சல்லியர்கள் @ottplus தளத்தைத் தொடர்ந்து @ahatamil தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்றுள்ளது.
தொடர்ந்து அமேசான் @PrimeVideo வில் பிப்ரவரி 14 ந்தேதி முதலும், @bookmyshow வில் பிப்ரவரி 17ந் தேதியும் வெளியாகவுள்ளது. உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் இதயத்தில் இடம் பிடிக்கட்டும் #சல்லியர்கள்.
புறக்கணிக்கப்பட்ட ஒரு கல் வீட்டின் மூலைக்கல்லாகுமாம். திரையரங்குகளில் வெளியிடமுடியாத சல்லியர்கள் @ottplus தளத்தைத் தொடர்ந்து தற்போது ஆஹா தளத்திலும் காணும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். #salliyargal in @ahatamil. விரைவில் அமேசான் தளத்திலும் வெளியாகும்.
#Salliyargal
8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில்,
ஒரு தமிழர் வரலாற்றுக்கே
திரையரங்குகள் கிடைக்கவில்லை.
கோடிகோடியாகப் பணத்தைக்கொட்டி நடிகர்களை வளர்த்துவிடும் ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்ததாக நான் அறியவில்லை.
நாம் பணம் செலுத்தும் இடத்தில்
அதிகாரம் உருவாகிறது.
ஆனால் அந்த அதிகாரத்தை
நம் கதைகளுக்காக
பயன்படுத்த மறுக்கிறோம்.
பிறர் கதைகளுக்காக
கோடிகளை செலுத்தும் நாம்,
நம் வரலாற்றுக்கு
ஒரு டிக்கெட்டுக்குக் கூட
குரல் கொடுக்காமல்
மௌனமாக நிற்கிறோம்.
நம் அடையாளத்தைப் பேசும் ஒரு கலைஞனைத் தெருவில் நிற்க விடுகிறோம். 💔
மாற்றம்
திரையரங்குகளில் அல்ல—
நம் முன்னுரிமைகளில்
தொடங்க வேண்டும்.
உலகம் முழுக்க
மரியாதை இல்லாதவர்களை
மக்கள் தண்டிக்கிறார்கள்.ஆனால்
தமிழர்கள் மட்டும்
அவர்களை கொண்டாடுகிறார்கள்.
தமிழர் கதை பேசும் “சல்லியர்கள்” திரைப்படத்திற்கு
திரையரங்குகள் மறுக்கப்படுகின்றன.
ஆனால் உலகெல்லாம் வாழும் அதே தமிழர்கள்,
எம்மை மதிக்காதவர்களின் படங்களை
மாபெரும் வெற்றியாக மாற்றுகிறோம்.
மதிக்காதவர்களை
கொண்டாடும் இனம்,
தன்னைத் தானே
தோற்கடிக்கிறது.
இது தற்செயலல்ல.
இது நம்மை நாமே புறக்கணிக்கும் பழக்கம்.
எல்லோருக்கும் தமிழன் என்றா இளிச்ச வாயன்.
தன் இனத்திற்குள் மட்டும்
ஒற்றுமை இல்லை.
ஆனால்
மற்றைய இனத்தவர்களுக்கு
அன்பும் மரியாதையும்
அளவில்லாமல் வழங்குகிறோம்.
எப்போது நாம் எம் இனத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறோம்.எம்மை நாமே மதிக்காத போது வேற்றினத்தவர்கள் எப்படி மதிப்பார்கள்?
சுயமரியாதை இல்லாத இனத்துக்கு
வெளி மரியாதை கிடையாது.
தம்மை மதிக்காதவர்களை உலகம் எப்படி நடத்துகிறது என்பதை பார்ப்போம் 👇
Black community
கருப்பின மக்களை அவமதித்த நடிகர்கள், நிறுவனங்களை
முழுமையாக Boycott செய்தது
→ மன்னிப்பு கேட்டாலும் ஆதரவு திரும்பவில்லை..
பாலஸ்தீன் விவகாரம்
அடக்குமுறைக்கு ஆதரவாக நின்ற
உலகப் புகழ் பிராண்டுகளை
பல நாடுகள் சந்தையிலிருந்து தள்ளி வைத்தன..
பிரான்ஸ்
தங்கள் மொழி, பண்பாட்டை அவமதித்த
ஹாலிவுட் கலாச்சார ஆதிக்கத்தை
அரசு அளவிலேயே கட்டுப்படுத்தினர்..
சீனா
சீனாவை அவமதித்த
நடிகர்கள், படங்கள், நிறுவனங்கள்
ஒரே நாளில் முழு சந்தையிலிருந்து காணாமல் போனது..
