தன் சாதியை தவிர பிறசாதிகளை ஒழிப்பது எப்படி சாதி ஒழிப்பு ஆகும்; சமூகநீதியின் காவலர்கள் நாங்கள், சாதி ஒழிப்புப் போராளிகள் நாங்கள் என்று வெட்டிப்பேச்சு பேசுகின்றனர் – சீமான் பேச்சு.
#Seeman#NaamTamilarKatchi#SEITHI
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் பலி என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
#uzbekistan#SEITHI
தமிழ்நாட்டில் புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்குமேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவிப்பு. 31ம் தேதி இரவு கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
#NewYear#SEITHI
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
#PonniyinSelvan2#manirathanam#Vikram#Trisha#aiswaryarai#SEITHI
தமிழக அரசின் பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாத நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கரும்புடன் பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
#MKStalin#SugarCane#PongalGift#SEITHI
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிச.06-ல் வெளியான ‘Avatar: The way of Water’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 7,000 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Avatar#JamesCameron#SEITHI
மத்திய அரசின் ஆதார் அட்டை எண் போல தமிழ்நாடு அரசு சார்பில் 'Makkal ID' என்ற அடையாள எண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; இதில் 10 – 12 இலக்கங்களிலான எண் இடம்பெற்றிருக்கும்
#Aadharcard#SEITHI
வெறும் 10 படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தென்னிந்தியாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் பலர் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவேயில்லை – நடிகை ஜெயசுதா
#Jayasudha#KanganaRanaut#padhmashree#SEITHI
பொங்கல் பரிசில் கரும்பையும் சேர்த்து வழங்கவேண்டி விவசாயிகள் போராடுவது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், ‘கரும்பு தான் வயலில், சந்தையில் எல்லாம் இருக்கிறதே’ என்று அவர் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
#Duraimurugan#sugarcane#PongalGift#SEITHI
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கொலை செய்யப்பட்டிருக்கலாம்; உடற்கூராய்வின் போது அவரது உடலில் காயங்கள் தென்பட்டன – உடற்கூராய்வு மேற்கொண்ட மருத்துவரின் தகவலால் அதிர்ச்சி
#SushantSinghRajput#bollywoodactor#SEITHI
இந்துக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கூரிய கத்திகளை வைத்துக்கொள்ளவேண்டும் – லவ் ஜிகாத் விவகாரத்தைக் குறிப்பிட்டு பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் பேச்சு
#LoveJihad#Prakyasinghthakur#SEITHI#BJP
உங்கள் மகள்களையோ, சகோதரிகளையோ குடிப்பழக்கம் உள்ள ஆண்களுக்கு திருமணம் முடித்துத் தராதீர்கள். என் மகன் குடிப்பழக்கத்தால் தான் உயிரை விட்டார். அவர்களை விட ரிக்ஷா ஓட்டுபவர்கள், கூலித்தொழிலாளிகள் மேலானவர்கள் – மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்.
#koushalkishore#Drinks#SEITHI