தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர்
மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அறிக்கை
கழகத் தலைவரின் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணைக்கு வந்தன. இன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஒரு ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பு குறித்த பல விமர்சனங்களை இணைய தளத்தில் பார்த்தேன். அதற்கான விளக்கமே இந்த அறிக்கை.
இந்த இரண்டு வழக்குகளுமே, கழக சட்டத்துறையின் சார்பில் தலைவரிடம் இதற்கான சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி, நீதி மன்றம் என்ன தீர்ப்பு தந்தாலும், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்களின் உள்ள குறைப்பாட்டை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்லவும், முறையாக பதிவு செய்யவும் இந்த முன்னெடுப்பை செய்யாமல் விடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் , தலைவர் தந்த ஒப்புதலால் தாக்கல் செய்யப்பட்டவை.
WP 34884/2026- தேர்தல் ஆணையத்தின் EVM-களை சரி பார்ப்பதற்க்கான வழிகாட்டு நடைமுறை - SOP உச்ச நீதிமன்ற உத்திரவிற்க்கு எதிரானதாக உள்ளதால் அதனை நீக்கறவு செய்ய வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்டது. அது தனி நபருக்கான மனு அல்ல. இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடிய வழக்கு. 2024 வழிகாட்டு நடைமுறை - SOP யை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.ஆனால் 2025 வழிகாட்டு நடைமுறை - SOP வந்து விட்டதால் அதனை எதிர்த்து மனு செய்யும் உரிமையுடன் அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது.
2024 ல் உச்ச நீதி மன்றம் EVM கருவிகளில் சந்தேகம் இருந்தால் 2 ஆம் அல்லது 3 ஆம் இடம் பெறும் வேட்பாளர்கள் 5% கருவிகளை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி EVM கருவிகளின் BURNT MEMORY ஐ சரி பார்க்கலாம் என உத்திரவிட்டது.
திராவிட முன்னேற்ற கழக சட்ட துறையின் சார்பில் நான் கழகத்தலைவரிடம் இந்த நிலையை சொல்லி, கொளத்தூர் தொகுதியில் EVM களை சரி பார்க்க வேண்டும் என வலியுறுத்தினேன். தலைவரும் ஒப்புதல் தந்தார்.
29.07.2026-லிருந்து 05.08.2026 வரை Checking and Verification நடைபெற்றது. 14 தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளில் சோதனையில் 5 கருவிகள் செயல்படவில்லை அல்லது தலைவரின் பெயர் இருந்த வாக்கு செலுத்தும் கருவி(Ballot Unit)-ஐ வாக்கு பதிவு இயந்திரத்தால் (Control Unit) அடையாளம் காண இயலவில்லை. ஒரு வாக்கு இயந்திரத்தில் பாதுகாப்பு சீல்கள் புதியவையாக , நிரப்பபடாமல் இருந்தது.
தேர்தல் ஆணையம் இந்த பழுதுகளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி விளக்கங்களை தரவில்லை.
1. 1951 மக்கள் பிரதிநிதி சட்டத்தின் படி தேர்தல் முடிவுகளுக்கு பின் 45 நாட்களில் தேர்தல் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
2. அதுவும் பிரிவு 100ல் கூறப்பட்டுள்ள காரணங்களுக்கு மட்டுமே தேர்தல் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
3. யூகங்களின் அடிப்படையில் தேர்தல் மனுவை தாக்கல் செய்ய முடியாது.
4. வாக்கு இயந்திரங்களை ஏறக்குறைய 3 மாதங்களுக்கு பிறகே சரிபார்க்க ,தேர்தல் ஆணையம் , உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்து போகச்செய்யும் வகையில் நடத்தியது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து உயர் நீதி மன்றத்தில் முறையிட வேண்டும் என கழக சட்டத்துறை, தலைவரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டது. தலைவர் அவர்கள் முதலில் வேண்டாமென்று நினைத்தார். பின் இது குறித்து விளக்கங்களை கேட்டறிந்து ஒப்புதல் தந்தார்.
கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்கு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் மற்றும் VVPAT ல் உள்ள வாக்கு சீட்டுகளை சரி பார்க்க வேண்டும். இதனின் முடிவு அனைவருக்கும் தெரிந்ததே.வாக்கு இயந்திரங்களினால் மட்டுமே கொளத்தூரின் தேர்தல் முடிவு மாறியது.
Article 329(b)ன் படி தேர்தல் வழக்கின் மூலமாக மட்டுமே தேர்தலை செல்லாது என்றும் வேறொரு வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும், ஏன் EVM இயந்திரங்களை அறிமுகப்படுத்தியபோதும் இது போன்ற நிகழ்வுகளை சட்டமியற்றுபவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
2024 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே வாக்கு பதிவு இயந்திரங்களை சரிபார்க்க உரிமை தரப்பட்டது. வாக்கு பதிவு இயந்திரங்கள் முறையாக இல்லையென்றால் என்னவாகும் என்பதற்கு நீதிமன்றங்களே தீர்ப்பளிக்க வேண்டும்.எனவே ஏற்கனவே நடந்த பரிசோதனையில் 30% சதவிகித இயந்திரங்கள் பழுதானவை என்றால் அனைத்து இயந்திரங்களையும் சோதித்தால் கழக தலைவர் அவர்களே வெற்றி பெறுவார் என்பதில் அய்யமில்லை. சட்டத்தில் இடமில்லை என்கிறது தேர்தல் ஆணையம், இதற்க்கான சட்டம் உருவாக்கப்படவில்லை அதனை ஆய்ந்து, நீதியை வழங்கிடத்தான் நீதிமன்றம் என்கிறோம் நாம்.
தமது தீர்ப்பில் உயர் நீதி மன்றம் இறுதியாக “ஏற்புடைமை (Maintanability) குறித்த மேற்கண்ட முடிவைக் கருதி, சரிபார்ப்பு நடைமுறைக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் தகுதி குறித்தோ, 05.08.2026 தேதியிட்ட எதிர்க்கப்பட்ட உத்தரவின் சரியான தன்மை குறித்தோ ஆராய வேண்டிய அவசியம் இல்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது; எனவே அது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. விதி 49-T மீறப்பட்டதாகக் கூறப்படுவது, VVPAT கருவிகளின் செயலிழப்பு, மற்றும் வாக்குச்சாவடி எண்.208-இல் வாக்குப் பதிவு அலகு கண்டறியப்படாதது ஆகியவை உள்ளிட்ட, தகுதி சார்ந்த அனைத்து வாதங்களும், தேவைப்பட்டால் உரிய மன்றத்தின் முன் எடுத்துரைக்கப்படுவதற்காக அனுமதி தரப்படுகிறது. அதன்படி, ரிட் மனு ஏற்புடையதன்று எனத் தள்ளுபடி செய்யப்படுகிறது; சட்டப்படி தனக்குக் கிடைக்கக்கூடிய தீர்வை நாடுவதற்கு மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளது.
நீதிக் கட்சி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை உயர் நீதி மன்றமும் உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொள்ளவில்லை. தொடர் சட்டப்போரட்டமும் , போரட்டங்களுமே , இட ஒதுக்கீட்டை , அரசியல் அமைப்பு திருத்தமாக கொண்டு வந்தன. வாக்கு பதிவு இயந்திரங்களும் அப்படித்தான், நீதிமன்றம், இது எங்கள் எல்லைக்கு உட்பட்டதில்லை என்று சொன்னாலும்கூட வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், தேர்தல் முடிவுக்குப்பின் அதனை சோதனை செய்யும் நடைமுறை, அந்த சோதனையில் இயந்திரங்கள் தவறாக இருந்தால் அதற்க்கான தீர்வு ஆகியவற்றிக்கான விடை கிடைக்க வேண்டும்.
