சில மனிதர்கள் வாழ்ந்த காலத்தைவிட, அவர்கள் விட்டுச் செல்லும் நினைவுகளிலும் தாக்கத்திலும் நீண்ட காலம் வாழ்கிறார்கள்!
அப்படிப்பட்ட ஓர் அழகான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்தான் ராஜஸ்ரீ ஜெய்சன் (Rajeshree Jaison).
புற்றுநோய் என்ற கொடிய சவாலை எதிர்கொண்டபோதும், தனது புன்னகையை இழக்காமல் வாழ்க்கையை எதிர்கொண்ட ஒரு பெண்மணி.
வாழ்க்கை எத்தனை வலிகளைக் கொடுத்தாலும், நம்பிக்கையையும் மனவலிமையையும் இழந்துவிடக் கூடாது என்பதைத் தனது வாழ்வின் மூலம் உணர்த்தியவர்.
அவரது புன்னகை வெறும் முகத்தில் தெரிந்த அழகல்ல; அது வலிகளுக்கு மத்தியிலும் வாழ்வை நேசித்த ஒரு மனதின் வெளிப்பாடு.
புற்றுநோயுடன் போராடுபவர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவரது வாழ்க்கை ஒரு பாடம்.
புற்றுநோயை எதிர்கொண்ட அவரது போராட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் விதைத்த நம்பிக்கையும், ஏற்படுத்திய தாக்கமும், அவரது புன்னகையும் பல இதயங்களில் என்றும் வாழும்.
ஒரு மனிதர் மறையலாம்... ஆனால் அவர் பிறருக்குள் விதைத்த நம்பிக்கை ஒருபோதும் மறைவதில்லை!
Rest in Peace🙏
Hoy 10 de noviembre hace un mes a esta hora no se me había pasado por la mente que iba a vivir el peor episodio de mi vida, ser atropellada por un conductor irresponsable que después de cometer el brutal accidente quiso escapar.
Gracias Dios por tenerme con vida ❤️🩹🙏🏼
ஔவையார் காலத்தில் விபூதியே கிடையாது என்றால் "நீறில்லா நெற்றி பாழ்" என்று எழுதிய ஔவையார் கைபர் கணவாய் வழியாகத்தான் வந்திருக்க வேண்டும்?!
---
திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் என்று முழு பதிகமே பாடியுள்ளார். அதில் நமது முப்பாட்டன் இராவணனுக்காக "இராவணன் மேலது நீறு" என்று ஒரு வரியையும் சேர்த்து எழுதியுள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும்.!
"மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே"
- திருஞானசம்பந்தர்.
மேலும் திருமூலர் "கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை", என்று சிவபெருமான் பூசிக்கொள்ளும் திருநீற்றைக் குறிப்பிட்டு
எப்படிப்பட்ட திருநீற்றை அணிந்தால் பிரம்ம ஞானத்தைப் பெற முடியும் என்பதையும் விளக்குகிறார்.!
"அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம் விரவு கனலில் வியன்உரு மாறி நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத ருருவம் பிரம உயர்குல மாமே"
- திருமந்திரம்.
பொருள் : பசுவின் சாணம் அரசு முதலிய சமித்துக்கள் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முன்னைப் பருவுரு மாறி அமைந்த அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாம்.
மேலும் "பிறை நுதல் வண்ணம் ஆகின்று" என்ற புறநானூற்றின் கடவுள் வாழ்த்து வரிகளைக் குறிப்பிட்டு,
"பிறைநெற்றியோடுற்ற முக்கண்ணினார், பிறைதாங்கு நெற்றியர், பிறைசேர் நுதலிடைக் கண்ணமர்ந்தவனே, பிறைநுதல் விளங்கும்", என்ற தேவார வரிகளை முன்னிறுத்தி "பிறைநுதல்" என்பதை நெற்றியில் பிறைபோன்று அணியும் திருநீறாகவும் உ.வே.சா குறிப்பிடுகிறார். மேலும் கலித்தொகையில்,
"மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு
அணிந்து"
என்ற வரிகளில் திரிபுரத்தை எரித்து அதன் சாம்பல் நீற்றை அணிபவனே என்று சிவபெருமானைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் குறிப்பிடுகிறார். இப்படி பக்தி இலக்கிய காலத்திற்கு முன்பு சங்ககாலம் வரை திருநீற்றைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. தேவாரங்களில் மட்டுமில்லாது திவ்யப் பிரபந்தங்களிலும் இதுபற்றிய குறிப்புகள் உண்டு.!
இந்து என்று ஒரு சமயம் இல்ல. இந்து பல சமயங்களுக்கான பொதுச்சொல்.
தமிழர்கள் திருநீறு பூசும் சைவ சமயத்தவர். வைணவர்கள் திருநீறு பூசுவதில்லை.!
ஆரியனும் திராவிடனும் தமிழர்களின் கலாச்சாரத்தையும், மொழியையும், சைவசமயத்தையும் சிதைத்து அழித்து வருகின்றனர்.
#சைவம்
#திருநீறு
#தமிழர்சமயம்
#வழிபாடு
#சிவபெருமான்
Cash கொடுக்கும்போது கை கொஞ்சம் தயங்கும். UPI-ல ஒரு scan, ஒரு PIN.
அவ்வளவு தான்.
50, 120, 300… சின்ன சின்னதா போயிட்டே இருக்கும். மாச கடைசியில எங்க போச்சு?
என்ன பண்ணலாம்?
•செலவுக்கு மட்டும் ஒரு தனி bank account, அதுக்கு மட்டும் UPI
•மாசத்துக்கு ஒரு தடவை UPI history-ஐ முழுசா பாருங்க
•தேவையில்லாத shopping app notifications-ஐ off பண்ணுங்க
Technology வசதியை தரும். கட்டுப்பாட்டை நாம தான் தரணும்
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
இதுவரை 69 எம்.எல்.ஏக்கள் ரிசார்ட் வந்துள்ளனர்.. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ, 'எவன்டா 3 நாள் ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கிறது' என்று கூறி, 'எவன் எம்.எல்.ஏனு எவனுக்கும் தெரியாது, எனக்கு பதிலா நீ போ' என்று தனது ட்ரைவரை அனுப்பியுள்ளாராம்.. - நம்பந்தகுந்த சோர்ஸ்