திருடன் என்ற முத்திரையுடன் ஓய்வு? மெஸ்ஸியின் பேராசைக்கு சம்மட்டி அடி! முடிவுக்கு வந்த அயோக்கியத்தனம்
கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகக் கொண்டாடப்பட்ட லியோனல் மெஸ்ஸி, தற்போது பல ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியுள்ளார். காரணம்.. மெஸ்ஸியின் பேராசை!
அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்விக்குப் பிறகு, மைதானத்திலேயே மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், கால்பந்து விமர்சகர்களும் ரசிகர்களும் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அன்றே ஓய்வு பெற்றிருக்கலாமே மெஸ்ஸி!
மெஸ்ஸி.. நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2022 கத்தார் உலகக்கோப்பையின் போதே கௌரவமாக ஓய்வு பெற்றிருக்கலாம்.. என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். கத்தார் உலகக்கோப்பைக்கு முன்பாக அர்ஜென்டினா அணிக்கும் மெஸ்ஸிக்கும் ஆதரவாக உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய அனுதாப அலை உருவாக்கப்பட்டது.
மெஸ்ஸி தனது வாழ்நாளில் ஒருமுறையாவது உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒற்றை உணர்வு மட்டுமே ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் ஆக்கிரமித்திருந்தது.
அந்த உணர்ச்சிப் பெருக்கில், மெஸ்ஸிக்கும் அவரது அணிக்கும் ஆதரவாக நடுவர்கள் செயல்பட்டதாகவும், பல சர்ச்சைக்குரிய பெனால்டி வாய்ப்புகள் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக வழங்கப்பட்டதாகவும் எழுந்த புகார்களை உலகம் கண்மூடித்தனமாகப் புறக்கணித்தது.
நீங்கள் ஒரு திருடன் போல மற்றவர்களின் வெற்றியைத் திருடுகிறீர்கள் என்ற உண்மையை அன்றைய உணர்ச்சி, மெஸ்ஸி மீது இருந்த அன்பு மறைத்துவிட்டது. அந்த சீசனில் கோப்பை வென்ற பின் அவர் விலகியிருந்தால், ஒரு மாபெரும் நாயகனாக விடைபெற்றிருக்கலாம். ஆனால், பேராசை யாரைத்தான் விட்டது.. அவரையும் விடவில்லை.
வெறுப்புடன் விடைபெறும் அர்ஜென்டினா அணி
2026 உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணியின் ஆட்டம் மிகவும் மோசமாகவும், வன்முறை நிறைந்ததாகவும் இருந்தது. எகிப்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியிலேயே அர்ஜென்டினா தோற்க வேண்டியது. ஆனால் அந்த ஆட்டத்தை அர்ஜென்டினா ஏமாற்றி வென்றதாக புகார்கள் உள்ளன.
அதிலும் அடிதடி எல்லாம் செய்துதான் கடைசி நேரத்தில் அவர்கள் வெல்லவே செய்தனர். நேற்று இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக எந்த ஒரு வியூகமும் இல்லாமல், எதிரணி வீரர்களை ஆக்ரோஷமாகத் தாக்குவதையே அவர்கள் Full-time தொழிலாகக் கொண்டிருந்தனர்.
கடைசிவரை கோல் அடிக்க விடாமல் அடிக்க வேண்டும்.. அதன்பின் ஷூட் அவுட் நடந்தால் அதில் வென்றுவிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். குறிப்பாக, என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது மற்றும் போட்டியின் முடிவில் லியான்ட்ரோ பரேடஸ் ஸ்பெயின் வீரர்களைத் தாக்கியது போன்ற செயல்கள் அர்ஜென்டினாவின் அநாகரிக முகத்தை உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளன.
தற்போது ஒட்டுமொத்த உலகமும் உங்களையும், ஏமாற்றி ஆடக்கூடிய அர்ஜென்டினா தேசிய அணியையும் வெறுக்கிறது. ஒரு திருடன் ஒரு பொருள் கிடைத்ததும் விட மாட்டான்.. மீண்டும் மீண்டும் திருடுவான்.. திருடன் எப்போதும் பேராசைதான் படுவான்.. அதற்கு நீங்களே சாட்சி" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
பேராசை
39 வயதான மெஸ்ஸி, இந்த உலகக்கோப்பையில் 8 கோல்களை அடித்திருந்தாலும், இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியின் இளம் வீரர்களின் வேகத்திற்கு முன்னால் திணறினார். அர்ஜென்டினா அணி 10 வீரர்களாகக் குறைந்த போதும் நேர்மையாக ஆடாமல்.. சுயநலத்துடன் விளையாடியது அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என கால்பந்து வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
2016ல் இதே மைதானத்தில் சிலியை எதிர்கொண்டு தோற்றபோது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு, பின்னர் மீண்டும் தனது முடிவை மாற்றிக் கொண்டார் மெஸ்ஸி. அந்த நாடகம் இப்போதும் தொடருமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மெஸ்ஸி மீதான அன்பின் பின்னால் மறைந்திருந்த அர்ஜென்டினாவின் அயோக்கியத்தனம் இந்த 2026 உலகக்கோப்பை தோல்வியின் மூலம் அம்பலமாகியுள்ளது. கௌரவமாகப் போக வேண்டிய மெஸ்ஸியின் பெயர், இப்போது ஒரு திருடன் என்ற அவப்பெயருடன், பல கோடி கால்பந்து ரசிகர்களின் வெறுப்போடு முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் இனி இரண்டே அணி தான்.
ஒரு பக்கம் தமிழர் பகை அணி (DMK, ADMK, BJP, TVK)
இன்னொரு பக்கம் தமிழர் அணி - நாம் தமிழர்!