தென் கொரியா
கொரியாவை அவமதித்த வெளிநாட்டு கலைஞர்களை
ரசிகர்களே நிரந்தரமாக புறக்கணித்தனர்..
முஸ்லிம் உலகம்
மதத்தை அவமதித்த தயாரிப்புகள், பிராண்டுகள்
நாடு முழுவதும் அகற்றப்பட்டன
→ “Market decides respect” என்பதற்கான உதாரணம்
அவர்கள் அனைவரும் செய்தது ஒன்றே —
மரியாதை இல்லாத இடத்தில்
பணம் இல்லை.
புகழ் இல்லை.
ஆதரவு இல்லை.
ஆனால் நாம்?
எம்மை ஒரு பொருட்டாக கூட
கருதாதவர்களை
பொங்கல் திருவிழாவாக
கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
நாம் எம்மை மதிக்காதவர்களை
ரசித்து ரசித்து
வெற்றி கொடுக்கும் வரை,
நம் கதைகள்
திரையரங்குகள் இல்லாமல்
அனாதையாகவே நிற்கும்.
“சல்லியர்”
ஒரு படம் மட்டும் அல்ல.அது தமிழராகிய
👉 நம் அடையாளம்.
👉 நம் வரலாறு.
👉 நம் வலி.
நாம் உண்மையாகவே புறக்கணிக்க வேண்டியது
எம்மை மதிக்காதவர்களின்
படைப்புகளையே.
மாற்றத்தை நாங்களே தொடங்குவோம். 🔥
🎬 Salliyargal –(2026)
Must watch
Highly Recommended ✅
இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் பண்ணணும்னு எவ்வளவோ முயற்சி எடுத்தாங்க.
ஆனா கடைசில தமிழ்நாட்டுல வெறும் 27 தியேட்டர் தான் கிடைச்சுச்சு.
அதுக்கப்புறமும் “பரவாயில்ல… படம் மக்களுக்கு போய் சேரணும்.
எனக்கு லாபம் முக்கியம் இல்ல”னு சொல்லிட்டு OTTல ரிலீஸ் பண்ணிட்டாங்க.
👉 இங்கேயே தெரிஞ்சுக்கலாம்…
பணம் இல்ல, நோக்கம் தான் முக்கியம்ன்னு.
✊ Salliyargal யாரு?
இந்த படத்தோட டைட்டிலே எல்லாருக்கும் உடனே புரிஞ்சிருக்காது.
Salliyargalன்னா யாருன்னு சொன்னா,
நம்ம விடுதலைப் போராட்ட காலத்துல,
மருத்துவ உதவி, காயமடைந்த போராளிகளை காப்பாத்துறது,
ரகசியமாக சிகிச்சை தர்றது மாதிரி
மிக முக்கியமான பங்கு வகிச்ச டாக்டர்கள்தான் Salliyargal.
அந்த காலகட்டத்துல,
•அவங்க என்ன வேலை செஞ்சாங்க?
•அதுக்காக எவ்வளவு துன்பம் அனுபவிச்சாங்க?
•உயிரை பணயம் வைத்து எப்படிச் செயல்பட்டாங்க?
👉 இதையெல்லாம் தான் இந்த படம் பேசுது.
📽️ படத்தின் அனுபவம்
உண்மையா சொன்னா,
**“1974ல என்ன நடந்துச்சு?”**ன்னு எனக்கும் இந்த படத்துக்கு முன்னாடி தெளிவா தெரியாது.
ஆனா இந்த படத்தை பார்த்த பிறகு,
👉 *“அப்போ இப்படி எல்லாம் நடந்திருக்கா!”*ன்னு
ஒரு புரிதல் கிடைக்குது.
•படத்தில் கமர்ஷியல் மசாலா அதிகம் இல்ல
•மெதுவா நகரும்
•ஆனா உண்மை சம்பவங்களின் வலி ஒவ்வொரு காட்சியிலும் இருக்கு
அதுதான் இந்த படத்தோட பெரிய பலம்.
⭐ முடிவா சொன்னா…
👉 இது ஒரு பொழுதுபோக்கு படம் கிடையாது
👉 இது ஒரு வரலாற்று நினைவூட்டல்
👉 தமிழ் மக்களுக்கு தெரிய வேண்டிய ஒரு மறக்கப்பட்ட பக்கம்
Salliyargal
📌 எல்லாரும் பார்க்க வேண்டிய படம்
📌 குறிப்பாக தமிழ் வரலாற்றை தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா பார்க்கணும்
1974ல என்ன ஆச்சு?
