திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் வரும் என்பது கடவுள் மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொரு பக்தர்களின் நம்பிக்கை ஆகும்…
அந்த எம்பெருமான் பெருமாள் கூப்பிடாமல் நம்மால் திருப்பதிக்கு செல்ல முடியாது என்று பெரியோர்கள் சொல்வார்கள் நானும் அதை கடந்த காலங்களில் அனுபவித்து இருக்கிறேன் ஆனால் அவர் எப்போது கூப்பிட்டாலும் தவறாமல் அவரை தரிசித்து கண்ணீர் மல்க அவர் கொடுக்கும் தரிசனத்தை ஏற்றுக் கொள்வேன்…
அதேபோன்றுதான் இன்றும் எனக்கு மிகச் சிறப்பான காட்சியையும் அருள் ஆசியும் வழங்கி என்னை மெய்சிலிர்க்க வைத்த எம்பெருமான் திருப்பதி பெருமாளை வணங்கி இந்த அடியேனுக்கு அவர் கொடுக்கும் எல்லா இன்பத்,துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு அவரை இறுகப் பற்றிக் கொண்டு அவரே சரணாகதி என்று எஞ்சியிருக்கும் சில காலங்களையும் நல்ல நோக்கத்துடனும்,நல்ல செயல்களுடனும் பயணிக்கவும் நல்ல ஆரோக்கியத்துடன் என்னையும் என்னைச் சார்ந்த உறவுகளையும் வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இறைவனை வணங்கி தரிசனம் பெற்றுக் கொண்டேன் ஓம் நமோ நாராயணா என்ற மந்திர சொல்லுடன்!!! @TTDevasthanams@NainarBJP@RSSorg@annamalai_k@KesavaVinayakan@ianuragthakur@VinojBJP@ProfessorBJP@blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP@BJP4TamilNadu
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க…
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமையை கண்டு எப்போதும் அஞ்சுவதும் இல்லை அடிபணிந்து நிற்பதும் இல்லை…
ஆனால் நமக்கான உண்மையான உறவு என்று எப்போதும் இருப்பது நமது தாய்,தந்தையும் நமக்கு பிறந்த பிள்ளைகளும்,மனைவியும் மட்டுமே என்பதை சில நேரங்களில் உணர்ந்து விடுகின்றோம் பிறரால் உணர்த்தப்படுகின்றது…
எத்தனை ஆண்டுகள் மனதில் உறுதுணையும்,அன்பும்,கருணையும் அற்றவர்களை பெற்ற தாயாக நினைத்து உறவுகளாக எண்ணி ஒரு நாய்க்குட்டியை போல் அவர்களின் பின்னால் அன்புக்காகவும்,அரவணைப்புக்காகவும் ஏங்கி திரிந்து இருப்போம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்புக்காக மட்டுமே வாழ்ந்து இருப்போம் அவர்களிடம்…
அந்த அன்பு பொய்யான போலியான அன்பு என்பதை இறைவனும் நம்மை விட்டு பிரிந்த உண்மையான ஆன்மாக்களும் நமக்கு உணர்த்தி விடும் அதுதான் எனக்கும் நடந்தது கடந்த காலங்களில்…
நேற்றைய தினம் என்னை பெற்றெடுத்த தாயின் நினைவு நாளை நாங்கள் நினைவு கொள்ளும் விதமாக திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் வள்ளலார் ஆலயத்தில் அன்பானவர்களுடன் மதிய உணவை சாப்பிட்டது மிகுந்த சந்தோஷத்தை மனதுக்கு நிறைவாக இருந்தது…
போலி உறவுகள் நம்முடன் நீண்ட தூரம் பயணிக்க இறைவன் அனுமதிப்பதில்லை என்பதை நான் உணர்ந்து விட்டேன்!!!
தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்…
மாதவரம் to சோழவரம் வரை உயர்மட்ட சாலை அமைத்து தர வேண்டும் என்று உங்கள் ஆட்சியிலும் கோரிக்கை வைக்கப்பட்டதற்கு தமிழக வெற்றி கழகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்…
கடந்த திமுக @arivalayam ஆட்சியில் வைக்கப்பட்ட கோரிக்கை இன்று வரை நிலுவையில் இருக்கிறது அதற்குக் காரணம் மத்திய அரசு அல்ல கடந்த ஐந்து ஆண்டுகள் மாநில அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருந்திருந்தால் இன்று நாம் அந்த உயர்மட்ட சாலையை அனுபவித்து இருப்போம் போக்குவரத்து நெரிசலையும் தவிர்த்து விரைவான போக்குவரத்துக்கும் வழிவகை செய்யப்பட்டிருக்கும்…
இன்று வரை மாதவரத்தில் இருந்து சோழவரம் வரை ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று விமர்சிப்பதில் கவனம் செலுத்திய திராவிட மாடல் அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செல்லவில்லை என்பதே பல திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படாததற்கு காரணம்…
கடந்த ஆட்சியில் செய்த தவறுகளை தமிழக வெற்றி கழக அரசும் செய்யாமல் மக்களுக்கான அரசாங்கமாக இருந்தால் கண்டிப்பாக வரவேற்போம்!!! @TVKPartyHQ@CTR_Nirmalkumar@AadhavArjuna@nitin_gadkari@NainarBJP@RSSorg@KesavaVinayakan@ianuragthakur@VinojBJP@ProfessorBJP@blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP@BJP4TamilNadu@DMKITwing@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL Redhills Social Media Redhills SocialMedia Namma Redhills Admin Namma Redhills Padiyanallur
#people #people_infinity_ #politics #politician #bjpassamhattrick
பாஜக மூத்த தலைவர்களுக்கும் மதிப்பிற்குரிய மேல்மட்ட நிர்வாகிகளுக்கும் பாரதிய ஜனதாவின் இந்த அடிமட்ட உறுப்பினரும் தேசியவாதியுமான என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை
விடியும் முன் விழித்தால் அதுவே நல்ல தொடக்கம்…
காலம் கடந்துவிட்டதாக வருந்துவதை விட விழித்துக்கொண்டு செயல்படத் தொடங்கும் நேரமே சிறந்தது என்பார்கள்…
இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம் என்று போற்றப்படும் தமிழகம் தொன்மையான கலாச்சாரம் பிரம்மாண்டமான கட்டிடக் கலைகள் மற்றும் தத்துவ ஞானம் நிறைந்த ஒரு சிறந்த ஆன்மீக பூமியாகும் இந்த பூமியில் தேசியத்தையும்,தெய்வீகத்தையும் கொள்கையாகக் கொண்ட ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் எந்த இடத்தில் நாம் தவற விட்டு விட்டோம் என்பதை இப்போது நாம் உணர வேண்டும்…
தேவையான நேரத்தில் தேவையில்லாத பழமை வாய்ந்த ஆணிகளை அப்புறப்படுத்தி விட்டு சுவற்றை புதியதாக வெள்ளை அடித்து கரும்புள்ளிகள் வெளியே தெரியாமல் புதிய அத்தியாயத்தை உருவாக்க துணிய வேண்டும்…
30 ஆண்டுகள் 40 ஆண்டுகள் நாங்கள் இருக்கிறோம் இருந்து என்ன சாதித்தார்கள் என்பதை இனிமேலும் நாம் உணராதவரை நாம் வளர்ச்சி அடையப் போவதில்லை வளர்ச்சிக்கு முக்கிய தேவை தேவையில்லாத ஆணிகளை அப்புறப்படுத்துவதே உகந்தது…
தமிழகத்தில் பிரிந்து உள்ள இந்து அமைப்புக்களை ஒன்றிணைத்து தமிழக பாஜக செயல்பட தொடங்கினால் போதும் தமிழகத்தில் பாஜக மிக பெரிய சக்திகளாக உருவெடுக்கும் சித்தாந்த கொள்கையுடன் எவன் செயல்படுகிறான் என்று கண்டறிந்து தகுதி ஆனவன் கையில் தகுதியான பொறுப்பை கொடுத்து பாரதிய ஜனதாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதை இந்த நேரத்தில் நாம் உணர வேண்டும்…
இந்த அரிய வாய்ப்பை பாஜக மேலிடம் தவறும் பட்சத்தில் தமிழகத்தில் பாஜக படு பாதாளத்தில் போய்விடும் பிறகு இன்னொரு முப்பது ஆண்டுகள் கழித்து தான் தமிழகத்தில் பாஜக கால் பதிக்கும் நிலைக்கு தள்ளப்படும் எல்லா தவறையும் நாமே செய்துவிட்டு அடுத்தவர்கள் மீது குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை இன்றைய நிலைக்கு காரணம் நாமே நம்மைச்சார்ந்தவர்களே என்பதை இந்த நேரத்தில் தேசிய தலைமை உணர வேண்டும்…
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் தமிழகத்தில் இப்போது நல்லதொரு அரசியல் களம் வந்திருக்கிறது இந்த நேரத்தில் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டால் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம்…
நமக்கான காலம்,பலம் அல்லது சந்தர்ப்பம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது இளமை, ஆரோக்கியம் நல்ல வாய்ப்புகள் நம் கையில் இருக்கும்போதே காற்று உள்ளபோதே நமது முன்னேற்றத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும் புதியவர்களை அடையாளம் கண்டு தேசிய நீரோட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களை அடையாளம் கண்டு நாம் வரும் காலங்களில் அரசியலில் களம் காண வேண்டும்…
பாரத அன்னை போற்றுவோம்
பாரத் மாதா கீ ஜெ!!!