நீ எந்தப் பக்கம் நிற்கிறாய் என்பதை வரலாறு குறிக்கும்.
#WeSupportNTK#Seemanism
பணம் கொடுத்தால் மின் வாரியத்தில் அரசு வேலை என வந்துள்ள செய்தி…
AE பணிக்கு 10 லட்சமாம்….
அடடே…. இது என்னங்க சார் வித்தியாசமான தூய சக்தியா இருக்கு @CTR_Nirmalkumar ?
இது தான் நீங்க ஊழலை ஒழிச்ச லட்சணமா @actorvijay?
#பொய்க்கால்_குதிரை_அரசு
அடங்கா இனப்பற்றோடும், ஆற்றல்மிகுந்த துடிப்போடும் களத்தில் இயங்கும் பாசமிகு இளவல் @Perarivalan02 அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் !
உன் மனம்போல பெருவாழ்வு வாழ்க! நீ வாழு தல!
சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு? இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாவட்டம், கெங்கவல்லிக்கு அருகேயிருக்கும் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே எழுந்திருக்கும் பதற்றச்சூழலும், மோதல்போக்கும் வேதனை அளிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கால் மேல் கால் போட்டு இருப்பதாய் வடிவமைக்கப்பட்டு இருப்பதாலேயே அச்சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிப்பது அறிவிலித்தனத்தின் உச்சமாகும். தமிழ்ப்பேரினம் எண்ணற்ற சிக்கல்களையும், உரிமை இழப்புகளையும், வளச்சுரண்டலையும், அடையாள அழிப்பையும், வரலாற்றுத் திரிபையும் நாள்தோறும் எதிர்கொண்டு வரும் தற்காலச்சூழலிலும், ஒன்றுபட்டு ஓரினமாய் நிற்காது, சாதியின் பெயரால் பிளவுப்பட்டு நிற்பதும், தன்னினப்பகை கொண்டு வீழ்வதும் சமகாலத்தில் நிகழும் பேரவலமாகும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு சாதிக்கானவர் இல்லை; ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமானவர்; அறிவாசான் அம்பேத்கர் அவர்கள் உலகம் பார்த்து வியந்த மாபெரும் கல்வியாளர்; சமூக விடுதலைக்காகப் பாடுபட்ட ஒப்பற்றப் புரட்சியாளர். அவரை ஒடுக்குமுறைக்கு எதிரானப் பொதுக்குறியீடாகவும், அறிவுலக மாமேதைகளில் உச்சம் தொட்டப் பேராசானாகவுமே பார்க்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பட்டியல் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமாகப் போராடவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்குமாகத்தான் பாடுபட்டார். இடைநிலைச்சமூகங்களுக்கென வகுப்புவாரிப்பிரதிநிதித்துவப் பங்கீட்டில் இருக்கும், ‘இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர்’ எனும் வகைப்பாட்டை உருவாக்கித் தந்தது அம்பேத்கர்தான். சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தபோது, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்கென ஆணையம் அமைக்க வில்லை என்பதைப் பதவி விலகலுக்கானக் காரணங்களில் ஒன்றாகக் குறிப்பட்டவரும் அம்பேத்கர்தான். வெள்ளைய ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சமூகங்களைக் குற்றப்பரம்பரையினர் என அடையாளப்படுத்தி, அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் அம்பேத்கரும் முதன்மையானவர். இதுமட்டுமல்லாது, தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேரம்தான் வேலை எனச் சட்டம் கொண்டு வந்தவரும், மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை எனச் சட்டமியற்றியவரும் அம்பேத்கர்தான். அவர் ஆதிக்குடிகளுக்காக மட்டும் போராடவில்லை; பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடிகள், விளிம்புநிலை மக்கள், பெண்கள் என சமூகத்தின் அத்தனைத் தரப்பினரின் நலன்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுமைக்கும் பாடுபட்டப் பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் ஆவார். எந்த மக்களுக்காக அவர் பாடுபட்டாரோ, அந்த மக்களில் ஒரு பகுதியினரே அவரைத் தவறாகப் புரிந்துகொண்டு, அவருக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு இன்றைக்கு நிற்பதெல்லாம் வரலாற்றுத்துயரமாகும்.
2021ஆம் ஆண்டு ஓதியத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை 5 ஆண்டுகளாகத் திறக்கப்படாது கிடப்பில் போடப்பட்டது வெட்கக்கேடானது. சமூக நீதியென்று வாய்கிழியப் பேசும் திமுகவின் ஆட்சியில் அம்பேத்கரின் சிலையைத் திறக்கக்கூட வழிசெய்யாது வாக்கரசியலுக்காக சமரசம் செய்துகொண்டது மோசடித்தனமாகும். அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கொள்கைத் தலைவரெனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெகவின் ஆட்சியிலும், அச்சிலையை முறையாகத் திறக்கவும், சமூகப் பதற்றத்தைத் தணிக்கவும் நடவடிக்கைகளை எடுக்காது, சிக்கலை மேலும் பெரிதாக்குவது கடும் கண்டனத்திற்குரியது. சாதியவாதத்தாலும், புரிதலின்மையாலும் எழுந்திருக்கும் இச்சிக்கலைக்கூட தீர்க்க இயலாது திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு? இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா? கேலிக்கூத்து!
ஆகவே, சேலம் மாவட்டம், ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறக்க வேண்டுமெனவும், தேவையற்ற சமூகப்பதற்றமும், மோதலும் ஏற்படுவதை முற்றாகத் தடுத்து, ஓர்மையும், நல்லிணக்கமும் நிலவுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் தவெக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி