முதல்வர் #விஜய் அப்பாவை காணோம் என்று சொன்னது முழுக்க அரசியல் மட்டுமே... ஸ்டாலின் தோற்றதை கிண்டல் செய்திருக்கிறார். தேர்தலில் தோல்வியடைந்தவர்களைப் பார்த்து இதைவிட மோசமாக திமுக கிண்டல், கேலி செய்த வரலாறெல்லாம் இருக்கிறது..
ஆனால் பதிலுக்கு கணவனைத் தேடும் மனைவி, அப்பாவைத் தேடும் பிள்ளைகள் என்று சொல்வது முற்றிலும் தனிப்பட்ட தாக்குதல். விஜய் அவரது மனைவி, அவரது பிள்ளைகள் விஷயம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம். அவரது மனைவியோ, பிள்ளைகளோ பொதுவெளிக்கு வந்து, விஜயைப் பற்றி புகார் சொல்லும் வரை அதைப் பற்றி பேச யாருக்குமே உரிமை என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.
கணவன், மனைவி பிரிவென்பது இந்தக் காலத்தில் சர்வ சாதாரணம். அதில் யார் மீது தவறு என்பதை நீதிமன்றங்கள் க���ட கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருக்கும் போது, விஜயை நமக்கு பிடிக்காது என்ற ஒரே காரணத்திற்காக அவரை குற்றவாளியாக்குவது நேர்மையற்ற செயல்.
இன்னும் சொல்லப்போனால் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் ஜனவரி மாதமே வெளிவந்து விட்டது. அதன் பிறகு தான் அவர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். பெண்கள் பெருமளவில் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கிற பொழுதே, விஜயின் தனிப்பட்ட வ��ழ்க்கை விவகாரத்தை மக்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் அதிலிருக்கும் ச��ய்தி.
விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை கடுமையாக விமர்சித்த திமுகவை மக்கள் முழுமையாக புறக்கணித்து விட்டார்கள்.
ஆனால் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வது திமுகவுக்கு பாதகமாகத்தான் முடியும்.
ஆனால் திமுக எப்போதும் அப்படித்தான். திமுக தன்னுடைய அரசியல் எதிரிகள் அனைவரையுமே இப்படித்தான் எதிர்கொண்டிருக்கிறது. காமராஜர், எம் ஜி ஆர், ஜெயலலிதா, ரஜினி, சீமான், ஸ்ரீதர் வேம்பு வரை திமுகவின் முதல் தாக்குதலே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தான். அதில் லேட்டஸ்ட் விஜய்.
அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டியெடுத்து விமர்சனம் செய்வதை திமுக வெட்கமே இல்லாமல் செய்யும்.
ஆனால் இதுபோன்ற விமர்சனங்களை மக்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை என்பது தான் வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி. இன்னும் சொல்லப்போ��ால் தமிழக அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் தனி மனித ஒழுக்கமே இருக்கக்கூடாது என்பது தான் முதல் தகுதி. தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர் காலத்திற்குப் பிறகு, மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அனைத்துமே விமர்சனத்துக்குரியது தான். இதைப் பற்றி முன்பே கூட எழுதிய��ருக்கிறேன்.
வீட்டுக்கு வீடு வாசப்படி. ஒவ்வொருவருடய வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்த்தால் ஆயிரம் பஞ்சாயத்துகள் இருக்கும். எப்படி நம் வீட்டுப் பஞ்சாயத்தை அடுத்தவர்கள் பேசக்கூடாது என்று எதிர்பார்க்கிறோமோ, அதே நாகரீகத்தை அடுத்தவர்கள் விஷயத்திலும் கடைபிடிக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத கோழைகள் தான் தனிப்பட்ட தாக்குதலை கையில் எடுப்பார்கள்.
#திமுக எப்போ���ுமே கோழைகள் தான். பயந்தாங்குளி கட்சி தான்.
அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் #உதயநிதி ...
Mahadevan
#vijaythalapathy #MGR #Jayalalitha
@CMOTamilnadu @TVKVijayHQ
@thirumaofficial
@TVKWarriorsHQ @TVKHQITWingOffl
@TVKNewsUpdates #TVKVijay
One guy is looting money by forcing Ethanol
Another is land grabbing for his real estate empire
One is making money from leaking exam papers
Another is looting by selling the Nicobar Island
Top to bottom, everything is corrupt and compromised in this Modi govt.
அடுத்த பத்து ஆண்டுகள் #தவெக ஆட்சி தான்❤️ @TVKVijayHQ
சட்டமன்றத்தில் பேச விவாதிக்க எத்தனையோ ஆக்கப்பூர்வமான விசயங்கள் இருந்தும் அதை செய்யாமல்
அன்றாடம் தவெகவை இழிவு படுத்தும் விதமாக பொதுவெளிகளிலும் சட்டமன்றத்திலும் திமுக செய்யும் செயல் கடும் அயற்சியை தருகிறது.
ஐந்து ஆண்டு காலம் இருக்கிறது. ரொம்ப பொறுமையா��� இருந்து ஆட்சியின் குறைகளை நிதானமாய் விமர்சித்து சரியான போராட்டங்களை முன்னெடுத்து ஆக்கப்பூர்வமாய் செயல்பட்டால் மக்கள் மத்தியில் நல்ல பெயராவது கிட்டும்.
சரியான எதிர்கட்சியாய் பொறுமையாய் செயல்படுவதை விட்டு விட்டு அன்றாடம் கடிச்சிட்டு நக்கல் நையாண்டி பண்ணிட்டு இருந்தா இந்தா இன்று ஒரே நாளில் மொத்தமா சிதைச்சி விட்டாங்களா இல்லியா?
சிஎம் சார் பேசுங்க சார்னு பேட்ஜ் அணிந்த�� ஏதோ பெருசா சாதிச்சிட்டதா நினைச்சதுக்கு என்ன உங்க அப்பாவை காணோம் என்றதும் ஒரு ஆக்சன் மட்டும் பண்ணிக்கவா என்று தரமான சம்பவத்தை செஞ்சி அடுத்த ஒரு மாசத்துக்கு கதறியே சாவுங்கடா என்று செய்ற அளவுக்கு இது உங்களுக்கு தேவையா? .
அந்த காட்சி எதை ��ாபகப் படுத்துச்சின்னா பிகில் படத்தில் கலெக்டர் எஸ்பிலாம் கூப்ட்டு ராயப்பனை மிரட்டுற அந்த காட்சியில் டேனியல் பாலாஜி ராயப்பனை நோக்கி கெட்டவார்த்தை பேசுறப்ப
என்னடா வயசாகுது..பெரியவனான்ட கெட்ட வார்த்தையெல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்லித்தரலியாடா உங்க அப்பா என்று
டேனியல் பாலாஜியை செவுளோரமா அடிச்சி மேஜையோடு வெச்சி சாத்தி வெளுத்த காட்சி மாதிரி இருந்துச்சி ;)
விஜய்க்கு யாரோ வசனம் எழுதி தர்றாங்கன்னா உதயநிதி மட்டும் சொந்தமா பேசுறாப்லயா என்ன?
இதுல காமடி என்னன்னா ஸ்டாலினும் உதயநிதியும் ஒரே ஸ்கிரிப்டை பேசுவது தான்.
சில நாட்களுக்கு முன் ஸ்டாலின் அவர்கள் ஒரு திருமண வீட்டில் பேசிய அதே வசனங்களை #உதயநிதி வேறு எங்கோ ஒரு மேடையில் பேசிக் கொண்டு இருக்கிறார்.
இந்த சோபா மாடல் #புஷ்பா படம் எங்க கூட்டணி கட்சிகளின் தயவால் தான் உங்க ஆட்சி அட்லி படம் இட்லி பத்திய��ம் பேசுவோம் போன்ற மொண்ணை தனமான வசனங்களை விட்டுட்டு மக்கள் பிர��்சினைகளை விவாதிக்கும் இடமாக சட்டமன்றம் இருக்க வேண்டும்.
முந்தைய ஆட்சியின் திட்டங்கள் அதிலுள்ள ஊழல்கள் #தவெக அரசின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்கள் மக்கள் பிரச்சினைகளில் தவெகவின் நிலைப்பாடு
தொகுதி வாரியான வளர்ச்சி திட்டங்கள் கல்வி வேலைவாய்ப்பு சட்டம் ஒழுங்கு போதைப்பொருள் தடுப்பு ஆசிரியர் காலி பணியிடங்கள் மருத்துவர் செவிலியர் பணியிடங்கள் நிரப்புவது ஒப்பந்த ஊழியர்கள�� பணி நிரந்தரம் செய்வது என்று ஆக்கப்பூர்வமாய் விவாதிக்க
எத்தனையோ விசயங்கள் இருந்தும் அதையெல்லாம் விட்டுட்டு இன்னும் அழுது புலம்பி ஒப்பாரி வைப்பதும் இழிவு படுத்தவும் முயன்று கொண்டிருந்தால் நிச்சயம் தவெகவிடம் மட்டுமல்ல மக்களிடமும் திமுக இன்னும் மோசமான செருப்..படி வாங்க வேண்டி இருக்கும்.
திருப்பூரில் அரசு மருத்துவமனைக்கு போகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ். அரசு ���ட்டடங்களின் மீது கை வைத்தால் அப்படியே கல்லும் மண்ணுமாய் பிரிந்து வருகிறது. கட்டடம் பார்த்தால் சமீபத்திய கட்டடம். #திமுக ஆட்சியில் கட்டி இருக்கிறார்கள். அவ்ளோ ஊழல்..
புதிய பாலங்களை கட்டி திறப்பதற்கு முன்பாகவே அவை இடிந்து ��ோன சம்பவங்கள் முந்தைய ஆட்சிகளில் பார்த்து இருக்கிறோம். புதிய கட்டடங்கள் நிலையும் அவ்வாறு தான்.
மின்சார துறையில் ஊழல் என்று சொன்னதும் செந்தில்பாலாஜியால் பேச முடியல.
அறநிலையத்துறை ஊழல் பற்றி பேசினால் சேகர்பாபுவால் பேச முடியல. சும்மா கத்துவதும் கூச்சலும் வெளிநடப்பும் கட்சி நிதி பற்றி சொன்னா ஓடிடுறானுங்க. ஊழலை பற்றி பேசினா கூச்சல் குழப்பம்.
இவனுக என்னமோ ஒண்ணு சேர்ந்து தவெ���வை சட்டமன்றத்தில் ஓட விடலாம்னு பார்க்குறானுங்க. ஆனால் உண்மை நிலவரம் பார்த்தால் திமுகவை ஓடவிட்டு கொண்டிருக்கிறது தவெக.
பழைய திமுக எம்எல்ஏ தி நகர் அன்பழகன் போல சட்டமன்றத்துல ரவுடித்தனம் பண்ண நினைச்சாலோ சலம்பல் பண்ண நினைச்சாலோ தவெக அதுக்கும் சளைக்காது.
உங்களை எல்லா வகையிலும் எதிர்கொள்ளவும்ம் எந்த லெவலுக்கும் இறங்கி அடிக்கும் வல்லமையோடு தான் #தவெக நிற்கிறது.
அதுனால உங்க ���ரசியல் வம்புகளை எல்லாம் சட்டமன்றத்துக்கு வெளியே உங்க கட்சி மேடைகளில் வைத்துக் கொண்டு சட்டமன்றத்துக்குள் மக்கள் பிரச்சினைகளை பேசுங்கள் விவாதியுங்கள்.
#விஜய் மௌனமா இருக்காரு அவருக்கு பேச தெரியாதுன்னு நீங்க நினைச்சா நேற்று ஒரு சாம்பிள் காட்டியாச்சா..#திமுக இத்தோட நிறுத்திக்கிட்டு அடுத்த கட்ட வேலையை பாருங்க.
