வந்தாரை வாழவைத்த இந்தத் தமிழ் மண், தன் ரத்தமும் சதையுமான உங்களை ஒருபோதும் கைவிடாது. உங்களை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லும், நீங்கள் கட்டப்போகும் 'புதிய தமிழகத்தின்' அஸ்திவாரமாக மாறும் அண்ணன் விஜய் ❤️💛❤️
உங்கள் சின்னம் விசில்❤️
@actorvijay@TVKVijayHQ#TVKVijayHQ#TVKVijay
@Anthanan_Offl@TVKVijayHQ@Jagadishbliss@BussyAnand கெட்டவனா இருந்தவன் நல்லவனா மாறக்கூடாத ஒரு வாய்ப்பு கட்சிக்கு வராதீங்க யாரும் சொல்ல மாட்டார்கள் அவர்கள் செயலால் ஏதும் தவறு இருந்தால் கட்சி விட்டு நீக்கம் செய்வாங்க விடுங்க நற்பணி செய்ய யாரு வந்தாலும் அவர்களுக்கு தடையில்லை
@PttvNewsX 6 வருசமா பிஜேபி கூட கும்மி அடிச்சுட்டு இருந்தப்ப மாற்றம் என்னாச்சு 2021 2024 தோல்வி அதுவும் அதிமுக பிஜேபி இருந்து ஒரு தொகுதி ஜெயிக்க முடியல இப்போ என்னடா கலர் கலரா ரீல் விடுற
@Seeman4TN@CMOTamilnadu@TVKVijayHQ உங்களுக்கு யாரும் ஆப்பு வைக்க வேண்டாம் நீங்களே வச்சுக்குங்க விஜய் அண்ண நடிகர வாரா கவர்ச்சியா வாரா கவர்ச்சியா வாரா என்பதை விட மக்களுக்கு ஊழல் இல்லாத ஆட்சி வழங்க வேண்டும் என்று வந்து இருக்கார் அதுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து இருக்காங்க ஆனா நீங்க வன்மம் வைதரிச்சல பேசி கேவலம இருக்கு
@HRajaBJP ஓரு வேலை கைது செய்லன என்ன பேசுவீங்க TVK இருக்கும் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை அவர் எப்படி தமிழ் நாடு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார் கேபிங்க வாயுல பேசி விமர்சனம் வேறு ஒரு ai padam போடு அவதூறு பரபும் செயல் தவறு இதுக்கு கைதா கேட்ட இது போன்று செயல் ஊக்கவைதல் பயம் இருக்காது
@polimernews மறைந்த Mgr ஜெயலலிதா இருவரும் திரைப்பட இருந்து வந்தார்கள் நீங்கள் அதை மறந்தீங்க மக்கள் உங்கள மறந்துட்டங்க என்னமோ அதிமுக இவர்தான் கண்டுப் புடிசாறு போல பேசிட்டு இருக்கிறார் விஜய் அண்ண அதிமுக திருத நினைக்கிறார் திமுக குடும்ப அரசியலை அழிக்க நினைக்கிறார் மக்களுடன் சேர்ந்து
திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ?
வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரைப்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி?
அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலிதா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்?.
கோட் சூட், போட்டோஷூட் என்று நீங்கள் பேசுவது மட்டும் பணிவான பேச்சா? பண்பான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி?
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களைப் பார்த்து, முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, மற்றும் பலராக இருந்து மங்கிப் போன தீர்ந்துபோன சக்தியாரே. இது என்ன லாஜிக் தீ.போ.ச.?
குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்திற்காக, தடம் மாறித் தடுமாறி ஓரமாக ஒதுங்கியதுதான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதூறு பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
எங்கள் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, நீங்கள் அரசியலில் கரையேற முடியாமல் தத்தளிக்கப் போவதைத் தமிழகமே பார்க்கப் போகிறது.
பொதுச் செயலாளர் என்ற முறையில் தமிழகம் முழுமையையும் பற்றிப் பேசினால் பரவாயில்லை. ஒரே ஒரு மாவட்டத்தில் பெற்ற வெற்றியை மட்டும் சிலாகிப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் மாவட்டத்துக்கு உள்ளேயே மடங்கி முடங்கி அடங்கிப் போனதாகத்தானே அர்த்தம்?
இந்த லட்சணத்தில், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்கிறாரே தீ.போ.ச.! எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம்.
கட்சியைக் காப்பாற்றவே கதறும் நீங்கள், எங்கள் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து, சிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளைகூடச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் சரி.