கேப்டனை பாத்து மிரண்டுட்டேன் - ஜெயப்பிரகாஷ்
விஜயகாந்த் நடித்த தவசி படத்தை நான்தான் தயாரித்தேன். நான்தான் அந்த படத்தோட தயாரிப்பாளரும்.
படப்பிடிப்பு நடந்துகிட்டிருந்தப்போ, மறுநாள் ஆகஸ்ட் 25-ம் தேதி புரட்சிக் கலைஞர் விஜயகாந்தோட பிறந்தநாள். அதுக்கு முந்தின நாள் விஜயகாந்த் என்னை வந்து பார்த்து, “நாளைக்கு எனக்கு பிறந்தநாள். ஒரு நாள் மட்டும் ஷூட்டிங்கை நிறுத்திக்கலாமா?”ன்னு கேட்டார். நானும், “ஓகே சார்”ன்னு சொல்லிட்டேன்.
மறுநாள் காலையில அவர் தங்கியிருந்த ஹோட்டல்ல பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைப் பார்க்கவும், நேர்ல பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் வந்து குவிஞ்சுட்டாங்க. கிலோமீட்டர் கணக்குல ரசிகர்கள் வரிசையில நின்னு அவரைப் பார்க்க காத்துக்கிட்டிருந்தாங்க.
அன்னைக்கு காலையில இருந்து விஜயகாந்த் தொடர்ந்து ரசிகர்களை சந்திச்சுக்கிட்டே இருந்தார். வர்ற ஒவ்வொரு ரசிகர்கூடவும் தனித்தனியா நின்னு போட்டோ எடுத்துக்கிட்டார். ஒருத்தர் போனா இன்னொருத்தர் வந்துக்கிட்டே இருந்தாங்க.
அவரும் விடாம தொடர்ந்து எல்லார்கூடவும் போட்டோ எடுத்துக்கிட்டே இருந்தார். அவரோட பிறந்தநாள்னு கூட புதுசா டிரஸ் போடல. டிபன் சாப்பிடல. டீ, காபி கூட குடிக்கல. ரசிகர்களை சந்திக்கிறதுல மட்டும்தான் அவரோட கவனம் இருந்துச்சு.
காலையில 8 மணிக்கு ஆரம்பிச்சது, இரவு 8 மணிக்கு மேலயும் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருந்துச்சு. கிட்டத்தட்ட 12 மணி நேரம் தனது ரசிகர்களுக்காக ஒதுக்கி, ஒவ்வொருத்தர்கூடவும் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டே இருந்தார்.
இதைப் பார்த்தப்போ நான் அப்படியே மிரண்டு போயிட்டேன். ஒரு நடிகர், அதுவும் அவரோட பிறந்தநாள்ல, சாப்பிடாம, ஓய்வெடுக்காம, இவ்வளவு நேரம் ரசிகர்களுக்காக நின்னு போட்டோ எடுத்துக்கிட்டிருக்கிறதை நான் அதுவரைக்கும் பார்த்ததே இல்ல.
அன்னைக்கு எனக்கு ஒண்ணு புரிஞ்சது... விஜயகாந்த் ஒரு நடிகர் மட்டுமில்ல. அவரோட ரசிகர்களை அந்த அளவுக்கு நேசிச்ச ஒரு மனிதர்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்த தினத்தையொட்டி, நேற்று #வாணவேடிக்கை படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
#Vijaykanth#HBDVijayakanth
"பொதுவா மதுரை மண்ணில் பிறந்த நபர்களுக்கு , பணத்த சேத்து வைக்குற பழக்கம் இருக்காது"
🎈🪩 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - தூங்காநகரம் 🎊🎉
#HBDVijayaKanth#60sKid
வாழ்ந்தாலும் செத்தாலும் நம்ம வாழ்க்கை இப்படி அமையனும்னு சொல்லிக் குடுத்த மனுசன்னா அது கேப்டன் தான் ❤️
யுகங்கள் ஆனாலும் கேப்டனின் வாழ்க்கை நமக்கு பாடமாய் இருக்கும், அவர் சொல்லிக் கொடுத்த நெறிமுறைகள் நம்மை வழிநடத்தும்...
வாழ்த்த நீ இல்லை, ஆனால் எங்கள் வாழ்த்து எப்போதும் நிற்காது...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சாமி ❤️
#Vijayakanth #HappyBirthdayCaptain #HappyBirthdayVijayakanth
தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாளையொட்டி, இன்று 25.08.2026 தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், அவரது திருவுருவ படத்துக்கு சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி , செயற்குழு உறுப்பினர்கள் ஹேமச்சந்திரன், தளபதி தினேஷ், ஸ்ரீமன், நியமன செயற்குழு உறுப்பினர்கள்
எம்.சவுந்தரராஜா, கே.கே.சரவணன், சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#HBDVijayakanth
#HappyBirthdayVijayakanth
திரையில் வீரனாய் நின்றாய்,
நிஜத்தில் ஏழைகளின் கண்ணீரை துடைத்தாய்.
உன் குரலில் இருந்தது கம்பீரம்,
உன் பார்வையில் இருந்தது தைரியம்,
உன் இதயத்தில் இருந்தது மனிதநேயம்! ❤️
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்,
#கேப்டன் என்ற பெயர்
தமிழர்களின் இதயத்தில் என்றும் அழியாது! 💪🔥
#HappyBirthday🎂🥳
புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று!
தமிழ் திரையுலகிலும், தமிழக அரசியலிலும் தன் தனித்துவமான குணத்தாலும், அளப்பரிய கொடைத் தன்மையாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் "கேப்டன்" விஜயகாந்த். ஏழை எளிய மக்களின் பசி போக்கிய மாமனிதராகவும், அனைவருக்கும் சம உரிமை தந்த தலைவராகவும் வாழ்ந்து காட்டிய அவரது பிறந்தநாளில் அவரை நன்றியோடு நினைவுகூர்வோம்.
தனது ஆரம்பகால திரைப்படங்களில் இருந்து, காவல் துறை அதிகாரியாகவும், சமுதாய மாற்றத்தை விரும்பும் புரட்சியாளராகவும் பல வெற்றிப் படங்களை அளித்து ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கடன் சுமையில் இருந்தபோது, தலைவராகப் பொறுப்பேற்று பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி, முழு கடனையும் அடைத்து அமைப்பை வளம்படுத்திய தொலைநோக்குச் சிந்தனையாளர்.
படப்பிடிப்புத் தளங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தி, கலைத்துறையில் உணவுச் சமத்துவத்தைக் கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கி, குறுகிய காலத்தில் தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, மக்கள் நலனுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு உதவும் அவரது உயர்ந்த குணமும், அஞ்சா நெஞ்சமும் என்றும் மக்கள் நினைவில் நிலைத்து நிற்கும். புரட்சி கலைஞர் "கேப்டன்" விஜயகாந்த் அவர்களின் நினைவுகளையும், அவரது மக்கள் சேவையையும் போற்றி வணங்குவோம்!
Remembering our forever Captain on his birthday. Your courage, kindness, and voice for the people still inspire us every day. Miss you, Vijayakanth sir. #HappyBirthdayCaptain 🙏
கேப்டன் ❤️
இது வெறும் பெயர் மட்டுமல்ல...
என்னைப் பொறுத்தவரை என் சாமி, என் குலசாமி-ன்னு தான் எப்பவும் சொல்வேன், அப்படி தான் வச்சுருக்கேன்...
இன்னைக்கும் எனக்கான முதல் அடையாளம் அவர் மட்டும் தான்...
வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்ககையும், அடையாளத்தையும் கொடுத்தவர் கேப்டன்...
எங்கள் குடும்பத்தில் இரண்டரக் கலந்தவர், ஏன் எங்கள் ரத்தத்தில் கலந்தவர் கேப்டன்னு தான் சொல்லனும்...
ஏன்னா என் பையன் இப்பவும் டிவி ஆன் பண்ணா தாத்தா, தாத்தா-ன்னு தான் சொல்லுவான்... கேப்டன் பாட்டையோ, படத்தையோ கொஞ்ச நேரம் ஓட விட்டா தான் அடுத்து வேற ஏதாவது பாக்க மாத்துவான்...
தாத்தா யாரு-ன்னு கேட்டா அவன் நேரா காட்டுறது நடு வீட்டில் மாட்டியிருக்கும் கேப்டம் போட்டோவை தான்...
வெளியே போகும் போது கூட அவரின் போட்டோ எங்க கண்ணுல பட்டாலும் அப்பா தாத்தா, தாத்தா ன்னு கூப்பிட்டு காட்டுவான்...
இத்தனைக்கும் நாங்கள் ஒருமுறை கூட அவன்கிட்ட இவர் தான் தாத்தா-ன்னு சொன்னது இல்ல...
இது தான் எங்களுக்கும், அவருக்குமான பிணைப்பு...
இது எல்லா காலத்திலும் தொடரும்...
அவர் மறையவில்லை, எங்களை போன்ற பல குடும்பங்களில் அண்ணனாக, மாமாவாக, தாத்தாவாக, ஆசானாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார், இருப்பார்...
என் குடும்ப தலைவன், குலசாமிக்கு பேரன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️
@iVijayakant@PremallathaDmdk@vj_1312
#HappyBirthdayCaptain #Vijayakanth
தானத்திலே சிறந்தது அன்னதானம். “பசியோடு வருபவன் பசியோடு திரும்பக் கூடாது” என்ற உயர்ந்த கொள்கைக்கு சொந்தக்காரர் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.
கேப்டன் அவர்களின் வார்த்தைகளையும் கொள்கைகளையும் பின்பற்றி, தேமுதிக தொடர்ந்து மக்கள் பணியில் பயணித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் நமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிறப்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு, பொதுமக்கள் அனைவருக்கும் வயிறார அன்னதானம் வழங்கப்பட்டது.
கேப்டன் அவர்களின் மனிதநேயப் பாதையில் என்றும் மக்கள் பணியே எங்கள் பயணம்!
#HBDCAPTAIN