இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் @mkstalin, தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
@ARMTNPSC Syllabus wise prepare full prepare panni than athula irunthu ethuvumey varala..thedi thedi padikanum na 1953 olaichivadi lam enga poi thedutathu...athukkuthan enga irunthu padikanum library ah...out source na epdi... school book venama nu kekkurom....
@ARMTNPSC Group 4 வினாத்தாளை பார்த்த பிறகு,Group 2 படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் வேற வேலையை பாத்துட்டு போய்விடலாம் என தோன்றுகிறது.இரவு தூக்கம் இல்லாமல் படித்து அதிக நம்பிக்கையுடன் தேர்வு அறையில் காலடி எடுத்து வைத்த குடும்ப தலைவிகள் பலரின் கனவை தேர்வு தாளில் கொன்று புதைத்து விட்டார்கள்.