மக்களை முட்டாளாக்க நினைக்கும் அறிவுகெட்ட @arivalayam & Co ....
Ex CM ஸ்டாலின் தலைமையிலான திமுகவில், ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட டாக்டர் மைத்ரேயன் இணைந்து, தற்போது மாநில கல்வியாளர் அணியில் துணைப் பொறுப்பாளராக இருக்கிறார்....
பெரியாரிய சித்தாந்தத்தை முன்னிறுத்தும் திமுகவில், RSS பின்புலம் கொண்ட ஒருவரை இணைத்து, அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளையும் வழங்கியவர்கள் இவர்கள்தான்...
அதுமட்டுமல்லாமல், RSS ஒரு சமூக இயக்கம் என்று புகழ்ந்த கலைஞர் கருணாநிதி தலைவராக இருந்த அதே திமுகவினர்தான் இன்று " RSS, சங்கி " போன்ற வார்த்தைகளை ஏதோ மிகப்பெரிய அவதூறான சொற்களைப் போல பயன்படுத்துகின்றனர்...
டாக்டர் மைத்ரேயனின் அரசியல் பயணத்தைப் பாருங்கள்....
ஆரம்ப காலத்தில் RSS ஸில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர். அந்தப் பின்னணியின் காரணமாக 1991ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு உறுப்பினரானார்...
தொடர்ந்து பாஜகவில் உயர்ந்த அவர், 1995 முதல் 1997 வரை தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை மாநிலத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்....
பின்னர் திமுகவின் அரசியல் எதிரியான அதிமுகவிலும் இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருந்தார்....
இத்தகைய RSS மற்றும் சங் பரிவார் பின்புலம் கொண்ட ஒருவரை திமுகவில் இணைத்து, கல்வியாளர் அணியில் பொறுப்பும் வழங்கிவிட்டு, மற்றவர்களை மட்டும் "சங்கி" என்று கூறி இழிவுபடுத்துவது எந்த வகையான கொள்கை அரசியல் ..? @mkstalin@Udhaystalin
அப்படியானால், திமுகவில் இணைந்தவுடன் ஒருவர் " சங்கி" என்ற அடையாளத்தை இழந்துவிடுகிறாரா ?
சங்கியின் சாயலைப் பார்த்து மற்றவர்களை விமர்சிக்கும் முன், கண்ணாடியில் தங்கள் கட்சியின் வரலாற்றையும் தற்போதைய அணியையும் ஒருமுறை பார்த்துக்கொள்ளட்டும்... இதுதான் ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் அரசியல் முரண்பாடு.
யார் மக்களுக்கு உழைக்காமல் அரசியலுக்கு பதவிக்கு வந்தவர்கள் யாரென்று ஸ்டாலின் மேயராக இருக்கும்போது இந்த இரண்டு புகைப்படங்களை அதற்கு சாட்சி உழைக்காமல் வந்தது உங்களுடைய மகன் தான் என்பதை நீங்களே @mkstalin ஒப்புக்கொள்கிறீர்கள்
என்றும் மக்கள் நலனில்
@TVKVijayHQ@CMOTamilnadu
அட திருட்டு திமுக 🤐
கலைஞர் காலத்தில்...
கர்நாடகா 4 அணைகளை கட்டியது; அதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர்
கேட்டதற்கு, திமுகவால் பதில் சொல்ல முடியவில்லை.
-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழகத்திற்கு ஒரு கெட்டது நடக்குதுன்னா... அதுக்கு திமுக தான் முதல் காரணமாக இருக்கிறது 💯
திமுகவுக்கு கார் வேணாம்னா, பென்சன் வேணாம்னு சொல்லுங்க, மொபைல் பில் கட்ட வேணாம்னு சொல்லுங்க, ப்ரீ பஸ் பாஸ் வேணாம்னு சொல்லுங்க, இலவச பங்களா வேணாம்னு சொல்லுங்க. திமுக அரசியல் ஸ்டண்ட் மக்கள் கிட்ட எடுபடாது. - முஸ்தபா அண்ணன்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.