Saffron | Proud Hindu | Nationalist | Social Worker | Hare Krishna | பெருமை வாய்ந்த தேசியவாதி |அறிவுசார் ஆளுமை உள்ள மனிதாபிமானமிக்க சமூக சேவகர்| வாழ்க வளமுடன்!
வங்காளப் பஞ்சத்தின் கோரப் படங்களைப் பற்றியும், மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து அவர்களின் உடல்கள் ஆறுகளில் வீசப்பட்ட அவலத்தைப் பற்றியும் எழுத்தாளர்கள் பலர் விரிவாக எழுதினர். இந்தச் செய்திகள் பாஸ்டன் (Boston) நகரச் செய்தித்தாள்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கையேடுகளில் ஆவணப்படுத்தப்பட்டு மக்களிடையே பரவின. இதனால், ஒட்டுமொத்த அமெரிக்காவும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் திரண்டிருந்த அந்த காலகட்டத்தில், வங்காளப் பஞ்சம் என்பது ஆங்கிலேயர்களின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தும் ஒரு முக்கிய முழக்கமாக மாறியது.
இதனைத் தொடர்ந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அமெரிக்காவின் 13 மாகாணங்களைக் குறிவைத்து 'தேயிலைச் சட்டம்' (Tea Act) என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இதற்கு எதிராக, 1773-ல் வரலாற்றுப் புகழ்பெற்ற 'பாஸ்டன் தேநீர் விருந்து' (Boston Tea Party) போராட்டம் வெடித்தது. இறுதியாக, இந்தத் தொடர் எதிர்ப்புகளின் விளைவாக 1776-ல் அமெரிக்காவிற்குச் சுதந்திரம் கிடைத்தது.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால்: வங்காளத்தில் நடந்த ஒரு துயரம், பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த அமெரிக்காவின் சுதந்திரப் போராட்டத்திற்கே ஒரு பெரிய உந்துசக்தியாக எதிரொலித்தது. ஆனால், அதே காலகட்டத்தில் நம் சொந்த நாட்டில்—தமிழ்நாட்டிலோ, மெட்ராஸ் மாகாணத்திலோ அல்லது அசாமிலோ—அதன் தாக்கம் பெரிய அளவில் எதிரொலிக்கவில்லை. அதற்கு முதன்மைக் காரணம், அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியில் ஊடகங்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன; கடுமையான தணிக்கை (Censorship) அமலில் இருந்தது. ஆட்சியாளர்கள் எதை அனுமதிக்கிறார்களோ, அதை மட்டுமே மக்கள் படிக்கும் சூழல் இருந்தது.
இதற்குப் பின்னர்தான், தமிழ்நாட்டை உலுக்கிய மெட்ராஸ் பஞ்சம் (தாது வருடப் பஞ்சம்) ஏற்பட்டது. தமிழ் நாட்காட்டியின் 60 ஆண்டு சுழற்சியில் 'தாது' என்ற தமிழ் வருடத்தில் இந்தப் பஞ்சம் ஏற்பட்டதால், உள்ளூர் மக்கள் இதனை இன்றும் 'தாது வருடப் பஞ்சம்' என்று அழைக்கிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான போக்சோ வழக்குகள், பாலியல் தாக்குதல், பாலியல் சீண்டல், கடத்தல் வழக்குகள் என மொத்தம் 26,145 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. சராசரியாக, ஒரு நாளுக்கு 14 குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு சமூகமாக நாம் தோற்றுப் போயிருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.
பெண்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான், அக்டோபர் மாதத்தை பெண்கள் பாதுகாப்பு மாதமாக அறிவித்து நமது @WTLFoundation தலைவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் தற்போது நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம். நாம் தேர்தலைச் சந்திக்கும்போது, பிரச்சாரத்துக்குச் செல்லாமலேயே நாம் வெற்றி பெறுவோம் என்ற அளவுக்கு, நமது பணிகள் மூலம் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும். மாற்றத்தைக் கொடுப்போம் என்ற நம்பிக்கையை உருவாக்குவது மட்டுமல்ல, நாம் ஆட்சிக்கு வரும்போது மக்கள் விரும்பும் மாற்றத்தை செய்தும் காட்ட வேண்டும்.
வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினம் அன்று, கோயம்புத்தூரில், Abdul Kalam Centre for Ethics and Politics தொடங்கப்படும். முதல் நாளில், 100 மகளிர், இந்த பயிற்சித் திட்டத்தில் இணைவார்கள். மேலும், அக்டோபர் மூன்றாவது வாரத்தில், நமது @WTLFoundation தலைவர்கள் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5000 பெண்களைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு பதிவு செய்யப்படவிருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்காக, நாம் தொடர்ந்து துணை நிற்போம்.
திருத்தம்: தமிழகத்தில் தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் 8 பேரும், பெண் அமைச்சர்கள் 4 பேரும் இருக்கிறார்கள்.
அறிவியல், கல்வி, தேசப்பற்று என, தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டு முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த, முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில், அவரது நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம். அவரது கனவுகளும் சிந்தனைகளும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு, உயரிய சிந்தனைகளையும், அறம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், APJ Abdul Kalam Centre for Ethics and Politics இன்று தொடங்கப்படவிருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம்: PSG iTech Convention Centre, நீலாம்பூர், கோயம்புத்தூர் – 641062
நாள்: 15 அக்டோபர் 2026
நேரம்: காலை 9.30 மணி
ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளைச் செயலாக்கி, நேர்மையும், அறமும், மக்கள் சேவையும் நிறைந்த தலைவர்களை உருவாக்குவோம்.
நமது We The Leaders Foundation சார்பில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பகுதியில் 11 ஏக்கர் பரப்பளவில் 'திருவனம்' எனும் மரக்கன்றுகள் நடும் மாபெரும் விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. நமது முதன்மைச் சேவகர் திரு.அண்ணமலை அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு விழாவை சிறப்பித்தார். இன்றைய இந்த நிகழ்வு தமிழ்நாட்டைப் பசுமையாக்கும் நமது பயணத்தில் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைந்தது.
இதுவரை நமது அமைப்பின் சார்பில்2,700-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பசுமையான தமிழகத்தை வழங்கிடும் நோக்கில் நமது பயணம் தொடர்ந்து வருகிறது.
இயற்கையைப் பாதுகாக்கும் இந்தப் பணியில் தொடர்ந்து தங்களை இணைத்துக் கொள்ளும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.