தவெக கட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையாய் இருந்தாலும்
நடவடிக்கை எடுக்கப்படும்💥
மக்களுக்கான ஆட்சி தவெக மக்களுக்கான முதல்வர் @TVKVijayHQ ❤️
சென்னை ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N.ஆனந்த் மற்றும் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இணைந்து குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (5.6.2026) தலைமைச் செயலகத்தில், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
தேர்தல் மேடையில் கொடுத்த வாக்குறுதியை மறக்காமல், மக்களின் கோரிக்கையை கேட்டவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை சீரமைப்பு பணிகளை முன்னெடுத்த அமைச்சர் @Keerthana4VNR அவர்களுக்கு வாழ்த்துகள். 👏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், மதுரை தியாகராஜர் மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்
திரு. க. ஹரி தியாகராஜன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில்,
லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 18,600 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay
L&T to invest ₹18,600 crore in Tamil Nadu.
The MoU, signed in the presence of CM Joseph Vijay, will bring three major projects to the state and create 8,200 employment opportunities, marking the first major industrial investment agreement signed under the new government.
Tamil Nadu has secured a major industrial investment commitment of ₹18,600 crore as Larsen & Toubro (L&T) signed a Memorandum of Understanding with the State Government in the presence of Chief Minister Joseph Vijay at the Secretariat today.
The proposed investments, spread across Kanchipuram, Coimbatore and Tiruvallur districts, are expected to create employment opportunities for 8,200 people. The projects include a ₹15,000 crore data centre expansion in Kanchipuram, a ₹2,500 crore electronics manufacturing facility in Coimbatore, and a ₹1,100 crore expansion of L&T’s shipbuilding yard in Tiruvallur.
The investment package is being viewed as a significant step towards the government’s vision of transforming Tamil Nadu into a $1.5 trillion economy by 2036 and marks the first major industrial MoU signed under the leadership of Chief Minister Joseph Vijay.
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay