தமிழ்நாடு நாள் (01-11-2024)
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்!
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் திருநாள்!
இம்முறை சென்னை பெரம்பூர் பழநி ஆண்டவர் கோயில் தெருவில் மாலை 05 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! கொண்டாடுவோம்!
வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி இருமடங்காக திமுக அரசு அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்கு��ியது.
ஏற்கனவே மோடி அரசு நடைமுறைப்படுத்திய ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கட்டுக்கடங்காமல் உயர்ந்த கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் கனவு தடைபட்டுபோனது. அக்கனவினை முற்று முழுதாகத் தகர்க்கும் வகையில் சொத்து வரி, பத்திரப்பதிவுக் கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றைப் பன்மடங்கு உயர்த்திய திமுக அரசு தற்போது வீடு வரைபட அனுமதி கட்டணத்தையும் உயர்த��தியுள்ளது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்து பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தொழில்வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என அடுத்தடுத்து வரிகளை உயர்த்தி மக்களின் தலையில் தாங்க முடியாத நிதிச்சுமையைச் சுமத்தி வாட்டி வதைத்து வருகிறது.
மலருக்குச் சேதாரம் இல்லாமல் தேனை உறிஞ்சும் வண்டினைப்போல் ஆளும் அரசுகள் மக்களை வதைக்காமல் வரியைப்பெற வேண்டும். மாறாக "வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு" என்று தமிழ்மறை கூறுவதுபோல் பகற்கொள்ளையர்கள் புரியும் வழிப்பறிபோல அரசு பன்மடங்கு வரியை உயர்த்தி வற்புறுத்தி வசூலிப்பது மக்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
ஏற்கனவே, பெருநகரங்களில் வீடு கட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அரசு அதிகாரிகள் முதல் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் வரை லஞ்சம் தர வேண்டியுள்ளதால் நடுத்தர மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
அரசுத்துறையில் நீண்டகாலமாக நடைபெறும் இத்தகைய ஊழலை ஒழிக்கத் திறனற்ற திமுக அரசு, தன் பங்கிற்கு வரியைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. கட்டிய வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிப்பதை வாடிக்கையாகக் கொண்ட திமுக அரசு இப்போது ஏழை - நடுத்தர மக்கள் வீடு கட்டவே முடியாத நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.
ஓடாய் தேய்ந்து உழைக்கும் பணத்தை வாடகை செலுத்தியே வாழ்நாளைக் கழித்த தமிழ் மக்கள் தங்கள் தலைமுறையாவது நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகச் சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு, வீடு கட்ட முனைந்தால் அதனையும் வரி என்ற பெயரில் வலுக்கட்டாயமாகப் பறிப்பது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
"தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த
தடையை நீக்குவது குறித்து தமிழக அரசு
ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது?"
சென்னை உயர் நீதிமன்றம்
உங்கள் கருத்து..?
#Toddy#Tamilnadu#chennaihighcourt
விக்கிரவாண்டியில் மக்களை ஆடு மாடு அடைப்பது போல பட்டியில் அடைத்து வைத்து சாப்பாடு சாராயம் கொடுத்து ஓட்டுக்கு 7000/- வரை கொடுத்து திமுக போராடியும் நாம் தமிழ��் கட்சி சென்ற பாராளுமன்றத்தேர்தலில் வாங்கிய வாக்குகளை தாண்டி 10000 வாக்குகளுக்கு மேலாக பெற்று வருகிறது என்பது வெறும் செய்தியல்ல. நம்பிக்கை.👍
மதுரையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை தடுக்கத் தவறிய, டாஸ்மாக் கடையை மூடு மறுக்கும் திமு அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் @arun_jeyaseelan அவர்கள் உரை
https://t.co/5aQN1vFSNJ
#நாம்தமிழர்கட்சி
மருத்துவர்களின் ஈகத்தைப் போற்றும் இந்நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தரவேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட பிற உயிர்கள் ��திர்கொள்ளும் நோய்களுக்கும் உற்ற நேரத்தில் உரிய மருத்துவமளித்து உயிர்காக்கும் உன்னதப்பணி புரிவதாலேயே மருத்துவர்களை, கண் முன்னே நடமாடும் கடவுளாக மானுடச் சமூகம் போற்றி வருகிறது. உலகில் ஏற்பட்ட பல பெருந்தொற்று நோய்களிலிருந்து மருத்துவத்துறையினர்தான் மனித உயிர்களைக் காத்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்கள் கொரோனா கொடுந்தொற்று முதல் தற்போதைய கள்ளச்சாராயக் கொ��ுமைகள் வரை இரவுபகல் பாராத அர்ப்பணிப்பு மிக்கக் கடும் உழைப்பினால், தங்கள் இன்னுயிரைப் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றினர் என்பது நம் ஒவ்வொருவரும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய பெருந்தொண்டாகும்.
