தமிழ் இனத்தின் தன்னிகரில்லா அடையாளம்.1000 வருடங்கள் கழித்தும் இன்றும் மக்கள் தமிழ், தமிழர் அடையாளமாக, கருதும் தஞ்சை "இராஜராஜேச்சரம்" என்ற பெரும் கோவிலைக் கட்டி அங்கு இயல் இசை நாடகம் என்ற முத்தமிழையும் வளர்த்த பெருந்தகை.
இந்த உலகத்தைச் சரியான முறையில் வழி நடத்திச் சென்று, இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் "தெய்வம்" என்ற அந்த பெரும் சக்தியை தங்கள் வாழ்க்கையில் உணர, தஞ்சையில் மட்டும் பெரும் கோவிலை எழுப்பாமல் தெற்காசிய முழுக்க கோவில்களைக் கட்டி உலக மக்களை நன்னெறி தவறாமல் வழி நடத்திச் சென்ற சிவபாதசேகரன்.
உலகத்தில் "தீவிரவாதம்" இருக்கக் கூடாது என்று உலகத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக முதன்மை போரை நடத்தி அந்த தீவிரவாதிகளை கருவறுத்த முதன்மை வீரன்.
இந்த உலகமே கையிலிருந்தாலும், நீர் நிலைகளைப் பாதுகாக்கும் யாராக இருப்பினும் அவரது காலை என் தலையில் வைத்துக் கொள்வேன் என்று கூறிய எள்ளளவும் செருக்கு இல்லாத "பேரரசன்".
தெலுங்கு "இன வெறியர்கள்" உங்கள் பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் விளைவிக்க முயற்சி செய்தாலும், வரலாற்றைக் கல்வெட்டுகளில் வெட்டி ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் வரலாற்றில் என்ன நடந்தது என்று உங்கள் பெயரனும், பெயர்த்தியும் படித்து உங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைக்க வழி வகை செய்த, தொலை நோக்கு பார்வை கொண்ட "தீர்க்கதரிசி".
இந்த உலகத்தை "1400" வரை தமிழர்கள் வழி நடத்திச் செல்ல நங்கூரத்தைப் பாய்ச்சிய தமிழ்நாடன், எனது உயிர், எனது மூச்சுக் காற்று, எனது மரபணுவில் கலந்த எனது பாட்டன் இராஜராஜ சோழனின் 1041 வது சதய திருவிழா இன்று. இந்த நன்னாளில் நமது பேரரசனை நினைவு கூர்வோம்.
வெற்றிவேல் வீரவேல்!!!
மீண்டெழும் சோழம்!!!
தமிழர்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் தனது நிர்வாகத் திறனால் உலகறியச் செய்தவரும் , ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி எழுப்பியவருமான மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா இன்று.
தலைசிறந்த போர்வீரர், கட்டடக் கலையின் முன்னோடி, கப்பற்படை வல்லுநர், மக்கள் நலனில் அக்கறை மிகுந்த ஆட்சியாளர் எனத் தமிழர் வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்ததோடு, வேளாண்மைக்கும், நீர்மேலாண்மைக்கும் முக்கியத்துவம் அளித்து, கடல் கடந்த வளர்ச்சிக்கு வழிவகுத்து உலகளவில் தமிழர் பண்பாட்டினை நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக, அவருக்குப் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்படும் என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவித்திருந்த நிலையில், அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட மத்திய மாநில அரசுகளை இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.
”ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கிறது... த.வெ.க அரசு நல்ல முறையில் செயல்படுகிறது” சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் 1041ஆவது ஆண்டு சதய விழா தஞ்சையில் கோலாகல கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தருமபுர ஆதீனம் பேட்டி
#Thanjavur | #DharmapuriAadheenam | #ThanjavurTemple | #RajaRajaCholan | #PolimerNews
தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் இருக்கும் நூல் அளவு வித்தியாசம் தான் எங்க தல.. வேற என்ன சொல்ல இவரை பற்றி.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Mr #AK ❤️❤️
தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போவது இந்தத் தேர்தலின் முடிவுகள் தான். அதில் எந்த மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். வெற்றி நமதே!
வருகின்ற மே 11 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள சித்ரா பௌர்ணமி வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து மாநாட்டு குழுத் தலைவர் சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி அவர்களுடன் 6.5.2025 இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசித்தபோது...