக , உன் சினிமா தயாரித்தார் என்பதற்காக தமிழகத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரை தமிழகத்தின் டெல்லிக்கான பிரதிநிதியாக நியமனம் செய்வதை ஏற்க முடியாது. இதற்காக எதையும் எதிர் கொள்ள தயார்..
தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒருவர் தமிழ்நாட்டின் பிரதிநிதி!?
ஆட்சி அமைக்க அனுமதி கோரி, ஆளுநர் மாளிகை சென்ற போதே தனது கடைசி படத்தின் தயாரிப்பாளரை அழைத்து சென்ற முதல்வர், தற்போது அவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆக்கியுள்ளார்.
தமிழ்நாட்டை சார்ந்த தங்களின் கட்சிக்காரர்களே பலர் இருக்க இந்த முக்கிய பொறுப்பை தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒரு தயாரிப்பாளருக்கு தருவது தான் உங்கள் மாற்றமா!!
கேரள மருத்துவ கழிவுகள் விவகாரம், கர்நாடகவின் மேகதாது பிரச்சனை, மத்தியிலும் கல்விக்கான நிதி விவகாரம் போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கும் நிலையில் டெல்லிக்கான தமிழ்நாட்டின் சிறப்பு பிரதிநிதி, முதல்வருக்கு தெரிந்தவராக இருப்பதை விட தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் பிரச்சினைகளையும் தெரிந்தவராக இருப்பதே முக்கியம்.
#TOXIC
மாத்திரையை ஐநூறு ரூபாய் தாளில் மறைத்து எடுத்து வந்து, செல்போன் ஸ்கிரீனில் வைத்து நுனுக்கி, ஏடிஎம் கார்டு வைத்து ஒன்றுசேர்த்து
தன் குழந்தைக்கு கொடுக்கும் இந்த அப்பாவை பாராட்டலாமே ப்ரண்ட்ஸ்
பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய
திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.
இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
ஒரு கூட்டணி கட்சியில் நின்னு ஜெயித்தவர்களை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் நான் மறுபடியும் உங்களுக்காக பிரச்சாரம் செய்கிறேன் என்பது எவ்வளவு கேவலமான ஜனநாயக மீறல் @CMOTamilnadu மக்களின் வாக்கு உங்களுக்கு அவ்வளவு கேவலமாக தெரிகிறதா 😡
இதுல இவருக்கு குதிரை பேரம்னா என்னனு புரியவே நாளாச்சாம்..
தூய சக்தினு சொல்லிட்டு இந்த காரியத்தை எந்த முதல்வரும் செய்ததில்லை. துர்நாற்ற சக்தி விரட்டப்பட வேண்டிய கட்சி 😡
தமிழே தெரியாதவன் தமிழக பிரதிநிதியா, மக்களின் வரிப்பணத்தில் உங்க தயாரிப்பாளருக்கு ஸ்வீட் செஞ்சு குடுக்காதீங்க @CMOTamilnadu
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக கர்நாடகாவை சார்ந்த திரைப்பட (ஜனநாயகன் ) தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவை நியமித்துள்ளார் முதல்வர் விஜய் அவர்கள்
தமிழக பிரதிநிதியாக இருக்க தமிழ்நாட்டை சார்ந்த யாருக்கும் தகுதியில்லையா
நீங்க எல்லாரும் போலி மாத்திரையை Crush செய்த நபர மட்டும் தான் பார்த்து சிரிக்கறீங்க,
யாரோட ஆட்சில அவரு Crush பன்னாருங்தறத மறந்துட்டிங்களே ப்பா.
இரண்டுமே தேவையில்லாத ஆணிகள் தான்
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