Salliyargal யாரு?
அவங்க பங்கு என்ன?
👉 இதற்கெல்லாம் பதில் இந்த படத்துல இருக்கு.
👉 தரமான முயற்சி. தவற விடாதீங்க. 👏
@kittutamilan@KenKarunaas@sureshkamatchi
அரங்கம் நிறைந்த காட்சி ,
இனி ஒவ்வொரு திரையரங்கிலும்
தமிழரின் வரலாறு பேசும் .
சல்லியர்கள் திரைப்பட குழுவினர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐
@Seeman4TN@Sunandha_TS
@CheranDirector உங்களுடைய மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி sir... ஆக சிறந்த படைப்பாளியிடம் இருந்து வரும் பாராட்டுகள் மதிப்புக்குரிய விருதுகளுக்கு ஒப்பானது...❤️✨🙏🏾
ஒரு முகம் மனதில் அப்படியே உறைந்து நிற்கிறது. டாக்டர் நந்தினி. அற்புதம். இந்த கதாபாத்திர தேர்வு, இலங்கையாக காண்பிக்க பட்ட இடங்கள், எளிமையான உருவாக்கம்,ஒரு இயக்கம் எவ்வளவு நேர்மையாக தனது மக்களுக்கான உரிமை போரை நிகழ்த்தியது என்ற பெரும் வரலாறை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் கிட்டு
சல்லியர்கள் திரைப்படத்தை உலகெங்கும் கொண்டு சேர்த்த எம் தமிழ் இனத்திற்கு மனமார்ந்த நன்றிகள். வாய்ஸ் ஆஃப் குளோபல் ரைட்ஸ்க்கும் பெரு நன்றிகள்.
அண்ணனின் வழி நடத்துதல் எங்களின் வழித்தடமாக இருப்பதில் பெருமைகொள்கிறோம். எங்களை அணைத்துக்கொள்ளும் அனைத்து சொந்தங்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். நன்றி மறவோம். வெளிநாட்டு வாழ் மக்கள் படம் பார்க்க இணைப்பு பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் இந்த எண்ணை தொடர்புகொள்ளவும். 91 98403 32666
#சல்லியர்கள்
Salliyargal (2026)
Make sure to watch and support the new movie about Tamil Eelam, Salliyarkal. It was directed by the same director, Kittu, who made Methagu 1 and produced by the famous Tamil actor Karunas. The movie received rave reviews from actors, politicians, and directors such as Vetrimaaran. It faced trouble getting a theatrical run due to censorship. Every bit of support means we will get more movies that tell our stories authentically.
It’s available on OTT. Plus, leave a review on IMDb after watching the movie.
Link: https://t.co/bp1ZT29m71
ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம்!
ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது. ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே ஆகும். அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்காக பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க்கும் செயலேயாகும். இந்தப் பெருநிறுவனங்கள் ஆந்திராவில், கர்நாடகாவில் அம்மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்கும் முடிவெடுக்குமா? புறக்கணித்த பிறகு தொடர்ந்து அம்மாநிலங்களில் இயங்கிடத்தான் முடியுமா?
திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழித்து, குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குத் தரப்படும் பாகுபாட்டையும் நெருக்கடியையும் தவிர்த்து அனைவருக்கும் சரியான சமமான வாய்ப்பை வழங்குவதற்கு, தமிழ்த்திரைப்படங்கள் திரையிடலுக்குத் திரையரங்கங்கள் ஒதுக்குவது குறித்த நியாயமான கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தடைகளையும், நெருக்கடிகளையும் சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ‘சல்லியர்கள்’ போன்ற தமிழர் வீரவரலாற்றை விளக்கும் திரைப்படங்களுக்குப் பேராதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்பெறச் செய்வதன், இனி இதுபோன்ற திரைப்படங்களைப் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டியது உலகத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெருங்கடமையாகும்.
ஆகவே, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் கடந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஈக வரலாற்றைச் சொல்லும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
https://t.co/pAuuRTB0Vu
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
https://t.co/NXF0vPt0Ps
குறைந்த பொருட்செலவில் சகோதரர் கிட்டுவால் படைக்கப்பட்ட தரமான படைப்பு #சல்லியர்கள்.
தமிழீழ போராட்ட களத்தில் மருத்துவர்களின் பெரும் தியாகம் குறித்த அற்புதமான படைப்பை தன்னுடைய தனிப்பட்ட தமிழ் உணர்வின் காரணமாய் இப்படத்தை வெளியிடும் அண்ணன் சுரேஷ் காமாட்சி