Arresting LOP @RahulGandhi ji has become a hobby for this fascist regime.
We are watching the total destruction of Indian democracy in real time.
These criminals in Delhi Police uniform will pay a heavy price for how they have manhandled Rahul ji and @priyankagandhi ji.
We are only just getting started, this petty intimidation will not deter us. We will return in greater numbers tomorrow, the day after, and the day after - until the Vote Chors face justice.
Oh my God..
Narendra Modi is afraid of Rahul Gandhi this much..?
56" where it gone..?
"Ek Akela" where it gone..?
'Non biological' where it gone..?
Darpok Modi...
அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசாஅவர்களின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது!
மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும் தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது. தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது; திரு.உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் குறிப்பிட்ட "#ஆபாசநிதி" என்று சொன்னது போல, திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள திரு.௮.ராசா MP அவர்கள் இன்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. அக்கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசுவது சற்றும் குறைந்தபாடில்லை; பெண்களே திமுகவை முற்றிலுமாக நிராகரித்து வருவதற்குக் காரணம் இவர்களின் இந்த வக்கிர சிந்தனைதான்!
கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், தவெக அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களின் தாயாரைக் குறிவைத்து இத்தகைய தரம் தாழ்ந்த தனிநபர் வசைபாடல்களையும் அச்சுறுத்தல்களையும் தொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இந்த அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல!
#TNCongress
தூத்துக்குடி மாநகரில் காங்கிரஸ் பேரியக்கம் முரளிதரன் அவர்கள் தலைமையிலும் கல்வித் தந்தை அன்பு அண்ணாச்சி APCV சண்முகம் அவர்களின் வழிநடத்துதலிலும் தன் அடையாளத்தை நிலைநிறுத்தியது
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாவட்ட தலைவராக SM சகாயராஜ் அவர்கள் பதவியேற்றபோது பலர் புருவத்தை உயர்த்தினர்.
ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் தனது திறமையால் காங்கிரஸ் பேரியக்கத்தை மிக எழுச்சியோடும் வலிமையோடும் வழி நடத்துவதை பார்த்து வியப்படையாதோர் யாருமில்லை என்பதே உண்மை.
அனைவரையும் அரவணைத்து வழிநடத்தும் குணம். கட்சிக்காக ஓய்வின்றி உழைக்கும் ஆற்றல், ஏழை தொண்டர்களுக்கு உதவும் நற்குணம், ஒவ்வொரு தொண்டனையும் பாதுகாக்கும் வீரகுணம், இப்படி மாநகர் மாவட்ட தலைவரின் நற்குணங்களை பட்டியலிடலாம்..
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி என்று கொக்கரித்தவர்களின் சப்தநாடி ஒடுங்கி நாட்கள் பல ஆகிவிட்டன.
அழிவில்லை...அழிவில்லை..
இனி தூத்துக்குடியில் காங்கிரஸுக்கு என்றும் அழிவில்லை என நாம் ஆரவாரத்தோடும் மகிழ்வோடும் கொண்டாடலாம்..
மாநகர் மாவட்ட தலைவர் S M சகாயராஜ் அவர்களின் திறமையையும் நற்குணங்களையும் கணிக்க தவறி மாற்றுக்கட்சிக்கு சென்றோரை மீண்டும் தாய் வீடான காங்கிரஸ் பேரியக்கத்தில் இணையலாம்.
வரவேற்க காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது..
ஒன்றிணைவோம்..
மீண்டும் வலுப்பெறுவோம்..
வாழ்க காங்கிரஸ்.
ஓங்குக பெருந்தலைவர் காமராஜ் ஐயா புகழ்...
அழைக்கிறார் இந்திய தேசிய காங்கிரஸின் தூத்துக்குடி மாநகர எழுச்சி நாயகரும், அஞ்சா நெஞ்சரும். இளம் புயலுமான மாநகர் மாவட்ட தலைவர் S M சகாயராஜ் அவர்கள்...
"அன்பு சார்ந்த தேசியத் தோழர்களுக்கு வணக்கம். 🙏தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின் பேரில் இதர பிற்படுத்தப்பட்ட(OBC ) பிரிவினர்களின் சமூக நீதி விவரங்களை பற்றியும் அதற்கான விழிப்புணர்வு மற்றும் விளக்க உரை குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 24.09.2026 ( வியாழக்கிழமை) காலை 10:30 மணியளவில் கைலாஷ் மஹாலில் ( ராஜாஜி பூங்கா எதிரில் ) வைத்து நடைபெற உள்ளது.
மாவட்டத் தலைவர் திரு.S.M.சகாயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் திரு C. ராபர்ட் புரூஸ் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு. H. விஜய் வசந்த் அவர்களும் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை தலைவர் வழக்கறிஞர் திரு T.A. நவீன் அவர்களும் கலந்து கொண்டு விளக்கவுரை மற்றும் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
ஆகையால் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை அமைப்பு தலைவர்கள்,வார்டு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."
S.M.சகாயராஜ் https://t.co/YNTUixKtEs தலைவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி*
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்
இந்திய விடுதலைக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த மாபெரும் தேசபக்தர் அய்யா வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், சென்னை அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்திற்கு துணிச்சலுடன் சவால் விடுத்தவர் வ.உ.சி. அவர்கள்.
தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடி, சிறை மற்றும் கொடுமைகளைச் சந்தித்தும் தேசப்பற்றில் பின்வாங்காத அவரது தியாகம் என்றும் போற்றத்தக்கது.
வ.உ.சி. அவர்களின் தியாகம், இந்திய விடுதலைக்காக காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களும் தொண்டர்களும் செய்த எண்ணற்ற தியாகங்களின் அழியாத அடையாளமாகும்.
நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களின் தியாகத்தை இந்திய நாடு என்றும் மறக்காது.
அய்யா வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவரது வீரத்தையும் தேசப்பற்றையும் தியாகத்தையும் போற்றுவோம்.
🇮🇳 வ.உ.சி. புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
🇮🇳 விடுதலைப் போராட்டத் தியாகிகள் புகழ் ஓங்கட்டும்!
#வஉசிதம்பரனார் #கப்பலோட்டியதமிழன் #பிறந்தநாள் #சுதேசி #விடுதலைப்போராட்டம் #தேசபக்தி #காங்கிரஸ் #தமிழ்நாடு
#TNCongress
மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப் பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 84,318 பள்ளிகள் காணாமல் போயுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், மூடப்பட்டவற்றில் 93 சதவீதப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான்.
சுமார் 78,502 அரசுப் பள்ளிகளுக்கு மோடி அரசு மூடுவிழா நடத்தியுள்ள அதே வேளையில், 15,461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகியிருப்பது இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
சமூக நீதியையும் பொதுக் கல்வியையும் உயிர்மூச்சாகக் கொண்ட நமது தமிழ்நாட்டிலும் கூட, இந்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களின் ஒரே புகலிடமாக விளங்கும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு உரிய நிதி ஒதுக்காமல், பள்ளிக் கல்வியை திட்டமிட்டுச் சீரழிக்கும் வேலையை பாஜக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை என்பதற்காகவே, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மொத்தம் ₹5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. நீதிமன்றம் தலையிட்டதால் வேறு வழியின்றி RTE-க்கு மட்டும் ₹714 கோடியை கிள்ளிப் போட்டுவிட்டு, ஒட்டுமொத்த பள்ளி கல்வி நிதியையும் தடுத்து வைத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு பிளாக்மெயில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது!
"பள்ளி சீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதல்" என்ற போலி அறிக்கையை வைத்துக்கொண்டு, ஒற்றை ஆசிரியர் பள்ளி, குறைவான மாணவர்கள் என்ற காரணங்களைக் கூறி எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி, ஒட்டுமொத்தக் கல்வியையும் கார்ப்பரேட் மற்றும் தனியார் கல்வி மாஃபியாக்களின் கைகளில் தாரைவார்ப்பதே மோடி அரசின் உண்மையான நோக்கம்.
அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குத் திறனற்ற ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கான சட்டப்பூர்வ நிதிப் பங்கையும் வஞ்சகமாக மறுத்து, தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்.
இதை மாற்ற 👇
#RahulGandhiForPM
#TNCongress
Remembering Dr. Y. S. Rajasekhara Reddy on his death anniversary.
Dr. Y. S. Rajasekhara Reddy was not merely a Congress leader; he was a true mass leader who built his political journey from the grassroots and remained deeply connected with the people.
His historic padyatra in 2003 was a turning point. Walking thousands of kilometres across Andhra Pradesh, he listened directly to farmers, workers, students, women and the poor. He understood their struggles not from reports, but by being among them.
When he became Chief Minister in 2004, he translated that understanding into governance.
Free power for farmers, irrigation initiatives, Aarogyasri, support for students, housing for the poor and numerous welfare measures made his government synonymous with people-centred development and social justice.
His belief was simple but profound:
Development has meaning only when it reaches the last person in the queue.
His tragic and untimely passing in 2009 came when he had much more to contribute. His vision for irrigation, agriculture, healthcare, education and inclusive development had many unfinished chapters.
Those unfinished dreams are perhaps the most enduring part of his legacy.
Today, when people’s leader @RahulGandhi speaks about social justice, equal opportunity, the rights of the marginalised and ensuring that every community gets its rightful share in power and resources, it reminds us of the same fundamental Congress principle that YSR embodied:
Politics is not about power for a few. Politics is about empowering the many.
YSR walked with the people to understand their pain and aspirations. His legacy reminds us that leadership begins by listening to the people and ends by transforming their lives.
On his death anniversary, I pay my heartfelt tribute to Dr. Y. S. Rajasekhara Reddy.
The man may have left us, but his dream of a more just, inclusive and compassionate society lives on.
@realyssharmila@INC_Andhra
#YSR #YSRajasekharaReddy #YSRLegacy #Congress #RahulGandhi
#RahulGandhiForPM
#SocialJustice #PeopleFirst
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்தியில் ஆளும் பாசிச பாஜக உத்தரகாண்ட் மாநில அரசால் சமீபத்தில் நம்முடைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் அவமதிக்கப்பட்டதை கண்டித்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல் எழுப்பிய நம்முடைய இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் மீது உத்தரகாண்ட் மாநில அரசு முதல் தகவல் அறிக்கை வழக்கு பதிவு செய்து எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் செயலை கண்டித்து இன்று (31.08.2026) மாலை 6.00 மணியளவில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் S M சகாயராஜ் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி அவர்களும் வற்றும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள், வார்டு தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அழைக்கிறார் இளம்புயல்..
அழைக்கிறார் காங்கிரஸ் பேரியக்கத்தின் போர்வாள்..
அழைக்கிறார் தூத்துக்குடி மாநகர் காங்கிரஸின் எழுச்சி நாயகன்..
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் S M சகாயராஜ் அவர்கள்..
நாளை நடைபெற இருக்கும் SSA திட்டத்தின் இரண்டாம் கட்டமான புதிய நிர்வாகிகளை நியமனம் தொடர்பான சந்திப்பிற்கு அனைவரையும் அழைக்கிறார்..
அனைவரும் வாரீர்..
ஒன்றிணைவோம்..
இயக்கத்தை பலப்படுத்துவோம்..
காங்கிரஸ் வாழ்க..
ஜெய்ஹிந்த்...
