தமிழ்நாடு சீரழிந்து நிற்பதன் 100-வது நாள் இன்று!
மாற்றத்தைத் தேடுகிறோம் என்று எண்ணி, ஏமாற்றத்தின் படுகுழியில் விழுந்து நிற்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
பாதிக்கப்பட்ட எளிய மக்களின் கதறல் குரல் முதலமைச்சரின் காதுகளில் விழாமல், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' பதிவிட்டுக்கொண்டே அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்து, கஞ்சா மற்றும் சட்டவிரோதப் பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எளிய மக்களின் வாழ்வாதாரமும், இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி நிற்பதுடன், ஒட்டுமொத்த மாநிலமும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
#நாசமாகும்தமிழ்நாடு
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
கடுமையான உழைப்பைப் போட்டு, தமிழ்நாட்டை மீட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம்.
ஆனால், இந்த வளர்ச்சி போதுமா நமக்கு? போதாது! சொல்லுங்கள்... தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? நிச்சயம் போதாது! தமிழ்நாட்டை, உலக அளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
@Gopi_govind93@itisprashanth டேய் தற்குறி கலைஞர் மூன்று பொண்டாட்டி வைத்து பொழைத்தார் யாரையும் துரத்தி விடல எந்த பொண்டாட்டி கோர்ட் வாசல் ஏறல திமுக சன்னி வாயிலே வைச்சி இருக்காமா முட்டு கொடுக்கங்க டா
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!
அவற்றைக் காப்பது நம் கடமை!
உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.
தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன்.
அந்த உறுதியோடுதான், #DravidianModel-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.
கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்!
தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!
நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!
சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்.
இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக!