If Annamalai/BJP/Modi are so eager to promote non-hindi languages, what stops them to implement those non-hindi languages in Union govt offices?
Look at Railways, Banks, Union Govt offices , Companies run by Union govt, all of them are addressed in Hindi as the only Indian language other than that particular state's language.
If Annamalai is keen to establish BJPs willingness to promote non-hindi languages, let him make modi to write names of union offices in non-hindi language. Why don't you try with Tamil names in Andra, Karnataka, Kerala as third language instead of Hindi?
பக்கத்து மாநிலத்துல இருக்குற ஒன்றிய அரசு நிறுவனத்துல, பெயர் பலகைல இந்திக்கு பதிலா தமிழ்ல எழுதி காட்டுங்க, அப்புறம் தெரிஞ்சுக்கலாம் உங்க யோக்கியதைய? என்னமோ அனைத்து இந்திய மொழியை வளர்த்தப்போறாங்களாம், தமிழ் மேல பாசமாம்.... தமிழுக்கு ஏன் பட்ஜெட்டுல பணம் ஒதுக்க முடியாம மோடிக்கு தொண்டைல விக்குதுன்னு சொல்லுங்க அண்ணாமலை சார்?
தன்னெழுச்சியாக பல இடங்களில் தோழர் சிவாதிலீபன் ஈகத்திற்கு வீரவணக்க நிகழ்வு நடந்துள்ளது. எதை எதிர்பார்த்து தன்னுயிர் ஈந்தாரோ, அந்த இலக்கு நடக்கிறது. கோவை, கோபி, காங்கேயம், சென்னிமலை, மயிலாடுதுறை, சீர்காழி,பேராவூரணி, கும்பகோணம், சிதம்பரம் என பல ஊர்களில் சிவா திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு நடந்துள்ளன. சனநாயக அமைப்புகள் தோழரின் நோக்கத்தையும், அரசியலையும் அங்கீகரித்து நிகழ்வுகளை நடத்தியுள்ளார்கள். தோழர்
சிவாதிலீபனின் வீரவணக்க பேரணி எழுச்சி முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்க நடந்தது. இவை ஒருவரி செய்தியாக கூட எந்த அச்சு ஊடகத்திலும் பதிவாகவில்லை. சிவாதிலீபனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தோழமைகளுக்கு மனமார்ந்த நன்றி.
சிவா திலீபன் முடிவு உணர்ச்சி வசமான முடிவு, தேவையற்றது எனும் கருத்துகளை ஒதுக்கிவிட்டு, போராட்டக்காரனாய் எதை முன்வைத்தாரோ அதை புரிந்துகொள்ளும் அரசியல் அனுபவம் கொண்ட ஆளுமைகள் வீரவணக்க நிகழ்வை நடத்தியுள்ளனர்.
'விதியே விதியே என் செய்ய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை' என முத்துகுமார் எழுப்பிய முழக்கம் அனைவரையும் போராட்ட களத்திற்கு அழைத்தது. 'முத்துகுமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியது போல என் உடல் தமிழகத்தை எழுப்பட்டும்' என உறங்கி கிடந்தோரை போராட்டத்திற்கு கொண்டு சென்றார் தோழர் செங்கொடி. இவையெல்லாம் தற்கொலையல்ல, உணர்ச்சிவயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளல்ல.
போராடாமல், அணிதிரளாமல் இருக்கிற மக்களை போராட வைக்கவே இவர்கள் ஈகம் செய்தார்கள். முத்துக்குமார், செங்கொடி இருவரும் புரட்சிகர அமைப்பில் அரசியல்வயப்பட்டவர்கள். போராட்ட களத்திற்கு சொந்தக்காரர்கள். செங்கொடியை காஞ்சி மக்கள் மன்றத்து தோழர்களுடன் போராட்ட களத்தில் பார்த்தவன் நான். சிவா திலீபன் 13 ஆண்டாக தோளோடு தோள் நின்று போராடிய தோழன்.
'உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கிறார்கள்' என்பதை புறந்தள்ளி, முத்துகுமார், செங்கொடி, சிவாதிலீபன் ஆகியோரின் 'கோரிக்கை என்ன' என்பதை புரிந்து கொண்டால் இழப்புகளை தடுக்கலாம். அரசியல் அமைப்பின் ஊடாக வளர்ந்த செங்கொடி எச்சமயத்தில் ஈகத்திற்கு தயாராகினார்? அரசியல் ஆழமிக்க கட்டுரையை நாட்கணக்கில் எழுதி, இந்திய அரசின் வாயிலில் வீசியெறிந்து தன்னுயிர் கொடுக்கும் முடிவை முத்துக்குமார் எச்சூழலில் எடுத்தார்? லண்டனில் இருந்து ஜெனீவா சென்று ஐ.நா முன் தன்னை சுடராக்கிய முருகதாசன் ஏன் ஐ.நாவை நோக்கிய அதிஉன்னதமான கட்டுரையை தன் மரண சாசனமாக்கினார்? இவர்கள் உணர்வினால் தான் முடிவெடுத்தார்களா? சிவா திலீபன் கணப்பொழுதில் முடிவெடுக்கவில்லை என அவரது இணையர் இசைமொழி தனது கணவரின் வீரவணக்க உரையில் பகிரங்கமாக பதிவு செய்தாரே.
இவர்கள் அனைவருக்கும் ஒர் ஒற்றுமை உண்டு. போராட்ட களத்திற்கு மக்கள் வரவேண்டும், தமது உரிமைகளை மீட்டிட போராட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். தன்னுடைய கோரிக்கையில் அழுத்தமான பிடிப்பு கொண்டவர்கள். தமது கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்தே முடிவுகளை எடுத்தவர்கள். அரசியல் வயப்பட்டவர்கள் உணர்ச்சிவயப்பட்டு சாவதில்லை. அரசியல்களத்தில் இவ்வாறு தன்னை கொடையாக கொடுப்பவர்களை, தனிமனித வாழ்க்கையில் கடன், தோல்வி, ஏமாற்றம், விரக்தி, நம்பிக்கையின்மை, அவமானம் ஆகியவற்றிற்காக தற்கொலை செய்பவரோடு ஒப்பிடுவது அநாகரீகம். இவையிரண்டும் ஒன்றல்ல. தனிமனித தோல்விகளுக்காக தற்கொலை செய்பவர்களுடன், அரசியல் கோரிக்கைக்காக ஈகம் செய்பவர்களை ஒப்பீடு செய்வது அவர்களை மலினப்படுத்துவதாகும். அரசியல் களங்களில் எவரும் விரும்பி தன்னை அழிப்பதில்லை.
பலநூறு போராட்டங்களில் பங்கெடுத்த சிவாதிலீபன் ஏன் இம்முடிவை இப்போது எடுத்தார் என்பதை துயரத்தின் இடையே அவரது மனைவி, மகள்களால் புரிந்ததால், அனைவரின் முன்னிலையில் மேடையில் பகிரங்கமாக அதை பேசினார்கள். அவர்கள் உங்களிடத்தில் கழிவிரக்கத்தை கேட்கவில்லை. போராட்ட களத்தில் பங்கெடுங்கள் என கேட்கிறார்கள். சமூகவளைதளங்களில் சிவா திலீபனின் ஈகத்தை உணர்ச்சிவயப்பட்டது என்பது முதலாக எழுதப்படும் அறிவுரைகள், அவதூறுகளை அவர் மகள் வாசிக்கவே செய்கிறார். இவை அவரை நிலைகுலைய செய்யவில்லை. அவரது அரசியலும், போராட்ட உறுதியும் மாறவில்லை. கணவனை, தந்தையை இழந்த அக்குடும்பம் வெறுமையோடு வலியை சுமக்கவில்லை. 8 நாட்கள் மரணத்தோடு போராடிய சிவாதிலீபனின் அருகிலிருந்து துயரத்தை எதிர்கொண்டவர்கள். வன்மமும், அவதூறும் அவர்களை மேலும் உறுதியானவர்களாக மாற்றியதை மூலக்கொத்தளம் இடுகாட்டில் சிவா திலீபன் இறுதி நிகழ்வில் அவர் மனைவியும், மகளும் நிகழ்த்திய உரையை கேட்டவர்கள் அறிவார்கள். சிவா திலீபன் கட்டுரை-புத்தகம் எழுதுபவரல்ல. அவர் இணையர் இசைமொழி மேடைபேச்சாளர் அல்ல. அவர் மகள் கோகிலா அரசியல் பேசி நாங்கள் கேட்டதில்லை. ஆனால் மூவரும் வெவ்வேறு வார்த்தைகளில் 'தமிழினமே எழு, தமிழ்மொழிக்காக , தமிழருக்காக போராடு' என்கிறார்கள்
நாம் எப்படிப்பட்ட எதிரிகளை பார்க்கிறோம்?
இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கிய அடுத்தநாள் மார்வாடி-பனியா கூட்டம் தனது வழக்கறிஞர் பெண்களை ரயில்நிலையத்திற்கு அனுப்பி, "..இந்தியை அழிப்பது நம் பண்பாட்டிற்கு ஆபத்தை கொடுக்கிறது... அதனால் மே17 மீது FIR வழக்கு பதிகிறோம்.. மார்வாடிகளே ஒற்றுமையாய் வாருங்கள்.. ஆதரவளியுங்கள்..." என வீடியோ போட்டது. நாம் அழித்த இந்தி எழுத்துகள் மீது மீண்டும் இந்தியில் பெயரை எழுதியது.