என்ன இருந்தாலும் ஸ்டாலின் அவர்களின் தோல்வியை இழிவு செய்யலாமா என்றால் ஏன் #ஸ்டாலின் மட்டும் இன்னமும் பல இடங்களில் தவெக தலைவரை தமிழ்நாட்டின் முதல்வரை மரியாதையா பேசுறாரா?
Dei DMK baadu… My grandfather and grandmother were teachers even before DMK was started da .
My husband’s family came out of poverty as tea estate labourers only because of MGR and Jeyalalitha .
20ஆண்டுகளாக ஆர்.கே.ராதாகிருஷ்ணன் எனும் ப்ரண்ட்லைன் ஊடகவியலாளர் இலங்கையில் இருந்து, சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆதரவான பொய் செய்திகளை எழுதிக்கொண்டிருந்தவர். தமிழர் போராட்டங்களை தீவிரவாதமாக-பயங்கரவாதமாக திரித்து எழுதிய உத்தமர். சிங்களப் பேரினவாதிகளுக்குள்ளாக நடந���த கொலைகளை விடுதலைப்புலிகள் மீது கணக்குகாட்டிய உத்தமர். 2009ல் நடந்த இனப்படுகொலையின் போது, சிங்கள ராணுவத்தின் செய்திகளை பரப்பி தமிழர்களின் துயரங்களை மறைத்தவர். சிங்கள ஆட்சியாளர்களின் மாளிகையான அலரி-மாளிகையின் காவல்காரராக செயல்பட்டவர். தமிழின விரோத அரசியலில் ஆர்.எஸ்.எஸ்சுக்கு நிகரானவர். இலங்கையின் மோடி எனப்படும் ராஜபக்சேவின் உற்ற நண்பர்.
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
முதலமைச்சரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்பதை விட MGR Govt film & TV institute- இன் ஆஸ்தான முன்னால் மாணவர் என்பதே சரியாக இருக்கும். ஒவ்���ொரு வருடமும் இந்த institute- யில் படித்த மாணவர்களுக்கே த��து cinematography team-இல் சேர்த்துக் கொள்ள முன்னுரிமை கொடுக்கும் நபர், தான் படித்த நிறுவனத்தினுடையே ஆன பந்தத்தை ஒரு போதும் விடாத நபர், இந்த பொறுப்பிற்கு வந்ததில் அளவற்ற மகிழ்ச்சி! வாழ்த்துகள் @manojdft sir! 💐
ஈழ தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அதை தடுக்கவும்,சுப்ரமணிய சாமிக்கு ஆதரவாகவும் அன்றைய திமுக அரசு வழக்கறிஞர்கள் மேல் கொலை வெறி தாக்குதல் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நடத்தியது.
கோர்ட்டுக்குள் ரத்த வெள்ளம் ஓடியது.
அப்பொழுது கோர்ட் உள்ளே வந்தார் அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் ,வேட்டை கருப்பு போல.
அதன் பின்பு கோர்ட்டுக்குள் வக்கீல்கள் மேல் கையை வைக்க எந்த அரசும் துணிய வில்லை.
That legacy belongs to Late BSP leader annan Armstrong.
#Ottapidaram: Sand Mafia Rallies Against Minister Madan Rajaa! Money Flowing to Influence TVK Functionaries?
#Thoothukudi: Political buzz has intensified in Ottapidaram as sources within #TVK claim that a sand mafia group allegedly linked to members from #DMK and #AIADMK is involved in coordinated efforts against Tamil Nadu Minister Madan Rajaa, who is said to have put an end to illegal sand mining that continued for nearly 30 years. Reports further claim that large sums of money are being offered to influence TVK union-level functionaries.
Minister Stops a 30-Year Illegal Operation?
After winning from the Ottapidaram constituency and becoming a minister in Tamil Nadu, Madan Rajaa reportedly took strong action to stop illegal sand mining that had allegedly continued in the region for more than three decades. According to the report, influential figures connected to both #DMK and #AIADMK had been operating in the background.
It is claimed that after the mining operations were blocked, those affected tried several ways to negotiate with the minister. However, Madan Rajaa allegedly refused compromise and warned of strict action against any violations.
