களமிறங்குவோம்!!
மாணவனை மிதிக்கும்
மோடிக்கு இனி இடமில்லை!!
உரிமையை நசுக்குபவனுக்கு
ஊருக்குள் அதிகாரமில்லை!!
இரண்டில் ஒன்று பார்ப்போம்!!
மாணவர் போராட்டத்தை
காக்க கரம் கோர்ப்போம்!
அனைவரும் வருக!!
#BANneet#NEETExamPaperLeak@may17iyakkam
ஆய்வாளர் அமர்நாத் அவர்களின் கீழடி ஆய்வறிக்கையை நிராகரித்துவிட்டு, மேலதிக சோதனை எனும் பெயரில் பாஜகவால் அனுப்பப்படும் ஆய்வுக்குழு கீழடிக்கு வருகிறது. கீழடி உறுதி செய்த தமிழினத்தின் தொன்மையையும், சமயசார்பற்ற வாழ்வியலையும், தமிழ் மொழியின் பயன்பாட்டையும், தமிழர்களின் கல்வியறிவையும், தமிழரின் தொழில்வளம் கொழிக்கும் நகர நாகரீகத்தையும் பாஜக அரசு ஏற்க மறுத்து வருகிறது.
கீழடி பெருமையை உலகிற்கு தெரிவிக்கும் ஆய்வாக நடத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பைச் செலுத்தியவர் ஆய்வாளர் அமர்நாத் அவர்கள். அவ்வகையில் கீழடி வெளிப்படுத்தும் உண்மைகளை பாதுகாக்கும் பொறுப்பு நமக்குண்டு. ஜீன்30ம் தேதிக்குள்ளாக சங்கிகளிம் ஆய்வுக்குழு வந்தடைவதாக இருக்கிறது. ஏற்கனவே 2016ம ஆண்டில் இவ்வாறான முயற்சியை மோடினரசு மேற்கொண்டபோது மறியல் போராட்டத்தை மே17 இயக்கம் , குடந்தை அரசன், கே.எம்.சரீப் , நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் நடத்தி அதை தடுத்து நிறுத்தியது. நேரடியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.முருகவேல்ராஜன் அவர்கள் கீழடியில் நேரடியாக நிர்மலா சீதாராமன், தமிழிசையை எதிர்த்துப்போராட்டம் நடத்தினார். இவ்வாறாக கீழடிக்கான நமது போராட்டம் தொடர்போராட்டமாக இருக்கும் வேளையில் மீண்டும் ஒரு மறியலை நடத்த வேண்டிய சூழலில் தமிழ்ச்சமூகம் உள்ளது. ஆகவே அனைத்து சனநாயக ஆற்றல்களும் சங்கிகளின் இந்த சதியை முறியடிக்க அணிதிரள வேண்டுமென மே17 இயகம் கோரிக்கை வைக்கிறது. வழக்கம் போல போலித்தமிழ்தேசியவாதிகள், பிராமன கடப்பாரைகள் வேடிக்கை பார்ப்பார்கள் என்பதால் அவர்களையும் அம்பலப்படுத்தும் விதமாக திராவிட-பெரியாரிய ஆதரவு ஆற்றல்கள் அணிதிரள வேண்டும். தமிழின அடையாளமாகிய கீழடியை காக்கும் பணியில் மே17 இயக்கத் தோழர்கள் போராட்ட களத்திற்கு அணிதிரள தயாராக வேண்டும்.
உரிய விசாரணை நடத்தி, இளம் தம்பதியினருக்கு மிரட்டல் கொடுக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது கட்சி ரீதியாகவும், தவெக அரசு சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த தம்பதியினரின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.
முன்னோர்களை வழிபடுகின்ற ஒரு மரபில் வந்தவர்கள் நாம். முன்னோர்களினுடைய அந்த நற்செயல்களை, வீரஞ்செறிந்த போராட்ட குணத்தினை அடுத்த தலைமுறையிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமந்து வந்திருக்கிறோம் நாம்.
தன்னோடு வாழ்ந்த, தனக்குத் தொடர்பான உறவாக இருக்கக்கூடியவர்களை இழக்கும்போது அதை நினைவேந்துகின்ற அந்த உணர்வு என்பது விலங்குகளுக்கு இருக்கும்போது, மனிதர்களுக்கு இருக்காதா என்ற கேள்வி மிக முக்கியமானதாக நாம் பார்க்க வேண்டியது
மாவீரர்கள் மண்ணை நேசித்த காரணத்தினால் மரணத்தை நேசித்தார்கள் மரணம் வந்தாலும் மண்ணை நாங்கள் விட்டுத் தர மாட்டோம் என்று உறுதியுடன் நின்றார்கள் . வீரஞ்செறிந்த வரலாற்றை படைத்தார்கள்.இந்த விடுதலை போராட்ட வரலாற்றை நாம் அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும்.
https://t.co/goHiHRDQsm
'நெல்'லை பேசும் முன் 'நீட்'டை பேசுவோம்
நீட் தேர்வு ஊழல் குறித்து எப்போது வாய் திறக்கபோறீங்க அண்ணாமலை..?
ஊடகத்தின் முன்பாக எப்போதும் குத்தவைத்து உட்கார்ந்திருக்கும் நீங்கள், தற்போதைய 'நீட் தேர்வு ரத்து', 'நீட் தேர்வில் பாஜக நபர்களின் ஊழல்' குறித்தெல்லாம் வாய் திறப்பீர்களா அல்லது "என்ன ஆனாலும் நீட்டை ரத்து செய்யமாட்டோம்.." என சொன்னீர்களே அதே நிலைப்பாட்டை தொடர்வீர்களா?
நீட்டை தொடர்வீர்கள் என்றால், நீட் ஊழலில் உங்களுக்கு என்ன தொடர்பு என கேட்க அனைத்து உரிமையும் தமிழருக்கு உண்டல்லவா... ஊழலில் திளைக்கும் நீட் தேர்வில் பாஜக பலனடைவது அம்பலமான பின்னர், உங்களை போன்றோருக்கு தொடர்புண்டா என ஆய்வு செய்யவேண்டுமல்லவா.
ஏற்கனவே அண்ணாமலையாகிய உங்கள் மீதான ஊழல்பட்டியலை உங்கள் கட்சிக்காரர்கள், ஆர்.எஸ்.எஸ் நபர்கள் சமூகவளைதளத்தில் எழுதி அம்பலப்படுத்திவிட்டார்கள். இந்நிலையில் உங்கள் மீது சந்தேகம் கொள்வதற்கு நூறு நியாயங்கள் உண்டல்லவா திரு.அண்ணாமலை?
ஊடக ஊதுபத்தி Karikalan Kiru இருக்கானே.. தமிழ்நாட்டு ஆதரவா பேசுற மாதிரி தான் தெரியும் ஆன் தமிழர்களை சுட்டுக்கொலை செஞ்ச கார்ப்பரேட் கம்பெனி ஓனரு தமிழ்நாடு வந்துருக்கான் வாங்க எல்லாரும் விரட்டலாம்னு கூப்பிட்டா ஓடி ஒளிஞ்சுக்குவான்.. அவ்வளவு ஏன் RSS பேரணி நடத்துனா கூட எதிர்த்து .
Dear Annamalai,
'Sanatana Politics' is being kicked out of TN.
Tamil people said 'Storng NO' to BJP & Sanatana Hindu fanatics. Your party lost 99% of the seats contested. Despite all the arm-twisting tactics of your higher command, and downloading all cow dungs from north, BJP couldnt win decently. DMK is replaced by TVK, a state party. Tamils didnt chose BJP. & Modi's Gang.
BJP's performance is Worst than any party of Tamilnadu.
17 ஆண்டுகள் கடந்தும் போராடிக் கொண்டிருக்கிறது தமிழினம். முள்ளிவாய்க்காலில் தொடங்கிய மானுடகுல அழிவு பாலஸ்*தீன காஸா வரை நீண்டுகொண்டே செல்கிறது. நம் இனத்திற்கான விடியலாய், சுதந்திர தேசமாய் மலர்ந்து கொண்டிருந்த நாடு அழிக்கப்பட்ட போது, துணிந்து மறித்தவர்கள் விதையாகிப் போனார்கள். மரித்தவர்களின் இறுதி மூச்சுக்காற்று ஈ*ழத்திலிருந்து பெருங்கடல் வழியே நம்மை ஆரத்தழுவியது. 'வேண்டும் விடுதலை' எனும் முழக்கத்தை முள்ளிவாய்க்காலில் இருந்து ஏந்தி வந்தது அந்த சுவாசக்காற்று. உயிர்கொடையாளிகள் நமக்குக் கையளித்த விடுதலை நெருப்பை பேணிப்பாதுகாத்து முன்னகர்த்தும் கடமையை நினைவு கூர்வோம்.
கடந்த 16 ஆண்டுகளாய் கடற்கரையில், தமிழர் குருதி கலந்து வீசியடிக்கும் பேரலைகளின் முற்றத்தில் நினைவேந்துகிறோம். இவ்வாண்டும் மே மாதம் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்தல் செய்கிறோம். தமிழினத்தின் அயராத போர்க்குணத்தை உயர்த்திப் பிடிப்போம்.
குடும்பத்தோடும், நணர்களோடும் நினைவேந்த அவசியம் வாருங்கள். தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான மாபெரும் நினைவேந்தல் நிகழ்வில் சாதி-மதம் கடந்து ஒன்றுகூடுவோம்.
மே பதினேழு இயக்கம்
வங்காளத்தில் பாஜக வெற்றியறிவிக்கப்பட்ட முதல்நாளில் இருந்து மாற்று கட்சியினர் மீது தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்தவுடன் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி, எல்.முருகன், வினோஜ் போன்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதை இந்த வீடியோக்கள் சொல்லுகின்றன. இந்த நபர்களின் அமைதியான முகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கொடூரமான அரசியல் இவை. இதனாலேயே ஆட்சி மாற்றத்தை செய்தாலும், தமிழர்கள் பாஜகவை தேர்தெடுக்கவில்லை.
#சனாதனம்_நிராகரிக்கப்பட்டது.
#SanatanaDharma_Demolished_in_TN
தமிழர் வரலாறும் அரசியலும் சுவாரஸ்யம் மிக்கவை. பிற இடங்களில் அதிகம் காணப்படாத அளவில் இங்குதான் வரலாறும் அரசியலும் இலக்கியம் மற்றும் கலை அம்சங்களுடன் அதிகமாக ஊடாடி வருகின்றன.
விஜய் அரசியலுக்கு வருவதும் இங்குதான் சாத்தியம். சினிமாவை விமர்சித்த பெரியார் தலைவராவதும் இங்குதான் சாத்தியம்.
இந்த போக்கின் இன்னொரு கண்ணியில்தான் பாரதியும் பாரதிதாசனும் இடம் பிடிக்கின்றனர்.
கட்டுக்கதைகளுக்கும் வெற்றுச் சவடால்களுக்கும் வரலாற்றுத் தொடர்ச்சியற்ற அபத்தப் பழிகள் போடுவதற்கும் பெயர் பெற்றவரான நாம் கட்சி தமிழர் சீமான், சமீபத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்வில் பாரதியாரை புகழ்ந்து பேசும் முகமாக பெரியாரை வழக்கம் போல் அரைவேக்காடாக வெந்து விமர்சித்துக் கொண்டிருந்தார்.
பெரியாருக்கு விளம்பரம் இத்தகைய இழிபிறவிகள்தான் என்பதால், பொருட்படுத்தாமல் செல்லலாம். ஆனால் அங்கு அவர் முக்கியமான ஒரு விஷயத்தை செய்தார். பாரதியின் எழுத்துகளை புகழும் போர்வையில் பாரதியின் அரசியலை புகழ்ந்து கொண்டிருந்தார்.
சீமான் நின்று கொண்டிருந்த ஆர்எஸ்எஸ் மேடை என்கிற புள்ளியில் இருந்துதான் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள அரசியல் முரணை புரிந்து கொள்ள வேண்டும்.
பாரதியின் எழுத்துக்கு பாரதிதாசன் ரசிகர். எனவேதான் அவர் பாரதிதாசன். பாரதியின் எழுத்து எவருக்கும் பிடிக்காமல் இருக்காது. எனக்குமே பிடிக்கும். எனினும் அவற்றில் துருத்தி நிற்கும் அரசியலை தள்ளி வைத்துதான் நான் வாசிப்பேன். பாரதிதாசனிடம் அந்தத் துருத்தல் இருக்காது.
பாரதியின் அரசியலுக்கான ரிஷிமூலம் வங்கப் பிரிவினையில் இருக்கிறது. தொடக்கத்தில் தமிழ் ஆசிரியராக இருந்தவர் பாரதி. பிற்காலத்தில் சுப்பிரமணிய அய்யர் நடத்தி வந்த சுதேச மித்திரன் பத்திரிகையில் சேர்ந்த பிறகு, அரசியல் வெளிக்குள் பாரதி பிரவேசிக்கிறார். தேசிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் இயக்கத்துடன் இயங்கினார். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த தீவிரப்பிரிவுடன் இயங்குகிறார். காங்கிரஸ் மாநாட்டிற்கும் சென்றார். திரும்புகையில் கொல்கத்தாவுக்கு சென்று நிவேதிதாவை சந்திக்கிறார். வங்கப் பிரிவினை காலம் அது என்பதால் வங்க அரசியலின் தாக்கம் பாரதியை அதிகமாக பாதிக்கிறது.
இந்தியத் துணைக்கண்டத்தை பாரதம் என விளிக்கத் தொடங்கியது பார்ப்பனர்கள் எனில், பாரதத்தை தாயாக கற்பனிக்கத் தொடங்கியது வங்கம்தான். பாரதத் தாய் என பாரதி எழுதிய எழுத்துகள், வங்கப் பார்ப்பனர்களின் அரசியல் தாக்கத்திலிருந்து பெற்றவைதான்.
போலவே ஆங்கிலத்தை ஆங்கிலேயர்களின் மொழி என்கிற பார்வையுடன் எதிர்க்கும் அரசியலும் வங்கத்தை சேர்ந்ததுதான். எனவே அவர்கள் பாரத நாட்டுக்கான மொழியாக இந்தி மொழியைதான் வரித்துக் கொள்ளவே விரும்பினார்கள். பாரதியும் அதையேதான் எடுத்தார். தமிழ் மீது அவருக்கு பெரும் பற்று இருந்தாலும் இந்த நாட்டுக்கென பொது மொழி வேண்டும் எனவும் அவர் பேசியிருக்கிறார்.
முக்கியமாக தேசிய விடுதலை போராட்டத்தை இந்து மதத்துடன் இணைக்கும் வேலையும் இந்த காலக்கட்டத்தில்தான் செவ்வனே நடைபெற்றது.
பாரதிதாசனோ திராவிடம் பாடியவர். திராவிடப் பண் எழுதியவர். இந்தியை எதிர்த்தவர். தமிழுக்காய் நின்றவர். பெரியாருடன் பயணித்தவர். மொழி வழி தேசியத்தை தம் அரசியலாக முன் வைத்தவர். பொதுவுடைமை சித்தாந்தத்தின்பால் பற்று கொண்டிருந்தவர்.
பாரதியின் அரசியல், விடுதலை காலத்துக்கு சரியானது போல் தோன்றியிருக்கலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் தேசியமாக இந்தியா மலர்ந்த பிறகு, அதுவும் பார்ப்பன ஆதிக்கத்துடன் உருவான பிறகு, ஆதிக்கத்தை மறுக்கும் அரசியல்தான் முதன்மை பெறும். பெற வேண்டும். அதுவே இயற்கை.
காங்கிரஸ் காலம் தொடங்கிய இந்து, இந்தி, இந்தியா ஆதிக்கத்தை தற்போதைய பாஜக ஆட்சி, அசுர வேகத்தில் பெரும் அகங்காரத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்தகைய வரலாற்றுக் கட்டத்தில் நின்றுகொண்டு ஆர்எஸ்எஸ் மேடையில் ஏறி நின்று கொண்டு பாரதி முன் வைத்த தேசிய அரசியலை விதந்தோதி, திராவிடத்தை கேலி பேசுவதன் வழியாக சீமான் அடைய விரும்புவது ஒரே ஒரு விஷயத்தைதான். இந்தத் தேர்தலில் விஜய்யிடம் பறிகொடுக்கும் சதவிகிதம் போக, மிச்ச ஒன்றிரண்டு விகிதத்தை கொண்டு அடுத்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி சேருவதற்கான அச்சாரம் மட்டும்தான் அது.
மற்றபடி சீமான் பேச்சில் பாரதி மீதான பாசமும் இல்லை, கவிதை மீதான பற்றும் இல்லை. அப்பட்டமான தேசியபிமானமும் இந்துத்துவ பாசமும்தான் ததும்பி வழிகிறது.
பாஜகவின் ஒன்றிய அரசு அருள்புரிய தமிழ் தேசியத்தை சீமான் படைப்பார் என நம்புவதைக் காட்டிலும் தற்குறித்தனம் ஏதும் இருந்துவிட முடியாது.
எனவே நாம் பாரதியின் பாடல்களை ரசிப்போம். பாரதிதாசனின் அரசியலை முன்னெடுப்போம். சீமானை தமிழ்தேசியத்திலிருந்து தூர வைப்போம்!
#புரட்சிக்கவிபாரதிதாசன்