தமிழ்த் திரையுலகில் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த, என் ஆசிரியர் கே.பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் இன்று. என்றும் அவரது முதன்மை மாணவன் என்பதில் பெருமையுண்டு எனக்கு.
இன்று மதுரை மலைசாமிபுரம், பரமக்குடி வேந்தொனி மற்றும் அருப்புக்கோட்டை கல்லூரணி நம்மவர் படிப்பகங்களில் படித்து 10ஆம் மற்றும் 12ஆம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான மாணவர்களுக்கும் நமது படிப்பகத்திற்கு தவறாமல் வருகை தரும் மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி மகிழ்ந்தோம்
#கமல்ஹாசன்
#நம்மவர்_படிப்பகம்
உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
பிரான்ஸ் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில், தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் அசத்தலாக விளையாடி 2 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அவருக்கு, மக்கள் நீதி மய்யம் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Congratulations to Shri @narendramodi ji on becoming India’s longest continuously serving elected Prime Minister. In a diverse democracy like ours, sustained public trust is a significant feat. May our collective focus remain on India’s progress and the welfare of our fellow citizens.
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றிருக்கும், முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி. வி. மோகனா அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
#KamalHaasan#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருந்து சமூகநலனுக்காகவும் சமநீதிக்காகவும் எத்தனையோ வழக்குகளில் வாதாடி வென்ற திருமதி. வி.மோகனா அவர்கள், அந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவே பதவி ஏற்கிறார். இப்படி வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி இவரே என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது.
உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி வி. மோகனா அடைந்திருக்கும் உயர்வு, தத்தம் துறைகளில் அந்தரங்கசுத்தியோடு ஈடுபடும் எவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும். அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
பிரிட்டனின் மதிப்புமிக்க 'ராயல் சொசைட்டி' (Royal Society) அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி திருமதி. செளமியா @doctorsoumya சுவாமிநாதன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்!
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam
#Sowmiyaswaminathan #Scientist #BirtainRoyalSociety
நிதி இருக்கும் நிலையில் இலவசத் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அள்ளித்தெளித்த கட்சிகளால்
வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா
தமிழகம் சோற்றுக்கு
லாட்டரிதான் லாட்டரிதான் லாட்டரிதான்
#மய்யம்#சென்ட்ரிஸம்#centrism#KamalHaasan#கமல்ஹாசன்
A message from Gandhi and Rajaji’s family to CM-elect @TVKVijayHQ
புரிந்தால், புரிந்து நடந்தால் மகிழ்ச்சி
தமிழகத்தை முன்னேறும் பாதையில் எடுத்துச்செல்ல நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும் 💐🙏