Chennai, Tamil Nadu: Manithaneya Makkal Katchi (MMK) MLA M. H. Jawahirullah says, "During the DMK regime, the then Governor R N Ravi thought himself to be above the state government. What is a Governor's Address? A Governor's Address is a statement prepared by the government of the day, which should be read by the Governor. The Governor doesn't have any right to make changes in that address..."
Chennai, Tamil Nadu: Manithaneya Makkal Katchi (MMK) State President and MLA M.H. Jawahirullah says, "Manithaneya Makkal Katchi's special general council meeting was convened today, in which more than 3,500 members as well as special invitees participated in the deliberations. Nineteen resolutions were passed in this general council meeting..."
Israel's military operation "destroyed the Palestinian health system" in Gaza, bombing hospitals & arresting healthcare workers. #TamilsWithPalestine#StopGazaGenocide
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
நேற்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் ஒன்றிய அரசின் தோல்விகளைச் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்.
நேற்று இரவு வெறுப்புணர்வவுடைய ஒருவர் சு வெங்கடேசன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமரைக் குறித்து எப்படித் தவறாகப் பேசலாம் என்று கேட்டு விட்டு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் மிகக் கேவலமான முறையில் கெட்ட வார்த்தைகளையும் பேசியிருக்கிறார்.
ஆக்கப்பூர்வமான வகையில் தனது நாடாளுமன்றப் பணிகளைச் செய்து வரும் சுவெங்கடேசன் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மக்கள் பணியைச் செவ்வனே செய்து வருபவர் மீது கொலை மிரட்டல் விடுத்தவரை உடனடியாகக் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு.
எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
#சுவெங்கடேசன் #SuVenkatesan
@sunnewstamil@News18TamilNadu@ZeeTamilNews@ThanthiTV@sathiyamnews@PttvNewsX@pttv_tweets@dinathanthi@DinakaranNews@maalaimalar@ZeeTamilNews@PTI_News@Kalaignarnews
எனது கோரிக்கையை ஏற்று குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மங்லம்பேட்டையை சேர்ந்த இரு சகோதரர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் நிதியுதவி அறிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
#kuwaitfire@CMOTamilnadu
உத்தரப்பிரதேசத்தில் இந்து முஸ்லிம் சமூகப் பிளவை உருவாக்கும் பாஜக அரசுக்குக் கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல்
பகுதியில் உள்ள ஷாஹி் ஜாமா பள்ளிவாசலில் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை எதிர்த்துஅறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று முஸ்லிம்கள்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
1991ல் இயற்றப்பட்ட வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டம்
ஆகஸ்ட் 15, 1947க்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் குறித்த உரிமை கோரல்கள் குறித்து புதிய வழக்குகளோ சட்ட நடவடிக்கைகளோ எடுக்க இயலாது என வரையறுத்துள்ளது. இந்தச் சட்டம் விதித்துள்ள தடையை மீறி உபி மாநிலம் சம்பலில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட சாஹி ஜாமா பள்ளிவாசலில் ஆய்வுகள் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளிவாசலை இரண்டாம் முறை ஆய்வு செய்வதற்காக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஆணையாளர் தலைமையில் ஆறு நபர் குழுவினருடன் சங்கி கும்பல் ஒன்றும் நுழைவதற்கு முயன்ற போது பிரச்சினை எழுந்தது.
காவல்துறை தரப்பில் போராட்டக்காரர்கள் கல்விச்சு நடத்தியதாகவும் அதற்கு எதிராகக் கண்ணீர்ப் புகை கொண்டு வீசியும் ரப்பர் குண்டுகளால் சுட்டும் கூட்டத்தைக் கலைத்தோம் என்று கூறி வருகின்றனர்.
பொது மக்களைக் கலையச்
செய்வதற்குக் கண்ணீர்ப் புகை கொண்டு பயன்படுத்துவது போதுமானது. துப்பாக்கிச் சூடு நடத்தும் போது முழங்காலுக்குக் கீழேதான் சுடப்படவேண்டும் என்பது விதி. அதனை மீறி அவசர கதியில் ஆய்வுக்கு உட்படுத்தியதையும் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.
இந்து முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே பிளவையும் பாகுபாட்டையும் உருவாக்கப் பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகிறது. ஒற்றுமையுடன் வாழும் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்துவது என்பது மாநிலத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பயன் விளைவிக்கும் செயல் அல்ல.
துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட நயீம், நோமன் மற்றும் பிலால் ஆகியோரின்
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து தலையிட்டு நீதி விசாரணை நடத்திப்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் சிறுபான்மை சமூகத்திற்குப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையான இந்தியாவை உருவாக்க மத அடிப்படைவாத சிந்தனையாளர்களுக்கு எதிராக
எதிர் வினையாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இப்படிக்கு.
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
#SambhalJamaMasjidSurvey
#SambhalJamaMasjid
#SambhalPolice
#SambhalMosqueRow
@sunnewstamil@News18TamilNadu@PTTVOnlineNews@news7tamil@ZeeTamilNews@rajnewstamil@TamilTheHindu@THChennai@thatsTamil
பட்டாசு நம் கலாச்சாரமும் கிடையாது, பண்பாடும் கிடையாது, கடந்த 40-50 ஆண்டுகளாகதான் நாம் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுகிறோம்.
நான் ஏன் பட்டாசு வெடிப்பதில்லை?
சக மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும் துன்பத்தையும், தீங்கையும் தர விரும்பவில்லை.
#crackersfreeDiwali#crackersban