தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.
செந்தில் பாலாஜி வழியில் சிக்கும் நேரு... இளைஞர்களின் வாழ்வோடு விளையாடும் ஊழல் மாடல் அரசு!
அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர், ஓட்டுனர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தகுதியானவர்கள் பலர் இருந்தாலும், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்ததால்... தகுதி வாய்ந்த பல்வேறு இளைஞர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியானது.
இது குறித்த வழக்கு முன்னாள் அமைச்சர் திரு @V_Senthilbalaji மீது நடந்து கொண்டிருக்கும் நிலையி, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மறுத்து, பணம் கொடுத்தவர்களுக்கே வேலை என்ற லஞ்ச வேட்டை, முதல்வர் திரு ஸ்டாலின் தலைமையிலான ‘தகிடு தத்த மாடல்’ அரசின் இன்னொரு முக்கிய துறையிலும் அரங்கேறி இருக்கிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு முதலமைச்சர் திரு ஸ்டாலின் ��ையால் பணி ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இதில் சுமார் 150 பணியிடங்களுக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்க பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தாகவும் கூறியுள்ளது அமலாக்கத் துறை.
ஏற்கனவே தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பறித்த செந்தில்பாலாஜியை உச்சி முகர்ந்து மெச்சிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின்… இப்போது அதே வழியில் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் லஞ்சம் கொடுத்தவர்களுக்கே வேலை என்று செயல்பட்டிருக்கிற திரு @KN_NEHRU அவர்களையும் உச��சி முகர்வாரா?
ஸ்டாலினின் ஊழல் மாடல் அரசு அமலாக்கத் துறையின் கடிதத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
மாநில உரிமை என்ற உருட்டுகளை விரித்து தன் ஊழலை மூடி மறைப்பாரா? அல்லது தைரியமாக வழக்குப் பதிவு செய்து விசாரிப்பாரா?
தமிழக காவல்துறை இவ்வழக்கில் எப்போது FIR பதிவு செய்வார்கள்? அவ்வாறு பதிவு செய்தாலும் தகுந்த குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படுமா?
தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் முதல்வர் திரு @mkstalin அவர்களே..!
TVK Virtual Warriors!
TVK Virtual Warriors அவர்களின் வேண்டுகோளின்படி,
இன்று முதல் ஒவ்வொரு நாளும் @ 6 PM (evening) - 365 நாட்களும் தொடர்ச்சியாக, உங்களை வலுப்படுத்தும் நோக்கில் உயர்தரமான சட்ட குறும்பட (High Quality Law Series) வீடியோக்களை வழங்க இருக்கிறேன்.
இந்த தொடர் மூலம், இந்திய அரசியலமைப்பு, தமிழ்நாடு மாநில சட்டங்கள், மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு கிடைக்கும்.
சி�� சமயங்களில் இதில் அரசியல் சம்பந்தமான விவகாரங்களும் இடம்பெறும்.
இந்த வீடியோக்கள் மூலம் உங்களை அறிவால் வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
சட்டத்திற்கேற்ப வாழும் குடிமகனாக இருங்கள் - உண்மையான TVK Virtual Warrior ஆகுங்கள்.
அறிவே சக்தி - வெளிச்சம் பரவட்டும்.
இறைவன் அருள் உண்டாகட்டும்.
____
TVK Virtual Warriors!
At the request of the TVK Virtual Warriors, I am delighted to announce the launch of a 365-Day High-Quality Law Series - @ 6 PM (evening) - a daily stream of short, insightful videos aimed at empowering you with knowledge of the Constitution of India, Tamil Nadu State Laws, Union Laws, and various Government Schemes.
From today onwards, this initiative will occasionally include discussions on political and geopolitical matters that influence our legal and civic landscape.
Empower yourself through knowledge. Be a Lawful Citizen - Be a True TVK Virtual Warrior.
Knowledge is Power. Let There Be Light.
God Speed. ✨🇮🇳
________
#TVKVijay #KarurStampede #KarurIncident #TVKForTN
@TVKVijayHQ @tvk_voices @LTPoliticsTamil @ActorVijayTeam @VTMOffl @MangoCityTVK @Thalapathyhq @rajakumaari @imrajmohan @BussyAnand @CTR_Nirmalkumar @Jagadishbliss @DrSambathkumar @AdvocateVenkatP @drtkprabhu_TVK @TVK_PremMoorthy @sangeet29332013 @TVK_UAE @Tvk_Anish @TvkLondon @LoyolaMani @JhonArokiasamy @LoyolaMani @AIADMKOfficial @EPSTamilNadu @imranhindu @AadhavArjuna @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @TVKTrendsVijay
@imrajmohan @TVKTrendsVijay @TVKPartyHQ
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.