இந்தியா முழுவதும் மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகின்ற இன்று (சூலை-1) மக்கள் உயிர்காக்க அரும்பாடாற்றி வரும் மருத்துவர் பெருந்தகைகள் அனைவருக்கும் வாழ்த்துகள���யும், பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
கருணை உள்ளமும், கனி��்த இதயமும் கொண்ட போற்றுதற்குரிய மருத்துவப்பெருமக்களை குறையேதும் இன்றி பாதுகாக்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையாகும். ஆனால், உயிர்களைக் காக்க நாள்தோறும் போராடிவரும் மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இன்றைக்கு தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுக்கணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதைப்போல கடந்த அதிமுக அரச���னைப்போன்று , தற்போதைய திமுக அரசும், ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும். ஆட்சிக்கு வந்தால் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளைக் கடந்த பிறகும் அவர்களின் கோரிக���கைக்குச் செவிசாய்க்காமல், காலம் கடத்துவது மருத்துவர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் பலமுறை வலியுறுத்திய பிறகும், அதற்காக மருத்துவப்பெருமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், உரிய ஊதியம் வழங்காமல் திமுக அரசு இறும���ப்புடன் தட்டிக் கழிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ஆகவே, தமிழ்நாட்டிலுள்ள 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர் என்பதை உணர்ந்து, மாண்பமை மருத்துவப்பெருமக்களின் பெருந்தொண்டிற்கு மதிப்பளிக்கும் வகையில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, அரசாணை 354-ன் படி, ஊதியப்பட்டை நான்கை உடனடியாக வழங்க வேண்டும் என்��து உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தோழர் #மலையரசன் தமிழ்தேசிய பேரியக்கம்
தோழர் #ஜீவா முல்லைப்பெரியாறு கால்வாய் பாசனவிசாயிகள் பாதுகாப்பு இயக்கம்
தோழர் #கம்பூர்செல்வராஜ் கனிமவளக்கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு
ஆகியோர் கண்டன உரை.
தமிழர்களை வஞ்சிக்கும் அண்டைமாநிலங்கள், மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு தூங்குகிறதா?
தமிழர்கள் இழந்த நிலங்களை மீட்க மீண்டும் எல்லை மீட்பு போராட்டம்!?
தோழர் கதிர்நிலவன் அவர்கள் மாவட்ட செயலாளர் தமிழ்தேசியப் பேரியக்கம், மதுரை.
👇👇👇
https://t.co/LRs8sTyQ6C
முல்லைப் பெரியாறு அணை விவகாரம், மதுரையில் தமிழ்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.
தோழர் கதிர்நிலவன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு.
https://t.co/iQOZTql6Mj
*அறிவிப்பு*
தீவிபத்து ஏற்பட்டுள்ள குவைத் நாட்டில் பணிபுரியும் தமிழர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றால். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிய கீழ்க்காணும் எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
+965 6907 4905
+965 507 98684
+965 551 93901
*செந்தமிழர் பாசறை குவைத்*
@stp_kuwait