தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது!
தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்டியும் தொடர வ��ழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன்.
@KanimozhiDMK @geethajeevandmk
கொண்ட கொள்கைக்காக உறுதியோடு உழைக்கும் செயல்வீரர் பனையூர் பாபு அவர்களை வரவேற்கிறேன்!
ஏற்கெனவே இருந்த இயக்கத்தைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உரை
இன்று (07-06-2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, செய்யூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்கள�� தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழாவில் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:
செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் நம்முடைய பனையூர் பாபு அவர்களையும், அதேபோன்று அவரோடு கைகோத்து வந்திருக்கும் உங்களையும் நான் வருக வருக வருக என்று வரவேற்கிறேன். மாவட்டக் கழகத்தின் சார்பில் நம்முடைய சுந்தர் அவர்கள் ஏற்��னவே வரவேற்றிருந்தாலும், தலைவர் என்ற முறையில் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் உங்கள் அத்தனை பேரையும் நான் வருக வருக வருக என்று வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகளில் ஒருவராக உங்களை இணைத்துக்கொள்ள வந்திருக்க உங்கள் அனைவரையும், இந்த இயக்கத்தின் முதன்மைத் தொண்டனாக மிகுந்த மகிழ்ச்சியோடு வாஞ்சையோடு வருக வருக வருக என்று நான் வரவேற்கிறேன்.
பனையூர் பாபு அவர்களைப் பற்றி நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், கடந்த ஐந்து வருடங்களாக நான் சட்டமன்றத்தில் அவரைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்ததுண்டு. சட்டமன்றத்திற்கு வரும்போது அமைதியாக வருவார், அமைதியாகச் செல்வார்; ஆனால், அதே சமயம் சட்டமன்றத்தில் எழுந்து பேசும்போது ஆக்கப்பூர்வமான க��ுத்துக்களை, தன்னுடைய தொகுதிக்குச் சம்பந்தப்பட்டிருக்கும் பிரச்சினைகளை அங்கே வலியுறுத்திப் பேசக்கூடியவர். ஒரு கொள்கைவாதியாக, ஒரு இலட்சியவாதியாக, ஒரு போராளியாகத் தன்னுடைய கருத்துகளை முன்வைத்துப் பேசக்கூடியவர்.
பொதுவாகச் சிலர் ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறுகிறபோது, மற்றொரு இயக்கத்தில் சென்று சேருகிறபோது, சிறிது விமர்சனம் செய்து, ஏன் தரம் தாழ்ந்து கூடப் பேசும் பாணியைப் பார்த்திருக்கிறோம். ஆனால் நம்முடைய பாபு அவர்கள் அப்படி அல்ல. அரசியல் மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் அடக்கத்தோடு சுட்டிக்காட்டி, ஏற்கனவே ஓர் அறிக்கையாக வெளியிட்ட அந்தச் செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள், நானும் படித்தேன். அப்படி வெளியிட்ட அந்தச் செய்திகளில் யாரையும் புண்படுத்தும் வகையில் எந்த வார்த்தையும் இல்லை; அமைதியாக, அழகாக, அடக்கமாக அவர் கையாளும் விதம்... இப்போது க��டப் பேசும்போது நீங்கள் பார்த்திருக்கலாம்... யாரையாவது விமர்சனம் செய்து பேசினாரா? இல்லை! எதற்காக இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறோம், அதைத்தான் அவர் இங்கே வலியுறுத்தி, வற்புறுத்தி, அழகாக எடுத்துச் சொல்லி அவர் பேசியிருக்கிறார். கொண்ட கொள்கைக்காக உறுதியோடு உழைக்கும் ஒரு செயல்வீரர்தான், நம்முடைய பனையூர் பாபு அவர்கள். அதற்கு அவருடைய அரசியல் பயணமே சாட்சியாக அமைந்திருக்கிறது.
2007-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து, 2009-இல் இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் பொறுப்பேற்று, அந்த அமைப்பிற்கு ஓர் ஊடக வலிமையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தொலைக்காட்சி ஒன்றையும் அவர் உருவாக்கி இருக்கிறார். அந்த ஊடகப் பிரிவின் முதன்மைச் செயலாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். அப��படிப்பட்ட அந்த உழைப்பாளர்தான் 2021-ஆம் ஆண்டு செய்யூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் உயர்ந்தார்.
அவரே சொன்னார், சட்டமன்றத்தில் நம்முடைய திராவிட மாடல் அரசின் சார்பில் செய்திருக்கும் சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொன்னார். சட்டமன்றத்தில் அதற்கான கேள்விக் கணைகளை எல்லாம் தொடுத்தார், கோரிக்கைகளை எல்லாம் எடுத்து வைத்தார். தனக்காக அல்ல, தன்னுடைய தொகுதிக்காக, தனது தொகுதியில் இ��ுக்கும் மக்களுக்காக அவர் அந்தப் பணியை ஆற்றி இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவரே குறிப்பிட்டார், ஒட்டுமொத்தமாக ஆதிதிராவிட மக்களின் நலனுக்காகக் கோரிக்கைகளை நாங்கள் வைத்தோம். "என்னுடைய சார்பில் மட்டுமல்ல, என்னுடைய இயக்கத்தின் சார்பில் கூட நாங்கள் கோரிக்கைகள் வைத்தோம், அதையெல்லாம் அவர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி��் தந்திருக்கிறார்" என்பதைப் பட்டியலிட்டு, குறிப்பிட்டுச் சொன்னார்.
பரமக்குடியில் சாதி எதிர்ப்பு சுயமரியாதைப் போராளி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்தது திராவிட மாடல் அரசுதான்.
அதேபோன்று, ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயர்களில் சாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது, அந்த அடையாளங்களை நீக்க வேண்டும் என்று சொல்லி அதையும் சட்டமாக்கித் தந்தோம்.
அதேபோன்று, தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அமைத்துத் தந்தோம்.
அதேபோன்று, அருமைப் பெரியவர், பெருந்தலைவர் எல். இளையபெருமாள் அவர்களுக்குச் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கத்தை அமைத்துக் கொடுத்தோம்.
இங்கே நந்தனத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... எம்.சி. ராஜா மாணவர் விடுதி. அது ஒரு காலத்தில் எப்படி இருந்தது? இப்போது அண்ணா சாலையில் வருகிறபோது, எம்.சி. ராஜா மாணவர் விடுதி என்ற அந்த���் புதிய கட்டிடத்தைப் பார்க்கிறபோது நமக்கே பிரமிப்பாக இருக்கிறது, அதையும் புதுப்பித்து உருவாக்கித் தந்திருக்கிறோம்.
குறிப்பாக நம்முடைய பனையூர் பாபு அவர்களின் செய்யூர் தொகுதிக்குச் செய்யப்பட்ட திட்டங்களைப் பற்றி அவரே சொன்னார். இருந்தாலும் நானும் அதை வழிமொழியக் கடமைப்பட்டிருக்கிறேன்:
செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவ��யல் கல்லூரி,
புதிய சிப்காட் தொழிற்சாலை,
அரசு மருத்துவமனை, 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலைப்பின்னல் கூடங்கள், கடல் சீற்றத்தால் ஏற்படும் கடல் அரிப்பைத் தடுத்துக் குடியிருப்புகளைப் பாதுகாக்கக் கடலோரங்களில் கருங்கல் கொட்டும் தடுப்புச் சுவர்கள், பத்தாயிரம் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்... இவ்வாறு பல்வேறு சாதனைகள் செய்யப்��ட்டிருக்கிறது என்று சொன்னால், "நாங்கள் செய்தோம்" என்றால் அதற்குக் காரணமாக இருந்தவர், உங்களுடைய செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த பனையூர் பாபு அவர்கள்தான்.
இப்படிப்பட்ட ஆற்றலுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல... “தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள்” என்று அறிக்கை வெளியிட்ட ஒரு க��ள்கைவாதிதான், இங்கே வந்திருக்கும், இந்த இயக்கத்தில் இன்று தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய பனையூர் பாபு அவர்கள்.
அவர் இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் வந்து சேர்ந்திருப்பதில் நீங்கள் எல்லாம் எவ்வாறு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறீர்களோ, அவர் எப்படி மகிழ்ச்சியோடு வந்திருக்கிறாரோ, அதைவிடப் பன்ம���ங்கு மகிழ்ச்சியை நாங்கள் அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
"புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்" என்று நம்முடைய பாபு அவர்கள் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் பயணத்தைத் தொடர ஒரு சரியான இயக்கமாக இருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உணர்ந்து இங்கே வந்து அவர் இணைந்திருக்கிறார். அவரையும் அவரோடு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் இந்த இயக்கத்தின் தலைவனாக மட்டுமல்ல, இந்த இயக்கத்தின் தலைமைத் தொண்டனாக அவரை வருக, வருக, வருக என்று வரவேற்கிறேன்.
தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அப���படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்குத் தயாராக நாங்கள் இருக்கிறோம், "நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம்" என்று நமக்கு இன்றைக்குத் துணையாக வந்து சேர்ந்திருக்கும் பாபு அவர்களையும், உங்களையும் நான் மீண்டும் வருக வருக வருக என்று வரவேற்கிறேன்.
நீங்கள் ஏற்கனவே இருந்த இயக்கம்... அந்த இயக்கத்தைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, செய்யவும் கூடாது; விமர்சிக்கத் தேவையில்லை. ���னென்றால் அண்ணா அவர்கள், "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்றுதான் ��ொல்லி இருக்கிறாரே தவிர, யாரையும் குறைத்து மதிப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதைத்தான் இங்கே நம்முடைய பாபு அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். ஏதாவது ஒரு வார்த்தை விமர்சித்து பேசினாரா? இல்லை! குறைத்துப் பேசினாரா? இல்லை! அதுதான் பாபு, அதுதான் பனையூர் பாபு. எனவே, அப்படிப்பட்ட பாபு அவர்கள் இன்றைக்குத் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார், நான் அவரை மீண்டும் மீண்டும் வருக வருக என வரவேற்கிறேன்.
இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒரு ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதெல்லாம் நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் நான் சொன்னேன், "ஆறு மாதங்களுக்கு இதைப்பற்றி நான் பேசப் போவதில்லை" என்று. ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்து கொண்டிருக்கிறது; வந்��ுவிட்டது. அதைப் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. ஆறு மாதம் அல்ல, ஐந்து மாதம் அல்ல, நான்கு மாதம் அல்ல... மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் இன்றைக்கு நீங்களும் வந்து இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, கழகம் ஈடுபடும் எந்தப் பணிக���ாக இருந்தாலும், அந்தப் பணிகளுக்கு நீங்களும் ஒத்துழைப்பு தருவதற்காக வந்திருக்கிறீர்கள். அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். அண்ணா அறிவாலயம் மட்டுமல்ல, கலைஞர் அரங்கத்திற்கே வந்திருக்கிறீர்கள்; அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் வருக வருக வருக என்று வரவேற்��ு விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் ச���்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, சி.ஐ.டி காலனி இல்லத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களுடன் மரியாதை செலுத்தினோம்.
#KalaignarForever
சென்னை தெற்கு மாவட்டம், சைதை கிழக்கு பகுதி, 170ஆவது வட்ட @dmk_youthwing அமைப்பாளர் சகோதரர் வி.சந்துரு - கு.பிரித்திஷா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு இணையர்களை வாழ்த்தினோம்.
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்து மணமக்களின் இல்வாழ்க்கை சிறக்கட்டும்!
75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று @dmk_youthwing தலைமையகமாக விளங்கி வருகிறது.
இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.
28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான நாளை, காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கல��ஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி.
இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
#KalaignarForever #Kalaignar103
ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, தணியாத தாகத்துடன் சினிமாவை அணுகும் இயக்குநர் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
அவரது பேரார்வம், புதிதாக வரும் இளைஞர்களுக்கும் பாடம்!
மனித மனங்களின் ஆழத்தை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் மேலும் பல படைப்புகளைத் திரு. மணிரத்னம் அவர்கள் வழங்கி மகிழ்விக்க விழைகிறேன்.
இசை���ால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja