இது ஜனநாயக நாடா? மக்களை துன்புறுத்தும் அரசபயங்கரவாதம். எப்போது இவற்றிலிருந்து விடுதலை? 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் அரசியல் அதிகாரத்தின் தோல்விக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
கட்டவிழ்கிறது மோடியின் உலகமகா ஊழல் - உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில் விசாரணை அவசியம்!
கடந்த 16-ம் தேதி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் பாஜக அரசு நடத்தும் பணவசூல் குறித்து பதிவு செய்திருந்தேன். இந்நிலையில் புற்றுநோய் மருந்துகளின் அநியாய விலை குறித்து நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் - நோயாளிகளிடம் பணம் சுரண்டும் பார்மா நிறுவனங்களின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் - "Absolute rampage and broad daylight dacoity" என கடுமையாக விமர்சித்திருக்கிறது. அதாவது "இது ஒரு பட்டப்பகலில் நடைபெறும் கொள்ளை எனவும் நோயாளிகள் மீதான வெறித்தனமான வன்முறை" எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
புற்றுநோய் என்பது நோயாளியை மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தையே நடுத்தெருவிற்கு கொண்டு வரும் ஆபத்தான நோய். இந்தியாவில் புதிதாகக் கண்டறியப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2024-ல் 15.33 லட்சம் நோயாளிகளும், 2025-ல் 15.70 நோயாளிகளும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அது போன்று புற்றுநோயால் மரணமடைந்தோர் 2024-ல் 8.49 லட்சம் பேர், 2025-ல் 8.69 லட்சம் பேர்.
இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் 2018 முதல் ₹13,000 கோடி மதிப்பில் 68 லட்சம் கேன்சர் சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்திற்கு ஒன்றிய அரசு 2024–25-ல் Rs 7,500 கோடி; 2025–26-ல் Rs 9,406 கோடி; 2026–27-ல் Rs 9,500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இந்தியாவில் புற்றுநோய் மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிட்சைகள் அடிப்படையில் ஆண்டொன்றுக்கு சுமார் 1 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் மருந்துகள் மட்டுமே 26,000 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்த பொதுநல வழக்கில் வெளியாகியிருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. அவ்வழக்கில்:
- கேன்சர் நோய்க்கான மருந்தின் பேக்கேஜில் அச்சடிக்கப்பட்டிருக்கும் விலை ரூ.27,000/-.
- அதே மருந்தை மருத்துவமனைகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்யும் விலை ரூ.2,700/-.
- ஒரு மருந்து விற்பனையில், விற்பனையாளருக்குக் கிடைக்கும் லாபம் 24,300/-.
- வெறும் 2700/- ரூபாய்க்கு வாங்கி 27000/- ரூபாய்க்கு விற்பது எவ்வளவு பெரிய பகல்கொள்ளை?
இந்த அநியாய வசூலானது, வசதி படைத்த நோயாளிகளிடம் நேரடியாகவே வசூலிக்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம், நேரடியாகவும், அரசின் காப்பீடு திட்டம் மூலமும் பிடுங்கப்படுகிறது. காப்பீட்டு திட்டத்தில் இது எவ்வாறு நடைபெறுகிறது என்றால், புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம் ரூ.27,000/-ற்கான ரசீதை நோயாளியின் ஆயுஷ்மான் பாரத் அக்கவுண்ட் மூலம் National Health Authority website-ல் பதிவேற்றம் செய்து விடும். பின்பு அது process செய்யப்பட்டு அதற்கான தொகை மருத்துவமனையின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.
இது 1830-ல் பிரான்சில் நடைபெற்ற பிராங்கோயிஸ் - ஜோசப் பிளாங்க் ஊழலை விட அறிவுபூர்வமான ஊழல்.
ஆந்திர உரிமையாளர்களின் சென்னையை சார்ந்த பிரபல நிறுவனம் இந்தியாவில் 78 மருத்துவமனைகளையும், 7000-ற்கும் மேற்பட்ட பார்மசிகளையும் நடத்துகிறது. தினசரி எத்தனை நோயாளிகளிடம் இந்த சுரண்டல் நடைபெறுகிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த தில்லுமுல்லுற்காக அதே நிறுவனம் electoral bond மூலமாக பாஜகவிற்கு 10 கோடி வழங்கியுள்ளது. இது தவிர மறைமுக டீலிங் மர்மமானது. இந்நிறுவனத்தின் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். பாஜக கூட்டணியில் இருக்கும் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் இக்குடும்பத்தோடு தொடர்புடையவர்.
26,000 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் புற்றுநோய் மருந்துகள் துறையில், முக்கிய தயாரிப்பாளர்களாக விளங்கும் Sun Pharma, Cipla, Dr. Reddy’s Laboratories, Biocon Biologics, Natco Pharma போன்ற நிறுவனங்கள் பாஜகவிற்கு பல நூறு கோடிகளை வாரி வழங்கியுள்ளன.
ஏற்கனவே, சி.ஏ.ஜி. அறிக்கையில், ஏற்கனவே இறந்து போன 2,14,000 பேருக்கு சிகிச்சை அளிப்பதாகவும், ஒரே நோயாளி ஒரே நேரத்தில் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது எனவும், 9999999999 போன்ற டம்மி மொபைல் எண்கள் மூலம் முறைகேடு நடைபெற்றிருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தது.
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்திற்கு ஒன்றிய அரசு 2024 முதல் 2027 வரையிலான நிதியாண்டுகளில் 26,000 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இதனை அப்படியே பயனாளிகளுக்கு கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, இது போன்ற தில்லுமுல்லுகள் மூலம் பின்வாசல் வழியாக பாஜக கொள்ளையடிப்பதை மேற்குறிப்பிட்ட பிரபல சென்னை மருத்துவ நிறுவனத்தின் நன்கொடையும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பலநூறு கோடி நன்கொடையும் காட்டிக்கொடுக்கிறது.
பாஜக அரசு அப்பாவி நோயாளிகள் மீது கூட பரிவு காட்டவில்லை. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்தில் ரத்தக்காட்டேரியாக நோயாளிகளின் உயிரை குடிக்க களமிறங்கியிருக்கிறது பாஜக. இந்த கொள்ளையில் பல்வேறு மர்மங்களும், பல பெருந்தலைகளும் பிணைந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
#Cancer #MedicalScam #SupremeCourt
கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா-வின் முயற்சி உண்மையிலேயே இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு தகுந்த எடுத்துக்காட்டு. தேசப் பாடல் என்ற போர்வையில் வந்தே மாதரம் பாடல் மூலம் ஒரு மதத்தின் அடையாளத்தை பிற மதத்தார் மீது திணித்து, மதச்சார்பின்மைக்கும், மத சுதந்திரத்திற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து இன்று அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
டி.எம். கிருஷ்ணா போன்ற வெகுசிலரின் பரந்த மனப்பான்மை தான் இந்தியாவை இன்னும் இந்தியாவாகவே நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவையும், இந்தியாவின் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை போன்ற மேன்மைமிக்க அடையாளங்களை பாதுகாக்க டி.எம். கிருஷ்ணா போன்ற சிறந்த மனிதர்கள் கரங்கோர்க்க வேண்டும்.
#VandeMataram
#Secularism
#TMKrishna
பாஜகவில் இருந்து கொண்டு Gen z, Gen alpha -க்களுக்கு இப்படி ஆலோசனை சொல்லலாமா?
பாஜகவோ, ஜன சங்கமோ, RSS-சோ ஆங்கிலேயருடன் கரங்கோர்த்து சக இந்தியர்களை காட்டிக் கொடுத்ததை தவிர இந்த நாட்டிற்கு என்ன நல்லது செய்திருக்கிறீர்கள்?
- தேசத்தந்தை காந்தியை சுட்டுக் கொன்றீர்கள்.
- ஜன சங்கத்தின் தந்தை ஷியாம பிரசாத் முகர்ஜீ இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து பிரிட்டிஷாருக்கு ஆதரவாகப் போராடச் சொன்னார். சாவர்க்கரும் அதையே சொன்னார்.
- சாவர்கர் ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் பெற்று வந்தார்.
- Quit India Movement-ஐ நசுக்க பிரிட்டிஷ் ஆளுநருக்கு பாஜ நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி கடிதம் எழுதினார்.
- கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று கடிதம் வாயிலாகக் கேட்டுக் கொண்டார்.
- இறுதியாக ஆங்கிலேய அரசில் பணியாற்றிய அரசு ஊழியர் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் பாடலை தேசிய பாடல் ஆக்கியிருக்கிறீர்கள்.
- பாஜகவை பொறுத்தவரை சதி ஒழிப்பு, விதவை மறுமணம், சிறுவர் திருமணம், தீண்டாமை, சாதி, மனுஸ்மிருதி போன்ற இந்துத்துவ மூட நம்பிக்கைகளில் ஆங்கிலேயர் கை வைத்தது தான் பிடிக்கவில்லையே தவிர பிரிட்டிஷாருடன் மற்றபடி ஒருதாய் பிள்ளைகளாகத் தான் இருந்தனர்.
"உனக்கு குடுக்கப்பட்ட வேலையை, உனது சாதிக்கு குடுக்கப்பட்ட வேலையை செய் - அது தான் தர்மம் என்று மனுஸ்மிருதி சொல்கிறது" என்று வாசகம் விட்ட அண்ணாமலை இன்று அதே தர்மத்தை அடித்து நொறுக்கி குப்பைதொட்டியில் போட்ட தந்தை பெரியாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய நிலை எழுந்திருக்கிறது.
வாழ்க தந்தை பெரியாரின் புகழ், வளர்க தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை!
திருவனந்தபுரம் கௌடியார் பகுதியில் நீலம் கல்ச்சுரல்ஸ், தலப்பாவு நடத்திய “Rhythm of Revolt” கலைத் திருவிழாவில் கலந்து கொண்டேன்.
நம் மண்ணின் பாரம்பரியத்தையும், சாதியால் விளைந்த சமூக அவலங்களையும், இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் தங்களது கலைப்படைப்புகள் மூலம் படம்பிடித்துக் காட்டிய கலைஞர்களின் அபார திறன் மிகுந்த பாராட்டிற்குரியது.
திருப்பூரில் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்த மதவெறி கும்பலின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. மதக்கலவரத்தை தூண்டும் அமைப்புகளை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.
திருப்பூரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இடத்தில் அவர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தபோது, மதவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சிலர் அத்துமீறி நுழைந்து மக்களை தாக்கும் வகையில் நடந்துகொண்டதாக வெளியாகியுள்ள காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஒருவரின் வழிபாட்டுரிமையைப் பறிப்பதற்கு எந்த மதவாத குழுவுக்கும் உரிமை இல்லை. வழிபாட்டு இடம் தொடர்பாக சட்டரீதியான பிரச்சினை இருந்தால், அதை விசாரித்து சட்டப்படி முடிவெடுக்க வேண்டியது அரசின் கடமையே தவிர சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள எந்த அமைப்புக்கும் உரிமை இல்லை.
காவல்துறையினர் முன்னிலையில் இந்த அத்துமீறல் நடந்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. காவல்துறை சட்டத்தை மீறுபவர்களுக்கு முன் அமைதியான பார்வையாளராக இருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய நிர்வாகத் தோல்வியாகும்.
இந்தியா ஒரு வளர்ந்து வரும் ஜனநாயக நாடு. பொருளாதார வளர்ச்சி மட்டுமே முன்னேற்றத்தின் அடையாளமல்ல. மத சகிப்புத்தன்மை, சிறுபான்மையினரின் பாதுகாப்பு, மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி ஆகியவையும் நாட்டின் வளர்ச்சியின் அளவுகோல்கள்.
அரசமைப்புச் சட்டம் உறுதி செய்யும் சமத்துவம் மற்றும் மதச்சுதந்திரம் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் உரியது.
எனவே, இந்தச் சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவல்துறையின் செயல்பாடு விசாரிக்கப்பட்டு, கடமையில் அலட்சியம் அல்லது பாரபட்சம் காட்டிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டத்தை மீறுபவர்களைப் பாதுகாப்பது காவல்துறையின் பணி அல்ல, சட்டத்தை மீறுபவர்களை தண்டிப்பதே அதன் கடமை.
வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்போம்.
மத நல்லிணக்கத்தைக் காப்போம்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவோம்.
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்.
வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21 அன்று) மாலை 4 மணி முதல் சென்னை நந்தனம் YMCA திடலில் CPM - (Constitution Protection Movement) சார்பில் நடைபெற இருக்கும் அரசமைப்புச்சட்ட பாதுகாப்பு மாநாடு குறித்து, நேற்று மாலை நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதுதான் தமிழ்நாடு....
காலையிலிருந்து சமூக வலைத்தளங்களில் குவிந்த கண்டனங்கள்.... தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கங்களின் துரித நடவடிக்கைகள்..... எல்லாம் சேர்ந்து..... சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகத்தின், சுதந்திர தின நிகழ்ச்சி நிரலை மாற்ற வைத்திருக்கிறது....
நம் உயிரினும் மேலான தமிழ்த்தாய் வாழ்த்து, நாளைய சுதந்திர தின விழாவின்போது அனைத்து நீதிமன்றங்களிலும் ஒலிக்கும்....
வாழ்க தமிழ்....
வெல்க தமிழ் நாடு....
இளைஞர்களின் குரலை ஒடுக்குவது தீர்வல்ல. அவர்கள் குரலைக் கேட்பதே ஜனநாயகம்.
நம் உரிமைகளை நிலைநாட்ட ஒன்று கூடுவோம்.
நாடு முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, சமத்துவம் மற்றும் தங்கள் எதிர்காலத்திற்கான உத்தரவாதம் குறித்து போராடி வருகின்றனர். அவர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாத நிலையில், கேள்வி கேட்கும் குரல்களுக்கு தடியடி, கைது, அடக்குமுறை என பதிலளிப்பது ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை சிதைக்கும்.
கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, அமைதியாகக் கூடும் உரிமை, அரசை விமர்சிக்கும் உரிமை ஆகியவை சலுகைகள் அல்ல, மாறாக அரசமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகள்.
இளைஞர்களை எதிரியாகப் பார்க்காமல், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே அரசின் கடமை.
சிவில் சமூகத்தினர், சிறுபான்மை சமூகங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் ஒன்றுபட்ட குரலாக ஆகஸ்ட் 21 ல் நடைபெறவிருக்கும் மாநாட்டில்,
சமத்துவம், சமநீதி, சம உரிமைகள் மற்றும் சகோதரத்துவம் போன்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களைப் பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சமூக, அரசியல் மற்றும் சிவில் சமூக ஆளுமைகள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
அரசமைப்புச் சட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட,
ஒவ்வொரு குடிமகனின் கண்ணியமும் சம உரிமையும் உறுதி செய்யப்பட ஜனநாயகக் குரல்களை ஒன்றிணைப்போம்.
காஷ்மீரில் Article 370 நீக்கம் !
இது அரசியல் பழிவாங்கலா?
மாநில உரிமை என்னாச்சு?
2019 வரை Article 370-ன் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீரின் அரசமைப்புச் சட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அந்த மாநிலம் ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலம் என்பதால்தானே தவிர வேறு என்ன ?
ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மறு கண்ணுக்கு சுண்ணாம்பா?
அரசமைப்புச் சட்டத்தின் Article 14 உறுதி செய்யும் சமத்துவம் எங்கே?
கூட்டாட்சித் தத்துவம் எங்கே?
மக்களின் ஜனநாயக உரிமை எங்கே?
மதத்தின் அடிப்படையில் அரசின் அணுகுமுறை மாறினால், அது அரசமைப்புச் சட்டத்தின் சமநீதிக்கு எதிரானது இல்லையா?
Now the Court has spoken, Will the Modi Government listen? When even the Court calls for a response, how long will the Government remain silent?
The Delhi High Court has issued notice to the Centre on Sonam Wangchuk’s hunger strike, seeking a response and dialogue.
A peaceful fast cannot be met with endless silence. Dialogue is a constitutional duty, not a political choice. Modi government should not delay any more. @abhijeet_dipke
Talk. Resolve. Protect democracy.
Dear Citizens,
Can anyone give even one solid reason why Dharmendra Pradhan should continue holding his post?
- 93+ NEET-linked student suicides since 2021 (India Today)
- 14,488 total student suicides across India in 2024 alone (NCRB)
- Repeated exam failures: NEET, UGC-NET, CUET, CBSE (Paperleaks, Malpractices, Delays)
After repeated misgovernance and administrative failures... just one reason?
Today marks the 16th day of Sonam Wangchuk’s fast in solidarity with the @CJP movement. Yet, the Modi government continues its deafening silence, not even a sincere attempt for a dialogue.
This peaceful agitation seeks justice for lakhs of students affected by examination irregularities, and the resignation of the Union Education Minister as a measure of political accountability.
When young people and respected public figures are compelled to risk their health to protect the future of India’s students, the government’s refusal even to negotiate is a grave indictment of its commitment to democracy.
Every day of silence weakens public trust. The Modi government must immediately open negotiations and respond to these legitimate demands with the seriousness they deserve.
The Gujarat government’s new Anti-Radicalisation SOP is deeply alarming because it does not intend only for identifying criminals, it begins treating ordinary Muslim religious practices as signs of suspicion.
According to the SOP, keeping a beard, wearing a niqab, using Arabic words, performing Itikaf in a mosque, studying in a madrasa, or expressing concern for Muslims suffering anywhere in the world can become reasons for surveillance and police dossiers.
This is not policing crime; it is policing a community’s identity.
India’s Constitution does not permit the State to treat any citizen as suspicious simply because of their religion, dress, language, or religious practices. Such an approach weakens the secular foundation of our Republic, creates fear among minorities, and divides society on religious lines.
If today one community is profiled for practising its faith, tomorrow the same principle can be used against any other community. A democratic government must act against crimes and violence—not against religious identity.
Protecting national security is essential. But protecting the Constitution is equally essential. Security must be based on evidence, not on religion.
குற்றம் குற்றமே...!
எங்கு நடந்தாலும், எப்போது நடந்தாலும், யாரால் - யாருக்கு நடந்தாலும், குற்றம் குற்றமே... அவை களையப்பட வேண்டுமே தவிர, அது பாதிக்கப்பட்டவருடைய தவறுகளால் தான் விளைந்தது என குற்றத்தை நியாயப்படுத்த கூடாது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் குற்றங்களுக்கு முட்டுக் கொடுப்பதை விட, அதைக் குறைப்பதற்கான வழிவகைகளைத் தேட வேண்டும் என்பதை பொறுப்புணர்வோடு நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன்.
25 ஆண்டுகளில் குமரி 50 மீட்டர் கடலுக்குள் போய்விட்டது என்றால் ஏற்க முடிகிறதா?
இந்தியாவின் தென்கோடி முனை 3 புறமும் கடல்களால் சூழப்பட்டுள்ளதால், பரந்த முக்கோண வடிவிலான வால் போன்ற நிலப்பகுதி சக்திவாய்ந்த கடல் அலைகளையும், சீற்ற அதிர்வுகளையும் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. ஆண்டுதோறும் 1.2 மீட்டர் அளவு நிலம் முதல் மிகவும் அபாயகரமான பகுதிகளில் 6 மீட்டர் வரை நிலம் கடலில் மூழ்குவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக முள்ளூர்துறை, இரயுமன்துறை, பூத்துறை, நீரோடி, மிடாலம், இரவிபுத்தன்துறை போன்ற பகுதிகளில் இந்த புவியியல் மாற்றத்தை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். இதனை 100 ஆண்டுக்கணக்கில் தோராயமாக ஒப்பிட்டால், குறைந்தபட்சம் 100 மீட்டர் நிலம் கடலுக்கடியில் சென்றிருக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் வளர்ச்சி என்ற கோணத்தில், மனிதரால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் இயற்கையின் இயல்பான கடலரிப்பு நடவடிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும். இதில் IREL தாது மணல் அள்ளும் திட்டம் பெரும் பங்கு வகிக்கிறது.
இத்திட்டம் குமரியில் ஏன் நிரந்தரமாகக் கைவிடப்பட வேண்டும் என்பதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன.
1. மேற்கூறியபடி, குமரி கடற்கரைகள் கடந்த 25 ஆண்டுகளில் 50 மீட்டர் வரை கடலுக்குள் மூழ்கியிருக்கிறது என்றால் குமரி மாவட்டத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று தான் பொருள். இந்தியப் பெருங்கடலில் குமரி மாவட்ட கடற்கரைகள் எப்போதும் சக்தி வாய்ந்த அலைகளை எதிர்கொள்ளும் அபாயகரமான சூழலில் அமைந்துள்ளதால் IREL -ன் தாதுமணல் அள்ளும் திட்டம் இந்த அபாயத்தை மேலும் வீரியமாக்குகிறது.
2. குமரி கடற்கரைகளில் அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், இனி மீட்டெடுக்க முடியாத வகையில் அழிந்து வருகின்றன. இப்பகுதிகள், Olive Ridley, Leatherback Turtle, Green Turtle, Hawksbill, and Loggerhead; Whale Shark, Sawfish; போன்ற கடல்வாழ் உயிரினங்கள், 14 hard coral types, soft corals, Zoanthidae, black corals, sea fans; Halophila ovalis, Seaweeds போன்ற கடல் தாவரங்களின் மிக முக்கியமான வாழ்விடங்கள்.
3. மீன்வளம் குறைதல், மீனவர்கள் அணுகுவதற்கு தடை போன்ற காரணிகளால் கடலோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் கடல்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதால் கடலோர மக்களின் குடியிருப்புகள் பாதிப்பிற்குள்ளாகும் நெருக்கடி நிலை ஏற்படுகிறது. IREL தாதுமணல் திட்டத்தினால் தமிழ்நாட்டிற்கும், குமரி மாவட்டத்திற்கும் பேரிழப்பு ஏற்படுகிறதே தவிர, குமரி மக்களின் வாழ்வாதார அடிப்படையிலோ, வணிக அடிப்படையிலோ, மாவட்டத்தின் வளர்ச்சியின் அடிப்படையிலோ எந்தவிதத்திலும் பயனில்லை.
ஒன்றிய மோடி அரசு 2014 முதல் சுற்றுச்சூழல், காடுகள், இயற்கை வளங்கள் ஆகியவற்றின் நலனுக்கு எதிராகவே சட்டங்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அதன் வரிசையில் 2025 செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி அரியவகை கனிமங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்த இனிமேல் பொது மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை என கொண்டுவரப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான அணுகுமுறை. இந்நிலையில் தமிழக அரசு இப்பிரச்னையையை தொலைநோக்கு பார்வையுடனும், பொறுப்புணர்வோடும் அணுக வேண்டும்.
2020-ல் அதிமுக அரசு இத்திட்டத்திற்கு இசைவு அளித்தது. ஆனால், கடந்த ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பொதுமக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து IREL நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலிக்கவில்லை.
இச்சூழலில் இந்திய கண்டத்தில் குமரி மாவட்டம் நிலைபெற்றிருக்க வேண்டுமெனில் IREL போன்ற திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது காலத்தின் கட்டாயம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 10.06.2026 அன்று வெளியிட்ட அரசாணையை இரத்து செய்ய வேண்டும்.
#IREL #NaturalResources #Environment #Coastal #Kanyakumari @CMOTamilnadu
“பெட்ரோல்-டீசலில் ₹75,000 கோடி இழப்பை அரசே ஏற்றுக்கொண்டது; அதனால் லிட்டருக்கு ₹10 கலால் வரியை குறைத்தோம்” என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
ஆனால் சில முக்கியமான கேள்விகளுக்கு பிரதமரின் பதில் என்ன?
1. தேர்தல் காலத்தில் விலை ஏன் உயரவில்லை?
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற காலத்தில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிந்த பிறகே தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, வெறும் 11 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ₹7.5 உயர்த்தப்பட்டது.
2. பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனங்கள் உண்மையில் நஷ்டத்திலா?
IOCL லாபம்
• 2010-11 – ₹7,445 கோடி
• 2013-14 – ₹7,019 கோடி
• 2017-18 – ₹21,346 கோடி
• 2020-21 – ₹21,836 கோடி
• 2023-24 – ₹39,619 கோடி
• 2025-26 – ₹36,802 கோடி
BPCL லாபம்
• 2010-11 – ₹1,547 கோடி
• 2013-14 – ₹4,061 கோடி
• 2017-18 – ₹7,919 கோடி
• 2019-20 – ₹2,683 கோடி
• 2021-22 – ₹8,789 கோடி
• 2023-24 – ₹26,674 கோடி
• 2025-26 – ₹23,303 கோடி
HPCL லாபம்
• 2010-11 – ₹1,539 கோடி
• 2013-14 – ₹1,734 கோடி
• 2017-18 – ₹6,357 கோடி
• 2019-20 – ₹2,637 கோடி
• 2021-22 – ₹6,383 கோடி
• 2023-24 – ₹14,694 கோடி
• 2025-26 – ₹17,175 கோடி
இந்த பட்டியல், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டி வருவதை காட்டுகின்றன.
3. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிபொருள் மீதான வரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹4.7 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது என்று பல்வேறு அரசு மற்றும் பட்ஜெட் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அப்படியிருக்க,
- இப்படி இருந்தும் கச்சா எண்ணெயின் விலை பெருமளவு குறைந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காதது ஏன் ?
- பொது மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க ஏன் முன்வரவில்லை?
- தனியார் நிறுவனமான Nayara Petroleum விலையை குறைக்க முடிந்தபோது, அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் ஏன் முடியவில்லை?
தரவுகள் அடிப்படையிலான இந்தக் கேள்விகளுக்கு மோடி அரசு தெளிவான பதில் அளிக்க வேண்டும்.