பின்னர் நேற்று, இந்திக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது டில்லிக்கு சென்று வழக்கு கொடுப்பதாக மிரட்டி வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த மாணவர்கள் கல்லூரிக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பதாக பேசுகிறது செளகார்பேட்டை மார்வாடி கூட்டம்.
இந்த எதிரிகள் நம் ஊரில், நம் தமிழர்களிடத்தில் வணிகம் செய்து பிழைக்கக்கூடியவர்கள் . பெண் வழக்கறிஞர்களை அனுப்பி இதை செய்கிறார்கள். இந்த பெண்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்கள். பாஜகவின் அமர்பிரசாத் உடனான தொடர்புடையவர்கள் என தோழர்கள் தெரிவித்தனர். ராஜஸ்தானை சேர்ந்த மோனிகா ஜெயின் எனும் இந்த பெண்ணை, ஆந்திராவை சார்ந்த அமர்பிரசாத் கும்பல் இணைந்து இதை முன்னெடுக்கிறார்கள்.
தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இந்த மோனிகா ஜெயின் வீடியோக்களை இந்தியில் பதிவு செய்து வடநாட்டுக்கு பரப்புகிறது. தமிழ்நாட்டில் மார்வாடிகள் நெருக்கடிக்குள்ளாவதாக பொய் பிரச்சாரம் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் செய்கிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து தமிழருக்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து பரப்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், நாம் தமிழர் இதுபோன்ற அமைப்பினரை தமிழரல்ல, வந்தேறி என எதிர்ப்பு அரசியல் செய்வதில்லை. தமிழருக்காக போராடுபவர்களை தமிழரல்ல என கொச்சைப்படுத்தி பரப்புரை செய்வதும், மிரட்டுவதும், அவமானப்படுத்துவதுமான இழிவான வேலைகளை செய்கிறது.
ஒருபுறம் மார்வாடி-பனியா எதிரிகள் ஆர்.எஸ்.எஸ் பின்னனியில் தமிழருக்கு எதிராக வன்மத்தை செய்கிறார்கள்.
மறுபுறத்தில் போலி-தமிழ்தேசியவாதிகள் நம்மீது அவதூறுகளை பரப்பி பதுங்குகுழிக்குள் ஓடிவிடுகிறார்கள்.
எதிரியையும், துரோகியையும் திருப்பியடிக்காமல் தமிழினம் தப்பாது. மேதகு சொன்ன வார்த்தைகளை தமிழினம் மறக்கூடாது...
தோழமை அமைப்புகள், மார்வாடிகளின் இந்த திமிர்த்தனத்தை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.. இதை அடக்கிஒடுக்க ஒன்றுதிரள வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறோம் ..
திருப்பரங்குன்றத்தில் இந்தியை அழித்தவுடன் பதறுகிறது 'தினமலம்'.
தனது பத்திரிக்கையில், " மே17 இயக்கத்தினர், இந்தியை அழித்துவிட்டு ஓடியதாக.." செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மையென்ன?
குறிஞ்சி நிலத்தலைவன் முருகனின் அறுபடைவீடான திருப்பரங்குன்றத்தில்,
தமிழுக்கு எதிரான இந்தி எப்படி இருக்க முடியும்? என பக்தர்கள் கேட்கிறார்கள்... அவ்வாறு இந்தி அங்கே இருந்தால்
தமிழ் பக்தர்களின் மனம் புண்படாதா? ..
இந்த குறையை போக்கும் பொருட்டு, அன்னைத் தமிழை இழிவு செய்யும் வகையில் இருந்த இந்தியை அழித்துவிட்டு, மே17 தோழர்கள் முழக்கமிட்டு, தமிழ்ப்பணியை முடித்துவிட்டே வீடு திரும்பினார்கள். காவல்துறை விசாரித்த பொழுது காவல்நிலையம் சென்று விளக்கமளித்து வந்திருக்கிறார்கள்.
இந்தி அழிப்பிற்கு எதிராக சென்னையில் மார்வாடி அமைப்பினர் வழக்கு பதியச் சொல்லி, இந்துத்துவ அமைப்பினருடன் இணைந்து வழக்கு கொடுக்க முற்பட்டார்கள். பிழைக்க வந்த தமிழ்நாட்டில் திமிரெடுத்து தமிழை பழிக்கும் மார்வாடி கூட்டத்திற்கு பதில் சொல்லும் விதமாக தோழர்கள் முழக்கமிட்டனர்.
அஞ்சி ஓட சாவர்க்கர் கூட்டமல்ல,
இது மேதகு பிர..பாகரன் வழிவந்த கூட்டம்.
இந்தியையும், இந்துத்துவ கூட்டத்தையும் அப்புறப்படுத்தாமல் ஓயப்போவதில்லை. தோழர் சிவா திலீபன் எமக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவோம்.
இந்தி ஒழிக
தமிழ் வாழ்க!.
Imposed Hindi will be erased from our Tamil Land.
Our mother tounge is our life, rest comes next.
அதென்ன...
'பவிஷ்ய நிதி பவன்'...
தமிழ்ல எழுதுனா கை சுளுக்கிக்குமா மோடி அரசுக்கு...
தமிழனுக்கு வேலையும் தருவதில்லை...
தமிழ் மொழிக்கு மரியாதை தருவதுமில்லை..
இந்த பிஜேபியும், மோடியும் தமிழ் மேல் தங்களுக்கு பற்று, பாசம் என போடும் நாடகத்தை கோடி ரூபாய் கொடுத்தாலும் நம்பமாட்டான் தமிழன்.
எனது நாட்டில்
உனது மொழி!
இந்தியை அழி!!
ஆதிக்க இந்தி
அழிக்கும் போர்!
அணி திரளும்
தமிழ்நாடு!
இந்தி படித்தால் வேலைகிடைக்குமென்று ஏமாற்றும் மோடி அரசு.
இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலத்தவனுக்கே
ஒன்றிய வேலைகளை வாரி வழங்கும் பித்தலாட்டம்.
இந்தி மொழியை கட்டாயப் பாடமாக எடுத்து படிக்கும் பஞ்சாப், வங்கம், மராத்தியம், ஒடிசா போன்ற மாநில இளைஞர்களுக்கு கூட ஒன்றிய பணியிடங்களில் வேலை தருவதில்லை. இந்தி படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. இந்த லட்சணத்தில் இந்தியை தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் திணிப்பது, தமிழர்களை அடிமைப்படுத்தவும், இழிவு செய்யவும் எனும் காரணமன்றி வேறில்லை.
உங்கள் ஊரில் திணிக்கப்பட்டிருக்கும் அவமான சின்னமான இந்தியை துடைதுடைத்து அழித்திடுங்கள்.
தமிழனுக்கு எதிரான
ஆதிக்க படையெடுப்பின் மீதான மே17 இயக்கத்தின் போர் தொடரும்..
அஞ்சுவதில்லை பிறர்பால்..
தீ பரவும்.
#Hindi_Never
#Tamil_Ever
@may17iyakkam
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மெரினாவில் குழுமினர். மதுரை-திருச்சி-கோவை என லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் திரளாத நகரங்கள் இல்லை. இங்கெல்லாம் நெருக்கடியோ, நெரிசல் சிக்கலோ நடிகர்கள் வந்த போதும் உருவாகவில்லை. இங்கே மக்களை ஒழுங்குபடுத்த போதுமான காவல்துறை இல்லை, கட்சி பொறுப்பாளர்களென எவரும் இல்லை. ஆயினும் ஒழுங்கு நேர்த்தி இருந்தன.
அரசியல் கோரிக்கைக்காக லட்சிய உறுதியுடன் மக்கள் திரளும் பெருங்கூட்டங்கள் அரசியல் மாற்றங்களை கொண்டு வருகின்றன. அன்றும் அரசியல் பேசினோம், ஆண்-பெண்-குழந்தைகள் என ஒன்றுகூடினோம். நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், கலைஞர்கள் குழுமினார்கள். சாமானியருக்கான மரியாதையே அவர்களுக்கும் இருந்தது. மக்கள் நடிகர்கள் பின்னால் ஓடவில்லை, அவர்களை பொருட்படுத்தவுமில்லை. நானும், நடிகர் சிம்புவும், ராகவா லாரன்சும், இயக்குனர்கள் ராம், கார்த்திசுப்புராஜ் என ஒன்றாக மக்களிடத்தில் உரையாற்றியபோது லட்சக்கணக்கான மக்களில் ஒருவர் கூட முண்டியடித்து முன்னே வரவில்லை.
கொள்கை-கோரிக்கைகாக அணிதிரளும் பொழுதில், இதே சாமானிய மக்கள் இராணுவ ஒழுங்குடன், நெருக்கி துன்புறுத்தாத வகையில் திரள்கிறார்கள். திருட்டு, பாலியல் சீண்டல்கள், நசுக்குதல் என எவையுமில்லை. இதுபோல கிட்டதட்ட 7 நாட்களாக மக்கள் தம்மை ஒழுங்குபடுத்தினர். காவல்துறை, தலைவன் தேவைப்படவில்லை.
அரசியல்நெறி இல்லாமல், ரசிகத்தன்மையை முதன்மையாக்கும் பொழுது, அணிதிரட்சியில்லாமல் கும்பலாக சகமனிதர் மீதான அக்கறையில்லாமல் இதே சாமானியர்கள் திரள்கிறார்கள். அரசியலாக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல், event managers கொண்டு நடத்தப்படும் வணிக கச்சேரிகளாக மக்கள் சந்திப்புகள் நடக்கின்றன. ரசிகர் மனநிலையை வளர்த்த, சிறு-சிறு அசைவையும் ஹீரோயிசமாக ஊடகம் காட்சிப்படுத்தி வர்ணிக்கிறது.
ஆனால், ஜல்லிக்கட்டில் நாம் உரை நிகழ்த்தியபோது, இதே ஊடகங்கள் 'தீவிரவாதிகள் ஊடுறுவல்' என செய்தியாக்கினார்கள். இன்று விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் சினிமாத்தனமான செய்திகளாக்குகிறார்கள். வளர்த்தப்படுவது அரசியல் அல்ல, ரசிகத்தன்மையும், ஹீரோயிசமும். இதை கவனமாக செய்கிறார்கள்.
கரூர் துயரத்திற்கு யார் காரணமெனும் விசாரணை சுதந்திரமாக நடத்தப்படுதல் அவசியம். தவெக கட்சி பொறுப்பாளர்களின் அனுபவமின்மை-பொறுப்பின்மையா, அல்லது திமுக அரசின் அலட்சியபோக்கா என்பதெல்லாம் கள ஆய்வுகளாக, முறையான விசாரணை மூலம் உண்மை வெளியாகட்டும்.
தவெக கட்சியினருக்கு, திமுக அரசை எதிர்க்க பலவழிகள் உண்டு, திமுக தவறுகளை எதிர்கொள்ள போராட்ட வழி உண்டு. அதன்வழி, கட்சியை அரசியலாக வலுபடுத்தி அரசியலாக்கப்பட்ட 2ம்கட்ட தலைமைகள் வளர்த்தெடுக்கப்படாமல், மாநிலம் தழுவி அரசியல்பயிற்சிகள் அளிக்கப்படாமல் திமுகவை எப்படி எதிர்கொள்வார்கள்? அரசியலாக தொண்டரை வளர்க்காமல் எவ்வகையில் திமுக-அதிமுக-பாஜக போன்ற கட்சிகளை வீழ்த்துவார்கள்? கொள்கை-அரசியல் பயிற்சி, மக்கள் திரளை அரசியல் நெறிப்படுத்தி வளர்க்காமல் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளை வெல்ல இயலாது என்பது அடிப்படை அரசியல். பிறகு ஏன் ரசிக-ஹீரோயிச வகை அரசியல் வளர்த்தப்படுகிறது?
கொள்கை தெளிவில்லாமல் ரசிக-ஹீரோயிச மனப்பாங்குடன் ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தால், ஜல்லிக்கட்டு போன்ற அரசியல் உணர்வு மிக்க, ஒழுங்கமைக்கப்பட்ட எழுச்சியை தமிழர்களால் உருவாக்க இயலாது. 2009ல் நடந்த இனஅழிப்பால் உந்தப்பட்டவர்கள், அரசியல் உணர்வு பெறாமல், ஹீரோயிசம், கும்பல் மனப்பான்மையோடு சீமானால் வளர்த்தெடுக்கப்பட்டார்கள். ஈழ போராட்டத்தினை-இந்திய அரசின் சூழ்ச்சிகளை பற்றி எவ்விதமான அரசியல் கல்வியை அளிக்காமல், போலியாக, மேலோட்டமாக, கடமையுணர்வில்லாமல் சினிமா-ஹீரோயிச கதைகளை கொண்டு கட்சியை வளர்த்தார்கள்.
ஈழ அரசியல் உண்டாக்கிய தமிழ்த்தேசிய எழுச்சி ஒரு சினிமா-வசன-கதாசிரியனால் முடக்கப்பட்டது. 16 ஆண்டாக இவ்வெழுச்சியை அடக்கி சிதைத்த பின், அடுத்த போலி அலையை உருவாக்குகிறார்கள்.
பாஜக போன்ற மதவெறி கட்சியை, திமுக, அதிமுக போன்ற முதலாளித்துவ கட்சிகளை, நாதக, தவெக போன்ற ரசிகர் கட்சிகளால் வெல்லமுடியாது.
புரட்சி நிகழவேண்டுமெனில், மக்களை அணிதிரட்டும் இயக்கங்களே அதை சாத்தியப்படுத்தும். மக்கள் இயக்கங்களே, நிரந்தர மாற்றங்களை கொண்டுவரும். ஜல்லிக்கட்டு எழுச்சி பாஜகவை படுகுழிக்குள் தள்ளியது, அதிமுகவை அன்னியப்படுத்தியது. இதை சாதித்தவர்கள் அரசியல் உணர்வு கொண்ட சாமானிய தமிழர்கள்.
சாமானிய அன்பிற்கினிய தமிழர்களே! நமக்கென போராட்ட பாரம்பரியம் உண்டு. நமக்கென புரட்சிகர உணர்வுண்டு. அதை எந்த தலைவனிடத்திலும் தேடாதீர்கள். கட்சி அரசியலை கடந்து வாருங்கள்.
இழப்பை தவிர்ப்போம், இழந்ததை மீட்போம்.
*திருமுருகன் காந்தி*
மே பதினேழு இயக்கம்
29-09-2025
படங்கள்: ஜல்லிக்கட்டு எழுச்சியில் திரண்ட தமிழர்கள்.
'போக வேணாம்னு சொன்னேன், மகளோட போகறேன்னு சொன்னாங்க.. நடுவுல போன் பண்ணிக் கேட்டேன்.. கூட்டமா இருந்தா வந்திடுங்கன்னு சொன்னேன்... அனுப்புன மெசேஜ் அவங்க பார்க்கல... அப்புறமா போன் எடுக்கல.. போலீசம்மா ஒருத்தங்க எடுத்தாங்க.. ஆஸ்பத்திரி போக சொன்னாங்க...நண்பர் ஒருத்தர பார்த்தேன்... கவலையா போய் உள்ள பாக்க சொன்னாரு.. பாதி வாழ்க்கைக்கு அப்புறமா சன்னியாசியா வாழமுடியுமா... மகளையும் மனைவியையும் பறிகொடுத்துட்டேன்..' என்றவரிடம் என்ன ஆறுதல் சொல்ல?
மகள், பேத்தி இருவரையும் இழந்த அவரது வயதுபோன பெற்றோரை எப்படி தேற்ற?..
கரூருக்கு வெளியே உள்ள ஏமூர் எனும் சிற்றூரில் மட்டும் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.
மகன் பிறந்த பின், பிரிந்து சென்ற கணவன் பிறிதொரு திருமணம் செய்து கைவிட்டு போய்விட, வைராக்கியத்துடன் வளர்த்த 10 வயது மகனை பறிகொடுத்த பெண்ணிற்கு எப்படி ஆறுதல் சொல்ல?.. 'வேலைக்கு போயிருந்தேன், வர்ரதுக்குள்ள போய் சேர்ந்துட்டாங்க.?' என மனைவியை பறிகொடுத்தவரின் கையை பிடித்து தேற்றுவதற்கு நமக்கு வார்த்தைகள் எப்படி வரும்?
'அவங்க போனதே எனக்கு தெரியாதுங்க, திடீர்னு வாட்ஸப்புல அவங்க போட்டோவை அனுப்பி ஆஸ்பத்திரி வரச் சொல்லி சேதி சொல்லிட்டாங்க, இனி எப்படி இருப்பேன்?' என அதிர்ச்சியில் இருந்து மீளாத 65 வயது கணவர். பலியான, காயம்பட்ட பெரும்பாலோனோர் அன்றாடம் உழைத்து பிழைக்கும் சாமானிய குடியானவர்கள்.
காயம்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்தோம். பழங்குடி சமூகத்தை சேர்ந்த முதியவர் மகளுடன் செய்வதறியாது நின்றிருந்தார். வெண்டிலேட்டரில் போராடும் தாயின் அருகில் கவலையோடு மகன். கழுத்தில் மிதித்த காயத்துடன் தனது 14 வயது குழந்தைக்கு அருகில் கவலையுடன் இசுலாமிய தாய். பாதுகாப்பு பணிக்கு வந்து நெரிசலில் நசுக்கப்பட்ட ஹோம்கார்ட் பெண்மணி என பலரையும் சந்தித்து உண்மைத் தன்மை அறிந்தோம். அசம்பாவிதம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்த்தோம். அதிகாரிகளிடத்தில் உரையாடினோம். அங்கிருந்து இரவு பகல் பாராது உழைத்த மருத்துவர்கள், செவிலியர், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், காவலர்கள்
ஆகியோருடனும் பேசினோம்.
தமிழ்த்தேசிய கூட்டணியின் தோழமை இயக்க தோழர்களுடன், மே17 இயக்கத்தின் தோழர்களும் சென்றிருந்தோம். தமிழர் ஆட்சிக் கழகம் தலைவர் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன் அவர்கள் கே.எம். சரீப் அவர்களின் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர் தோழர் சண்முகராஜா, அன்சர்மில்லத் ஆகியோருடன் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவித்தோம். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டத்தின் மே17 இயக்க தோழர்கள் உடன் வந்திருந்தனர். தொடர்ந்து மக்களை சந்தித்து இயன்ற அளவில் தகவல்களை சேகரித்து மக்களுக்கு தெரியப்படுத்த முயல்கிறோம்.
எந்த இடர்பாட்டிலும் சாமானிய மக்களுடன் களத்தில் மே17 இயக்க தோழர்கள் நிற்பார்கள். ஊகங்களாக இல்லாமல் களத்தில் கண்டறிந்ததை மக்களுக்கு சொல்வோம்.
@may17iyakkam
தனியாருக்கு கொடுத்தா எல்லாம் சுத்தமாக இருக்கும்னு ஒரு கருத்து திணிக்கப்படுகிறது
இது உண்மையில்லை
தனியார் நிறுவனங்கள் சேவை மனப்பான்மையோடு
தொடங்கப்படுவது இல்லை
மக்களை சுரண்டி லாபம் சம்பாரிக்கவே தொடங்கப்பட்டது
இந்த தனியார்மய கொள்கையை முறியடிக்க சனநாயக ஆற்றல்கள் ஒன்று திரளவேண்டும்
கமலஹாசன் ஏன் மன்னிப்பு கேட்கக்கூடாது!
கமலின் திரைப்படம் கன்னடம்-தமிழ் குறித்தா பேசுகிறது?
கமலின் கருத்தும் அவரது படைப்பும் ஒன்றா?
இவ்விரண்டையும் தொடர்புபடுத்தி திரையிடலை தடுப்பது நியாயமென்றால், தமிழகத்தின் காவிரி உரிமைக்கு எதிராக பேசிய கர்நாடக காங்கிரஸ், பாஜக தலைவர்களின் கருத்தை முன்வைத்து இக்கட்சிகள் தமிழ்நாட்டில் எப்படி தேர்தலில் போட்டியிடலாம் என கேட்பதும் நியாயம் தானே?
இந்தியா ஒரு தேசம் என்கிறீர்கள், அனைவரும் சமமான குடிமகனென்றால் அவர்களது வணிக உரிமைகள் தேசத்திற்குள்ளாக வேறுபடுமா?
தமிழிலிருந்து கன்னடம் வரவில்லை என நீதிபதியோ, நீதிமன்றமோ, வழக்கறிஞர்களோ ஆவணம் சமர்பித்தார்களா? எதனடிப்படையில் கமலின் வாதம் கன்னடத்திற்கு எதிரானது அல்லது கன்னட மக்களுக்கு எதிரானது என நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது?
சமஸ்கிருதமே இந்திய மொழிகளின் தாய்மொழி என அமித்ஷா சொன்னபோது, ஒருவேளை, கன்னட அமைப்புகள் அமித்ஷா மன்னிப்பு கேட்கவேண்டும், பாஜக கர்நாடகத்திற்குள் செயல்படக்கூடாது என சொல்லி இருந்தால், இதே கருத்தை நீதிபதி வெளியிட்டிருப்பாரா? (கன்னட அமைப்புகள் சமஸ்கிருதத்தை நோக்கி இக்கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஏனெனில் இச்செயலை செய்பவர்கள் பின்னனியில் பாஜக-ஆர்.எஸ்.எஸ் இருந்தே வந்துள்ளது. 2016ல் காவிரி சிக்கலின் பொழுது தமிழர்கள் மீதான தாக்குதலை பின்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ். இதை அம்பலப்படுத்தி மே17 மற்றும் தோழமை அமைப்புகள் சென்னையில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்)
சமஸ்கிருதத்திலிருந்து கன்னடம் வந்தது என சொன்ன போதெல்லாம் அமைதிகாத்த கன்னட அமைப்புகள் கமலுக்கு மட்டும் எதிராக பொங்குவது மொழி மீதான அன்பினாலா அல்லது தமிழ்-தமிழர்கள் மீதான வெறுப்பினாலா?
தமிழ், கன்னடம் மற்றும் இதர திராவிட மொழிகள் குறித்து ஆய்வரங்கங்கள், விவாதங்கள் நடப்பது குறித்து நீதிமன்றங்கள் பேசி இருந்தால் ஆரோக்கியமானதாக இருந்திருக்கலாம். மாறாக மன்னிப்பு கேட்க சொல்வதற்கு நீதிமன்றங்கள் எதற்கு?
தமிழுக்கும் கன்னடத்திற்கும் தொடர்பில்லையென நிரூபிக்க வேண்டியது நீதிபதியின் பொறுப்பாக தற்போது மாறியுள்ளது என்பதாகவே நாம் புரிந்துகொள்ளலாம்.
தமிழ்-கன்னட மக்களிடையே இடைவெளியை உருவாக்க வேண்டுமானால் இதுபோன்ற தீர்ப்புகள் பயன்படுத்தப்படலாம்.
இந்த சர்ச்சையின் பின்னனியில் இருப்பது 'சமஸ்கிருதமே கன்னடத்தின் மூலமொழி' எனும் அரசியல். கன்னட மொழியின் தமிழ் பின்னனியை-தமிழ் தொடர்பை நிராகரிக்கும் சமஸ்கிருத-ஆரிய அரசியலே இச்சிக்கலை தூண்டி விடுகிறது. கன்னடத்தின் சமய பிரிவு, கன்னட பண்பாடு, கன்னட மொழி ஆகியன சமஸ்கிருத-ஆரிய மரபை மூலமாக கொண்டிருப்பவை எனும் அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளே இந்த விவாதத்தின் பின்னனியில் இயங்குபவை.
இது கமலஹாசன் தொடர்புடையாக மட்டுமே நாம் புரிந்துகொள்வதைவிட,
இந்தி-சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு எதிராக தென்னிந்தியாவில் எழும் 'திராவிட மொழி குடும்பத்தினரின்' கிளர்ச்சியை மழுங்கடிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட அரசியல். இவ்வகையில் இந்திக்கு எதிராக கிளர்ந்த தமிழர்களின் அரசியலை கன்னடர்களும் பின்பற்றி விடக்கூடாதென ஆர்.எஸ்.எஸ்சால் முன்னகர்த்தப்படும் தமிழ்-வெறுப்பு அரசியல்.
கன்னடர்களின் 'இந்தி எதிர்ப்பை' திட்டமிட்டு 'தமிழ் எதிர்ப்பாக' மாற்றுகிறது ஆரிய ஆர்.எஸ்.எஸ் அரசியல்.
நீதிமன்ற தீர்ப்புகள் இதற்கு துணை போகிறதா என்பதே நம் கவலை.
@SVESHEKHER@CMOTamilnadu@mkstalin உங்களுக்கு இதில் ஆக்கபங்கு எதுனா உண்டா இல்லை அழித்ததில் பங்கு இல்லையா ?
நாங்கள் கடினபட்டு முன்னேறுகிறோம் அதற்கு தீர்வு காண உங்களால் பாண்டே வால் என்ன முடிந்தது
இந்த மண்ணை மேல் கீழாக உழுது நிலமாக்கியது திராவிடம்..
அதிகாரமாக வந்து நிற்கிறது பார்பணியம்..
களையாக வந்து நிற்கிறார்கள் சீமான்கள்..
அதிகாரம் என்றும்
குளிருட்டபட்ட அரையில் ..
களையை நம்புவோர் காலத்ததால் பதறாவார்கள்..
விவசாயத்தை உணர்ந்தவர்கள் வெள்ளாமை பார்ப்பார்கள்
கல்வி,
பகுத்தறிவு கொண்டு சுயமரியாதையை தேடிய கல்வி வரலாற்று அரசியலாளர்களை உருவாக்கியது.
அரசியியலை மறந்த அரசியலாளர்களால் சீமான்கள் முளைக்கிறார்கள்.
இளையோர்களிடம் தாளமுத்து நடராஜர் முதல் சாரங்கபாணி வரையான வரலாற்று நாயகர்களை உருவாக்காமல் சென்றதால் இளையோர்கள் நடிகர்கள் பின்னால்
வருடத்தில் 10 மாதம் வெயில் 2 மாதம் மழை குளிர் வரும் என்று சொல்றாங்க.?
மொத்த மழையும் ஒரே நாளில் வருகிறது என்றால்...
அப்போ ஒரே நாளில் அதை கடலுக்கு அனுப்பவும் முடியாது தானே?
அப்போ மழைநீரை உள் வாங்கி அனுப்ப கட்டமைப்புகளை அனைத்து அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து உருவாக்குங்கள்
@Udhaystalin@KKNagar_PBalaji அப்பார்ட்மெண்ட் என்றால் பூங்கா உண்டு விளையாட்டு மைதானம் உண்டு
மழை நீரை சேகரிக்க குட்டைகள், குளங்கள், கிணறுகள் எங்கே?
அதிகமாக நீர் தேங்கும் இடங்களில் ஒரு குறிப்பிட்ட இடம் நமக்கு கிடைத்தால் அதை நீர் தேக்கமாக அமைக்க பாருங்கள் ..
ஒரு வருட மழை 4 நாட்கள் என்றால் நிலத்தடி நீரையும்