KRV...✍️
@AmitShah@NitinNabin@NainarBJP@RSSorg@annamalai_k@KesavaVinayakan@ianuragthakur@VinojBJP@ProfessorBJP@blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP@BJP4TamilNadu Redhills Social Media Redhills SocialMedia Namma Redhills Admin Namma Redhills Padiyanallur @RSSorg@hindumunnani_tn@imkarjunsampath@hinduupm
#people #people_infinity_ #politics #politician #bjp
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும்,
வணக்கம்.
இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர்.
நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது.
நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று.
தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம்.
இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை.
பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார்.
அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.
நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு.
அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை.
இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?
இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க.
சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.
இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல?
மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.
மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம்.
நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.
நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர்.
நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க.
நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம்.
இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை.
மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம்.
மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான்.
மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.
நான் முழு நேர அரசியல்வாதியும் இல்லை என்னுடைய தொழில் அரசியலும் இல்லை அடுத்தவர்கள் உழைப்பில் வாழ்பவனும் நான் இல்லை சுயமாக சிந்திப்பவன் எந்த ஒரு சூழ்நிலைக்காகவும்,தேவைக்காகவும் பச்சோந்தியாக மாறுபவனும் நான் இல்லை அன்றைய தேவைக்காக தன்மானத்தை அடமானம் வைப்பவனும் நான் இல்லை
நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் எவனுக்கும் நான் அடிமையும் இல்லை…
ராமன் ஆண்டாலும்,ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை…
என்னைப் பொறுத்தவரை என்னை கெடுத்து வாழ நினைத்த துரோகிகளும்,விரோதிகளும் தங்கள் தகுதியை இழந்து தன்மானத்தை இழந்து தரம் தாழ்ந்து நிற்கதியாய் இன்று அரசியல் அனாதைகளாக நின்று கொண்டிருக்கின்றனர் இது நான் எதிர்பார்த்த ஒன்றுதான் அவர்களின் இன்றைய நிலைக்காக இறைவனுக்கு நன்றி சொல்வேன்…
அதே நேரத்தில் உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கின்றேன்…
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பஞ்சாயத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் என்னுடைய தலையீடு அல்லது அந்த ஆலயத்தின் நிர்வாகத்தில் பதவிக்கு வருவது என்பது எந்த காலத்திலும் இருக்காது என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு சொல்லிக் கொள்கின்றேன்…
என்னுடைய வேண்டுகோள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான் இப்போது திரு.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் வந்திருக்கும் தமிழக அரசு அரசியல் தலையீடு இல்லாத ஆன்மீகவாதிகளை இந்த ஆலயத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆசை… @CMOTamilnadu@TVKVijayHQ@Actor_Vijay
கடந்த காலங்களில் ஆன்மீகவாதிகளே இல்லாமல் அரசியல்வாதிகளின் கைகளில் நாடகத்திற்கு வேஷம் கட்டும் நாடக தாரிகளின் கைகளில் இந்த ஆலயம் இருந்ததெல்லாம் போதும் இனிமேலாவது ஆன்மீகவாதிகளின் கைகளில் இருக்கட்டும்…
ஊர் பெரியவர்கள் முதியவர்கள் என்று ஆலயத்திற்கு சேவை செய்யக்கூடிய முக்கிய நபர்களை அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்திற்கு கொண்டு வாருங்கள்…
ஊர் பெருமைக்கும் சாமி வராமலே பெண்களைப் பார்த்ததும் சாமி வந்தது போல் நடனமாடும் நாடகதாரிகளுக்கும் பதவிக்காக பகல் வேஷம் போட்டு ஆடுகின்ற கூட்டம் இனிமேல் வேண்டாம் தயவு செய்து வேண்டாம் நான் வைக்கின்ற முதல் கோரிக்கை இது ஆலயம் இனிமேலாவது சமூக விரோதிகளின் கூடாரமாகவும்,அரசியல்வாதிகளின் கூடாரமாகவும் இருக்கக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருங்கள் என்னுடைய ஒத்துழைப்பு ஆலயத்திற்கு வெளியே இருந்து இந்த கிராமத்திற்கு எப்போதும் இருக்கும்…
நான் எல்லோருக்குமானவன் அதனால் தான் எப்போதும் என்னுடைய பதிவில் குறிப்பிடுவேன் நான் உங்களில் ஒருவன் உங்களுக்காக ஒருவன் என்று.!!!
KRV...🙏
@NainarBJP@RSSorg@annamalai_k@KesavaVinayakan@ianuragthakur@VinojBJP@ProfessorBJP@blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP@BJP4TamilNadu Redhills Social Media Redhills SocialMedia Namma Redhills Admin Namma Redhills Padiyanallur @AIADMKOfficial@arivalayam@DMKITwing Namma Redhills Admin Redhills Nanban Padiyanallur விசிக பாடியநல்லூர் பார்த்திபன் Vinoth Perumal Bjp Bala Karmegam Admk Murugan Admk Pgm Nirmala Shagul @highlight
#people #people_infinity_ #politics #politician #bjp
Thank you, Hon'ble @PMOIndia, for your greetings. The well-being of our people remains our only goal.
Transcending politics, we shall focus on the State's progress and the welfare of people of Tamil Nadu. We look forward to the Union Government’s support in this endeavor.
மரணத்தின் தருவாயிலும் மகனே தனியாக விட்டு பிரிந்து செல்ல மனம் இல்லாத தாய்.
ஆறுதல் சொல்லவும் அரவணைத்துக் கொள்ளவும் தனக்கு பின்னால் தான் பிள்ளைக்கு யாருமில்லை என்பதால் தன்னுடனே தனது கடைசி மூச்சு வரை அரவணைத்து மரணத்தை தழுவினாலோ மகனுடன் அந்த தாய் என்று தான் தோன்றுகிறது.
சில நேரங்களில் தற்கொலையை தேடும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளையும் தற்கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் தாய்மார்களை கண்டிருக்கிறோம் அது இறக்கமற்ற செயல் அல்ல தனக்கு பின்னால் இவ்வுலகில் பிள்ளைகளைப் பார்க்க அன்பு செலுத்த யாரும் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினாலேயே தற்கொலை என்ற கொடூரனிடம் பிள்ளைகளையும் பலி கொடுத்து விடுகிறார்கள் தாய்மார்கள்.
இரக்கமற்ற இறைவனுக்கு ஏனோ மரணத்தின் போது கூட மற்றவர்களின் இதயத்தை உடைக்க கூடிய செயல் செய்ய வைக்கிறான் என்று தெரியவில்லை.
ஒரு சில நிகழ்வுகளின் வழியாக ஏதோ ஒன்றை இறைவன் நமக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறார் நாம் தான் திருந்த மறுக்கின்றோம்.
இவ் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் மட்டுமே நிச்சயம் மற்றவை அனைத்தும் பொய்.
வாழும் காலத்தில் நமது கல்நெஞ்சத்தை உடைத்து எறிந்து விட்டு சிறிதளவாவது இதயத்தில் இறக்கத்தை வளர்த்துக் வளர்த்துக் கொண்டு வாழ்வோம்.
கொடூரனாக ஒரு சிலர் வாழ்ந்து வருகின்றனர் இந்த நிமிடம் இந்த நொடி இந்த நாள் நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து விட்டால் இரக்கம் நம்முடனே வந்துவிடும்.
அடுத்தவர்களுக்கு துன்பம் தருவதற்கு முன்னால் அந்த துன்பம் உனக்கு நேர்ந்தால் அதனுடைய வலி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள் வாழும் காலத்தில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற தாரக மந்திரத்துடன் செயல்படுவோம்.
KRV....✍️
என்னை வீழ்த்த நினைக்கும் அரசியல் விரோதிகளுக்கு மத்தியிலும் உறவுகள் என்ற போர்வையில் இருக்கும் துரோகிகளுக்கு மத்தியிலும் போலியான நண்பர்களுக்கு மத்தியிலும்.
ஒவ்வொரு முறையும் நான் மீண்டு வந்து கொண்டு தான் இருக்கிறேன் இறைவனுடைய அருளால் மட்டுமே.
இந்த வாழ்க்கையில் தான் எத்தனை தோல்விகள் எத்தனை தடைகள் எத்தனை துன்பங்கள் எத்தனை துயரங்கள் அத்தனையும் கடந்து மீண்டும் மீண்டும் உங்கள் முன்னால் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல இறைவனும் என்னை நேசிக்கும் உங்களைப் போன்ற ஒவ்வொருவரும் தான் உங்கள் அனைவருக்கும் மீண்டு வரும் ஒவ்வொரு நேரத்திலும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நன்றி என்றும் உங்கள் KRV...🙏