தூத்துக்குடி மாநகரில் காங்கிரஸ் பேரியக்கம் முரளிதரன் அவர்கள் தலைமையிலும் கல்வித் தந்தை அன்பு அண்ணாச்சி APCV சண்முகம் அவர்களின் வழிநடத்துதலிலும் தன் அடையாளத்தை நிலைநிறுத்தியது
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாவட்ட தலைவராக SM சகாயராஜ் அவர்கள் பதவியேற்றபோது பலர் புருவத்தை உயர்த்தினர்.
ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் தனது திறமையால் காங்கிரஸ் பேரியக்கத்தை மிக எழுச்சியோடும் வலிமையோடும் வழி நடத்துவதை பார்த்து வியப்படையாதோர் யாருமில்லை என்பதே உண்மை.
அனைவரையும் அரவணைத்து வழிநடத்தும் குணம். கட்சிக்காக ஓய்வின்றி உழைக்கும் ஆற்றல், ஏழை தொண்டர்களுக்கு உதவும் நற்குணம், ஒவ்வொரு தொண்டனையும் பாதுகாக்கும் வீரகுணம், இப்படி மாநகர் மாவட்ட தலைவரின் நற்குணங்களை பட்டியலிடலாம்..
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி என்று கொக்கரித்தவர்களின் சப்தநாடி ஒடுங்கி நாட்கள் பல ஆகிவிட்டன.
அழிவில்லை...அழிவில்லை..
இனி தூத்துக்குடியில் காங்கிரஸுக்கு என்றும் அழிவில்லை என நாம் ஆரவாரத்தோடும் மகிழ்வோடும் கொண்டாடலாம்..
மாநகர் மாவட்ட தலைவர் S M சகாயராஜ் அவர்களின் திறமையையும் நற்குணங்களையும் கணிக்க தவறி மாற்றுக்கட்சிக்கு சென்றோரை மீண்டும் தாய் வீடான காங்கிரஸ் பேரியக்கத்தில் இணையலாம்.
வரவேற்க காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது..
ஒன்றிணைவோம்..
மீண்டும் வலுப்பெறுவோம்..
வாழ்க காங்கிரஸ்.
ஓங்குக பெருந்தலைவர் காமராஜ் ஐயா புகழ்...
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான ஐயா திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (05.09.2026) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. எஸ்.எம். சகாயராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், துணை அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், துணை அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் மாவட்ட தலைவர் திரு. எஸ்.எம். சகாயராஜ் அவர்கள் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் மக்கள் பணி தொடர்கிறது...
இன்று தூத்துக்குடி மாநகர் பாத்திமா நகரில் மாநகராட்சியின் பொறுப்பின்மையை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மக்கள் நாயகர், தொண்டர்களின் காவலர், அஞ்சா நெஞ்சர் S M சகாயராஜ் அவர்களின் தலைமையில் போராட்டம் நடத்தியதின் விளைவாக மாநகராட்சி தன் பணியை செய்ய முன்வந்தது...
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பசியை போக்க பெருந்தலைவர் உணவு திட்டத்தை கொண்டு வந்தார்..
அதன்பின் ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் ஏதோ தாங்கள் சாதித்தது போல தங்கள் பெயரை வைத்து ஏதோ அவர்கள் சொந்த காசில் இருந்து செலவழிப்பது போல நாடகமாடி மக்களை ஏமாற்றினர்..
அந்த ஏமாற்றும் இருளை அகற்றி இன்றைய முதல்வர் பெருந்தலைவர் தன்னலமின்றி தொடங்கிய திட்டத்திற்கு அவரது பெயரையே வைத்து கௌரவப்லடுத்தியது பெரும்யாக இருக்கிறது.
அதற்காக எங்கள் தலைவர், எழுச்சி நாயகன், இளம்புயல், அஞசா நெஞ்சன் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் S M சகாயராஜ் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறார்..
சகாயராஜ் வந்தாரு.
