எங்க ஊர்ல 2300 ஓட்டு. அதுல எப்படியும் 1400 ஓட்டுக்கு மேல விஜய்க்கு தான் வரும். எந்த ரஜினி ஃபேனாவது ஓட் பூத் கிட்ட விஜய்க்கு ஓட் போடாதீங்கனு சொன்னா தலையிலயே ரெண்டு போட்டு அனுப்பிருவானுங்க. வயதான காலத்துல அடி வாங்கி சாகாம போங்கடா
ஓஹோ. நம்ம பசங்க அடிய சமாளிக்க முடியாம ஆள் சேர்க்குற கூட்டம் போல🤣🤣
நீங்க காசு குடுத்தா தான் கூட்டம் வரும். நாங்களாம் எங்க அண்ணுக்காக வந்துருக்கோம். இன்னும் லட்சம் பேர சேர்த்தாலும் எங்க கூட்டத்துக்கிட்ட நீங்க மண்டி தான் போடணும்👊
மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்//
போற போக்குல உபீசையும் கோர்த்து விட்டு போய்ட்டாப்ல....
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.