இன்று முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் 82 வது பிறந்தநாள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் S.M. சகாயராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா அவர்கள் தலைமையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட சோனியா காந்தி பேரவை பொதுச்செயலாளர் நவநீதகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், திருமதி அசன் பாத்,மாவட்ட துணைத் தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், ரஞ்சிதம் ஜெபராஜ்,பி ஜே சி சுரேஷ், ராஜாராம்,மாவட்ட செயலாளர்கள் இக்னேசியஸ், அந்தோணி குரூஸ், ஜோனதன்,செய்யது அலி,துணை அமைப்பு தலைவர்கள் எஸ்சி துறை பிரபாகரன், மீனவர் காங்கிரஸ் துறை சிமியோன்,அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு திருமதி சேவியரம்மாள், ஆராய்ச்சி பிரிவு தலைவர் சிவ்ராஜ் மோகன் இளைஞர் காங்கிரஸ் ரென்னிஸ் பாபு, கிழக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆலன் ஜோஸ்வா, இளைஞர் காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு பொன்னரசி மகளிர் காங்கிரஸ் நிர்வாகி இசக்கியம்மாள்,வார்டு தலைவர்கள் காமராஜ், முனியசாமி,மகாலிங்கம்,மீனவர் காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் சகாய புஷ்பராஜ்,வார்டு நிர்வாகிகள் ஜெய பாண்டியன், ஜோக்கின்,பெனடிக்ட் செல்வராஜ்,உட்பட மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.🙏
காங்கிரஸ் பேரியக்கத்தின் மக்கள் பணி தொடர்கிறது...
இன்று தூத்துக்குடி மாநகர் பாத்திமா நகரில் மாநகராட்சியின் பொறுப்பின்மையை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மக்கள் நாயகர், தொண்டர்களின் காவலர், அஞ்சா நெஞ்சர் S M சகாயராஜ் அவர்களின் தலைமையில் போராட்டம் நடத்தியதின் விளைவாக மாநகராட்சி தன் பணியை செய்ய முன்வந்தது...
அழைக்கிறார் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸின் தூணும்,
இளம்புயலும், எழுச்சி நாயகரும், அஞ்சா நெஞ்சரும், தொண்டர்களின் பாதுகாவலருமான தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் S M சகாயராஜ் அவர்கள்..
"அன்பு சார்ந்த தேசிய தோழர்களுக்கு வணக்கம்*🙏
நம்முடைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கேஅவர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த் வானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்பு பாஜகவின் மதவாத கும்பலால் தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை 14.08.2026 ( வெள்ளிக்கிழமை) மாலை 4:30 மணி* யளவில் 1ம் கேட் கேட் காந்தி சிலை முன்பு மாபெரும் சத்தியாகிரக அமைதிப் போராட்டம் நடைபெற உள்ளது.
ஆகையால் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் வார்டு தலைவர்கள் தொண்டர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."
S.M.சகாயராஜ் https://t.co/YNTUixKtEs தலைவர்,தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
அனைவரும் வாரீர்..
பாஜகவின் தீண்டாமை கொள்கையை எதிர்ப்போம்.
உணவு விநியோக தளங்களை விட வேகமாக டெலிவரி செய்யும் புதிய சாம்பியன் - மோடி-ஷா 'Bulldozer Raj'!
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க, எவ்வித விவாதமும் இன்றி 9 முக்கிய மசோதாக்களை வெறும் 52 நிமிடங்களில் "Fast Delivery" செய்துள்ளனர்.
மசோதாக்களும் அனுப்பப்பட்ட நேரமும்:
1. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா - 1 நிமிடம்
2. MSME வளர்ச்சி (திருத்த) மசோதா - 2 நிமிடங்கள்
3. வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா - 2 நிமிடங்கள்
4. வங்கியாளர்களின் புத்தகச் சான்று மசோதா - 4 நிமிடங்கள்
5. தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா - 5 நிமிடங்கள்
6. உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா - 6 நிமிடங்கள்
7. கேரளா (பெயர் மாற்றம்) மசோதா - 9 நிமிடங்கள்
8. தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா - 9 நிமிடங்கள்
9. தேசிய கவுரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் (திருத்த) மசோதா - 14 நிமிடங்கள் (வந்தே மாதரம்)
தன் துறை சார்ந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போதும் 23 நாட்களாக பாராளுமன்றம் வராமல் @AmitShah , கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து பிரதமர் @narendramodi ஒளிந்து கொண்டு, எந்த விவாதமுமின்றி மசோதாக்களை நிறைவேற்றும் இந்த மோடி-ஷா அரசின் சர்வாதிகார ஆணவப்போக்கு உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும்; மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், உங்களால் வெகுநாளைக்கு தப்ப முடியாது, இதற்கெல்லாம் மக்களும் நிச்சயம் கேள்வி கேட்பார்கள்!
#BulldozerRaj #DemocracyUnderAttack
இந்திய தேச மக்களின் எண்ணங்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு கொண்டுவரும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு திட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பதை எதிர்த்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ப. மாணிக்கம் தாகூர் அவர்களின் ஆணையின்படி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாபெரும் பேரணி இன்று 11.08.2026 மாலை :5.00 மணி யளவில் தூத்துக்குடி பழைய முனிசிபாலிட்டி முன்பு தொடங்கி 1ம் கேட் தேசப்பிதா மகாத்மா காந்தி சிலை வரை மிக பெரிய அளவில் நடைபெற்றது...
இந்த பிரம்மாண்ட பேரணியை மிக சிறப்பாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் S. M. சகாயராஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த பிரம்மாண்ட பேரணியில் மாநில நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள், வார்டு தலைவர்கள், தொண்டர்கள் குறிப்பாக பெரும் அளவில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் S M சகாயராஜ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
அழைக்கிறார் இளம்புயல்..
அழைக்கிறார் அஞ்சா நெஞ்சன்.
அழைக்கிறார் மாநகரின் மாணிக்கம்..
அழைக்கிறார் மாநகர் மாவட்ட தலைவர்...
"தேசிய தோழர்களுக்கு வணக்கம். தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு கொண்டுவரும் *நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை திட்ட திருத்த மசோதா* நிறைவேற்றுவதை எதிர்த்து பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் மாபெரும் பேரணி நாளை 11.08.2026 ( செவ்வாய்க்கிழமை) மாலை :4.00 மணியளவில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு தொடங்கி பழைய மாநகராட்சி அலுவலகம் தேசப்பிதா மகாத்மா காந்தி சிலை வரை நடைபெற இருக்கிறது.
ஆகையால் இப்பேரணியில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், பொதுச் செயலாளர் செயலாளர்கள், துணை அமைப்பு தலைவர்கள் நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."
S.M. சகாயராஜ் https://t.co/YNTUixJVOU
தலைவர், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி*
அனைவரும் வாரீர்..
தேச நலனை பாதுகாப்போம்..
Swadeshi', 'Make in India' என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!
September 19, 2025 அன்று DGTR பரிந்துரைத்தும், 11 மாதங்களாக Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிப்பு.
China-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க DGTR பரிந்துரைத்தும், Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது.
இதன் விளைவு?
5 முன்னணி உள்நாட்டு Crane உற்பத்தியாளர்கள் தொழிலை மூடும் அவலநிலை!
மோடி அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது?
இந்திய உற்பத்தியாளர்களுக்காகவா அல்லது Chinese நிறுவனங்களுக்காகவா?
அனைத்து துறைகளிலும் BJP-யின் இந்த போலித்தனம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது!
#MakeInIndiaExposed @PiyushGoyal
பாரதத்தின் இளம்தலைவர் ராகுல் காந்தியோடு தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் இளம்தலைவர் S M சகாயராஜ் அவர்கள் தன் குடும்பத்தினருடன்..
இந்தியாவில் காங்கிரஸின் எழுச்சிக்கு எப்படி ராகுல் காந்தி காரணமோ அதைப்போல தூத்துக்குடி மாநகரில் காங்கிரஸின் எழுச்சிக்கு தலைவர் S M சகாயராஜ் அவர்களே காரணம்.
காங்கிரஸ் என்றும் மக்கள் சேவையில்..