வெள்ளி திரையிலும் சரி சின்னத்திரையிலும் சரி தமிழர்களுக்கு இடமே இல்லை முக்கியமாக சன் குடும்ப தொலைக்காட்சிகளில் ஒரு தமிழ் குடும்பத்தை சார்ந்தவர்கள் யாருமே இல்லை அங்கு பணி செய்யும் அனைவருமே மாற்று மொழியினர் முக்கியமா தெலுங்கர்கள்
கருணாநிதி வாழ்க l!!
ஸ்டாலின் வாழ்க!!
உதயநிதி வாழ்க!!
இன்பநிதி வாழ்க !!
என்று நீ மற்ற தலித் தலைவர்கள்
போல கூவி இருந்தால்
நீங்கள் நன்றாக இந்த மண்ணில் வாழ்ந்திருக்கலாம் அண்ணா..
உண்மையை இந்த திராவிட ஆட்சியில் நீங்கள் பேசலாமா?
#ஆழ்ந்த இரங்கல் அண்ணா.
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனத் தலைவரும்,
சமூகச்செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான அண்ணன் எஸ்.எம். பாக்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான அண்ணன் பாக்கர் அவர்கள், இசுலாமியப் பெருமக்களின் நல்வாழ்வாழ்விற்கும், அடிப்படை உரிமைக்கும் ஆதரவாகவும், அவர்கள் மீதான அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வாழ்நாள் முழுவதும் களத்தில் முன்நின்று போராடிய சமரசமற்ற போராளியாவார். இசுலாமியப் பெருமக்கள் சட்டத்தின் பெயரால் ஒடுக்கப்படும் போதெல்லாம் அவரது குரல் முதலாவதாக ஓங்கி ஒலிக்கும். நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்காக பாடுபட்ட அவரது அர்ப்பணிப்புமிக்கப் பெருவாழ்வு மனித உரிமை போற்றும் அனைவராலும் என்றென்றும் நினைவுக்கூரப்படும். தனிபட்ட முறையில் என்மீது பேரன்புகொண்ட அண்ணன் பாக்கர் அவர்களின் திடீர் மறைவு என் மனதினை மிகவும் துயருறச் செய்கிறது.
அண்ணன் பாக்கர் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், மனித உரிமை. போராளிகளுக்கும், இசுலாமியப் பெருமக்களுக்கும், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அண்ணன் பாக்கர் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!