காங்கிரஸை வளர்த்தாரு..
தூத்துக்குடி மாவட்ட அதிமுக தொழிற்சங்க இணைச் செயலாளர் திரு.PJC.சுரேஷ் பெர்னாண்டோ அவர்கள் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் முன்னாள் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு டாக்டர் ஏ செல்லக்குமார்,தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் எம் சகாயராஜ் அவர்களின் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு தென் மண்டல தலைவர் ஜான் சாமுவேல் ,மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால்,மைக்கேல் பிரபாகர் மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ்,மீனவர் காங்கிரஸ் தலைவர் சிமியோன் துணைத் தலைவர் ராஜா ராம் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் புதிதாக இணைந்துள்ள அவருக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் மாநகர கமிட்டி சார்பாக காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.S. சகாயராஜ் அவர்கள் தலைமையில் மினி மாரத்தான் போட்டியை துவக்கி வைத்து பரிசு வழங்கினேன். 2000 க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்
வெற்றி..வெற்றி..
மாபெரும் வெற்றி..
தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் மீண்டும் வலிமையானது..
இன்று (19.07.2026) தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற "Run of Equal Education" என்ற மாரத்தான் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி நிகழ்வாக நடைபெற்றது..
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல குமார் அவர்கள் முன்னிலை வகிக்க தூத்துக்குடி காங்கிரஸின் எழுச்சி நாயகன் இளம்புயல் மாநகர் மாவட்ட தலைவர் S M சகாயராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ செல்வங்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
உள்ளூரில் இருந்து மட்டுமல்ல வெளியூரில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழர்கள் மட்டுமல்லாது பிற மொழி பேசும் பல வீரர்கள் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றனர்.
இதன் மூலம் மாரத்தானின் குறிக்கோளான "Run for Equal" என்ற வார்த்தை உண்மையானது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வீரங்கனைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் எவ்வித அசம்பாவங்களுமின்றி மிக சிறப்பான முறையில் இந்நிகழ்ச்சியை மாநகர் மாவட்ட தலைவர் S M சகாயராஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்..
இந்த மாபெரும் நிகழ்வால் தூத்துக்குடி மாநகர் எங்குமே காங்கிரஸ் காங்கிரஸ் என்று மக்கள் உரையாடுவதை கண்ட போது கட்சியின் எழுச்சியை காண முடிந்தது..
தூத்துக்குடியில் ஒரு வரலாற்று நிகழ்வு இன்று (19.07.2026)..
மறக்க முடியாத மறுக்க முடியாத அதிசயத்தக்க நிகழ்வு..
வீழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தை இன்னும் வலுவாக்கிய அரசியல் நிகழ்வு..
தூத்துக்குடியில் இனி காங்கிரஸ் இல்லை என்றவர்களின் வாயை அடைத்த நிகழ்வு..
இவனால் முடியாது என்றவர்களின் சொற்களை பொய்யாக்கிய நிகழ்வு..
எழுச்சி நாயகன், இளம்புயல், தூத்துக்குடி மாநகரின் காங்கிரஸ் பேரியக்கத்தை பாதுகாக்க, வலுவாக்க கிடைத்த பொக்கிஷம் S M சகாயராஜ் அரும்பெரும் சாதனையாக சாதித்து காட்டிய நிகழ்வு..
இனி என்றுமே நமக்கு வீழ்ச்சி இல்லை என பேச வைத்த நிகழ்வு..
அந்த நிகழ்வே இன்று மாபெரும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட மாணவ செல்வங்களுக்கான மாரத்தான்..
இந்த வெற்றிக்காக உழைத்த ஒவ்வொரு சாதனையாளரையும் எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது...
ராகுல் காந்தி யார் என கேட்ட சங்கிகளுக்கு நேற்று உத்தராகாண்ட், டெஹ்ராடூனில் வந்த கூட்டம் ராகுல் காந்தி யார் என்பதை சங்கிகளுக்கு உணர்த்தியது..
தூத்துக்குடி மாநகரில் சகாயராஜ் யார் என்று கேட்ட கூட்டத்திற்கு இன்று வெற்றிகரமாக நடத்திய மாணவ செல்வங்களுக்கான மாரத்தான் அவர் யார் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தியது..
டெஹ்ராடூன். தூத்துக்குடி
இன்று (04.07.2026) தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸின் செயல்வீரர்கள் கூட்டம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எழுச்சி நாயகரும், மாநகர் காங்கிரஸை உயிர்த்துடிப்போடு வைத்திருப்பவருமான S M சகாயராஜ் அவர்கள் தலைமையில் கைலாஷ் மஹாலில் வைத்து நடைபெற்றறது.
இக்கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடவும், மத்திய அரசின் மாணவர்களுக்கு எதிரான கல்வி கொள்கைகளை எதிர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாராத்தான் ஓட்டப்பந்தயமும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன் அவர்களும், மண்டல தலைவர்களும், துறை சார்ந்த தலைவர்களும், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல இளைஞர்கள் தங்களை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்து கொண்டனர்..
மாநகர் மாவட்ட தலைவர் S M சகாயராஜ் அவர்களின் அயராத உழைப்பினாலும், அன்பான வழிகாட்டுதலினாலும் காங்கிரஸ் பேரியக்கம் அசுர வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது என்றால் மிகையாகாது..
வாழ்க காங்கிரஸ்.
வளர்க காங்கிரஸ்.
ஜெய் ஹிந்த்..
பத்து காங்கிரஸார் கட்சியில் இணைந்ததை நூறு பேர் இணைந்ததாக விளம்பரம் செய்யும் தீய சக்தி திமுக, தங்கள் மாமன்ற உறுப்பினரும், வட்டச்செயலாளரும் திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததை பற்றி பேசாதது ஏன்..?
திமுக இனிமேல் எக்காலத்திலும் தமிழகத்தை ஆள முடியாத நிலையை தவெக காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யும் என்பதே உண்மை.
தூத்துக்குடி மாநகரில் காங்கிரஸார் மேல் தொடரும் வன்முறை தாக்குதல்களை எதிர்த்து காங்கிரஸ் பேரியக்கத்தின் எழுச்சி நாயகன், இளம்புயல் மாநகர் மாவட்ட தலைவர் S M சகாயராஜ் அவர்களின் கண்டன அறிக்கை.
https://t.co/e8YXQl8HRJ
தூத்துக்குடியில் முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை கண்டித்து தூத்துக்குடி மாநகர தலைவர் திரு சகாயராஜ் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு
அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுடைய திமுகவை சேர்ந்த குண்டர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு காமராஜர் அவர்களை வீட்டிற்கு வந்து ஆட்டோவை உடைத்து
அரிவாளால் மிரட்டி எங்கள் அண்ணனை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதைப் பற்றி புகாராக தெரிவிக்கப்பட்டது
திமுகவின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் திட்டங்கள் இதோ ஆரம்பமாகிவிட்டது. இனி மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
இதை காவல்துறையினர் சரியாக கையாள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்று தர வேண்டும் இல்லை என்றால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வரை இந்த பிரச்சனையை கொண்டு சென்று இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டியது வரும்.
சட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.
நான் ஏற்கனவே கூறியதைப் போல இனி திமுக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரிதளவில் கொண்டு வந்து அதன் மூலம் இந்த ஆட்சிக்கு கலங்கத்தை விளைவிக்கும்..
இந்த ஆட்சிக்கு காங்கிரஸ், விசிக, மற்ற கூட்டணி கட்சிகள் என்றும் உறுதுணையாக இருக்கும். திமுகவின் தீய எண்ணங்களை நாங்கள் இணைந்து தோற்கடிப்போம்..
- S M சகாயராஜ்..
மாநகர் மாவட்ட தலைவர்.
தூத்துக்குடி மாநகர்..