இந்தியாவில் இது போன்ற நிலை ஏற்பட்டதும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் இதுவே முதல் முறை. சட்டமும், நீதியும் நல்ல விடையினைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
ஆங்கில கருத்தொன்றுதான் நினைவுக்கு வருகிறது.
“I MAY BE WRONG, BUT I AM CLEAR”
கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் , வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே என்பதே , அந்த தெளிவு.
@gokula15sai மிக மோசமான வாய் வியாபாரி !
இதே பிறவிதான் “கலைஞர் என்ற மனிதர் பிறந்திருக்காவிட்டால் நீங்களும், நானும் இப்படிப்பட்ட உடையுடுத்தி, ‘அமர்ந்து’ பேசிக்கொண்டிருக்க முடியாது” என்று கூவியது. இப்போது கங்கனா ரணாவத் கூறியவைகளோடு ஒப்பிடுகிறது.
இதுதான் இந்த இனத்தின் சாபக்கேடு (1)
ஆனால்,
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!
#ChennaiDay #MadrasDay
@mmeiyyanathan@KanimozhiDMK திமுக விற்கு எவனும் கொள்கை வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது மட்டுமல்ல, எவனுக்கும் யோக்கியதையும் கிடையாது !
ஒன்றிய பாஜக அரசு, மதச்சார்பின்மைக்கு எதிரான ‘வந்தேமாதரம்’ பாடலை திணித்த போது, ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் எந்த சந்தில் ஒளிந்து கொண்டது, #SofaModel#tvk ஆட்சி ?
தந்தை பெரியாரின் கொள்கைத் திட்டங்களை, பேரறிஞர் அண்ணாவின் பாதையில் நிறைவேற்றி, தமிழ்நாட்டை, தமிழ்ப்பெருங்குடியை உயர்த்திய #நவயுக_சிற்பி#கலைஞர் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து, வணங்குவோம் ! 🙏🙏🙏
#kalaignarforever@arivalayam
திருவள்ளுவர் ஆண்டு 2057, ஆடி ௴ 18 (03/08/2026) திங்கட்கிழமை
த.வெ.க. அரசை கண்டித்து, தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், இளம் தலைவர் மாண்புமிகு. @Udhaystalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம்.
@arivalayam
அனிதா மறைந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து துக்கம் விசாரிக்க வந்தார்.
இப்போது நாடே களேபரமாகியும் வாயே திறக்கவில்லை
என்ன காரணமென்று இதைப் பார்த்தால் தானே தெரிகிறது.
செய்வதெல்லாம் பித்தலாட்டம் !
எத்தனை மோசமான மனிதர் (?) இந்த #SofaModel#tvk முதலமைச்சர் !
@arivalayam
ஆட்சி, நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாமல் புரியாமல், தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லாமல், ஆறு மணிக்கெல்லாம் கதவடைத்துக் கொள்பவர் முதல்வராக இருந்தால், இதுதான் நிலைமை !
#sofamodel#tvk@arivalayam
@sundarrajachola நாதியற்ற ராகுல் காத்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக பிரகடனப்படுத்தியவர் எங்கள் தலைவர்.
நன்றி உணர்வை காங்கிரசாரிடம் எதிர்பார்ப்பது பைத்தியத்தியக்காரத்தனம் !
ராகுல் அலையா ?
பிறகேன் அந்த அலை அவரது உத்தரபிரதேசத்தில் வீசவில்லை ?
பழனி கோயில் ஊழல் பத்திரப் பதிவை ரத்து செய்தது; உயர்நீதிமன்ற கிளை !
“வேண்டுமென்றே வழக்கமான அலுவலரை விடுப்பில் அனுப்பி, பொறுப்பில் வந்தவர் மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது முற்றிலும் முறைகேடான காரியம்; நீதிபதி
#SofaModel ‘த்தூ’ய ஆட்சியின் மற்றொரு சாதனை
@arivalayam