வந்தேறிகளை வாழவைத்த தமிழ்நாடு.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
இதுல பெருமை இல்லை கெழவி.இது எங்கள் ஏமாளித்தனம்,இழிச்சவாய்த்தனம்.
இப்படி புகழ்ந்து,புகழ்ந்தே தமிழ்நாட்டின் மொத்த அதிகாரம்,பொருளாதாரம் அனைத்தையும் திருடியிருக்கு இந்த #பிறமொழி கும்பல்.
ஶ்ரீஜா ரவி- டப்பிங் ஆர்ட்டிஸ்ட்.
" இளைஞர்களே.. !! ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்தீங்க.. இந்த பள்ளிக்கரணையை நேரில் போய் பாருங்க.. குப்பையை எரிக்குறாங்க.. இதையெல்லாம் ரீல்ஸ் போடுங்க.. 15,000 ஏக்கர் இருந்துச்சி.. இப்போ 2500 ஏக்கர் தான் இருக்கு.. ஒட்டுமொத்த வேளச்சேரியே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துல கட்டுனது தான்.." - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி
#Chennai | #Anbumani | #PMK | #Politics | #PolimerNews
4% -->0% க்கு போயிட கூடாது என்கிற அக்கறையில் பேசுவதை சீமான் மீது வன்மம், விஜய் ரசிகர் கூட்டமா ஆயிட்டார் என்று கடிச்சு வைக்கிற கூட்டத்தை காறி துப்பிருக்கார்.. 👌
"ரீல்ஸ் போடுங்க, பதிவு போடுங்க, ட்விட்டர்ல, சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணுங்க, ஒரு விழிப்புணர்வு கொண்டுவாங்க, நீங்கெல்லாம் சோஷியல் மீடியா மூலமா ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறீங்க, நிச்சயமாக மேகதாது அணையை தடுக்கிறது உங்களால் முடியும்” - மேகதாது அணை விவகாரத்தில் இளைஞர்கள் தீவிரம்காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டார் பாமக தலைவர் அன்புமணி
#AnbumaniRamadoss | #Megadhadu | #Karnataka
"உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு அரசியல் இயக்கம் கண்ட தமிழ்த்தேசியர்..!
‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி பாமரரும் உலகியலை அறியும் வகையில் எளிமையான உரைநடையில் செய்திகளை வழங்கி வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்த பெருமகன்..!
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலத்தில் எதற்கும் அஞ்சா நெஞ்சுரத்தோடு விடுதலைச் செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்த தீரர்..!
இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போரில் பங்குகொண்டு சிறைப்பட்ட மொழிப்போர் வீரர்..!
தமிழீழ விடுதலையை முழுமையாக ஆதரித்து தமிழ்நாட்டிலிருந்து முதன்மை குரல் கொடுத்த தனிப்பெருந்தலைவர்..!
கபடி, சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் தொன்ம விளையாட்டுகள் அழிந்துவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும் அரும்பணியாற்றிய பெருந்தகை..!
பரந்து விரிந்த இப்பூமிப்பந்தில் தமிழர்க்கென்று ஒரு தேசம் வேண்டுமென்ற உன்னத கனவைச் சுமந்து,
சாதி- மத சகதியில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்டெடுத்து ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பிய எங்களின் முன்னத்தி ஏர்..!
காலச்சூழலில் அவ்வியக்கத்தைத் தொடரமுடியாது போனபோது, ‘வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்!’ என்று தன்னுடைய ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த இலட்சியத் தாகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு பேரறிவிப்பு செய்து வழிகாட்டிய காலஞானி..!
நாம் தமிழர் கட்சியின் நிறுவனர்!
தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுகிற இந்நாளில், இன விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய இடையறாது பாடுபடுவோம் என உறுதியேற்போம்!
நாம் தமிழர்!
வைகாசி 10 | 24-05-2026
@nolan_moor இவர் எதுக்குடா ஜெயரஞ்சன் இடம் கேக்க போறாரு ?? இவரே பல யூடுப் சேனல் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ்னு பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துவராங்க தினமும்.