Allegations of Targeting #TVK Administrators
With attempts to influence the minister reportedly unsuccessful, the alleged sand mafia group is now said to be focusing on local administrators of Tamilaga Vettri Kazhagam (TVK).
In particular, reports suggest that TVK union secretaries in North, West, and South Ottapidaram are being approached with financial incentives. The article claims these administrators previously had political links with DMK and had long-standing familiarity with one of the alleged sand mafia leaders, Murugesan, brother of former DMK MLA Shanmugaiya.
Alleged Plot Before Elections Prevented
According to the report, even before the elections, Murugesan had allegedly attempted to join TVK and secure a party ticket. Madan Rajaa, reportedly aware of his background, is said to have informed the party leadership and prevented the move.
Even after becoming minister, it is claimed that intermediaries attempted to arrange meetings seeking permission to restart business activities, but Madan Rajaa allegedly refused.
Political Battle Intensifies – Public Support Claimed
Reports now suggest that efforts are underway to politically weaken the minister by influencing TVK functionaries through financial means.
Supporters claim this has turned into a silent political battle between the minister and groups allegedly backed by figures from DMK and AIADMK. Despite these claims, local public opinion is described as largely opposing illegal sand activities, and supporters argue that public backing remains a strong shield for the minister.
Note:The report also mentions discussions among party workers regarding alleged continued contact between certain TVK administrators from neighbouring Thoothukudi and former DMK Minister Geetha Jeevan.
@dinamalarweb@polimernews@the_hindu@AadhavArjuna@TVKVijayHQ@ndtv@IndiaToday@sathiyamnews@RahulGandhi@thirumaofficial@VanniTamizhVCK
@VetriNewsX @CMOTamilnadu
#Ottapidaram: Sand Mafia Rallies Against Minister Madan Rajaa! Money Flowing to Influence TVK Functionaries?
#Thoothukudi: Political buzz has intensified in Ottapidaram as sources within #TVK claim that a sand mafia group allegedly linked to members from #DMK and #AIADMK is involved in coordinated efforts against Tamil Nadu Minister Madan Rajaa, who is said to have put an end to illegal sand mining that continued for nearly 30 years. Reports further claim that large sums of money are being offered to influence TVK union-level functionaries.
Minister Stops a 30-Year Illegal Operation?
After winning from the Ottapidaram constituency and becoming a minister in Tamil Nadu, Madan Rajaa reportedly took strong action to stop illegal sand mining that had allegedly continued in the region for more than three decades. According to the report, influential figures connected to both #DMK and #AIADMK had been operating in the background.
It is claimed that after the mining operations were blocked, those affected tried several ways to negotiate with the minister. However, Madan Rajaa allegedly refused compromise and warned of strict action against any violations.
Allegations of Targeting #TVK Administrators
With attempts to influence the minister reportedly unsuccessful, the alleged sand mafia group is now said to be focusing on local administrators of Tamilaga Vettri Kazhagam (TVK).
In particular, reports suggest that TVK union secretaries in North, West, and South Ottapidaram are being approached with financial incentives. The article claims these administrators previously had political links with DMK and had long-standing familiarity with one of the alleged sand mafia leaders, Murugesan, brother of former DMK MLA Shanmugaiya.
Alleged Plot Before Elections Prevented
According to the report, even before the elections, Murugesan had allegedly attempted to join TVK and secure a party ticket. Madan Rajaa, reportedly aware of his background, is said to have informed the party leadership and prevented the move.
Even after becoming minister, it is claimed that intermediaries attempted to arrange meetings seeking permission to restart business activities, but Madan Rajaa allegedly refused.
Political Battle Intensifies – Public Support Claimed
Reports now suggest that efforts are underway to politically weaken the minister by influencing TVK functionaries through financial means.
Supporters claim this has turned into a silent political battle between the minister and groups allegedly backed by figures from DMK and AIADMK. Despite these claims, local public opinion is described as largely opposing illegal sand activities, and supporters argue that public backing remains a strong shield for the minister.
Note:The report also mentions discussions among party workers regarding alleged continued contact between certain TVK administrators from neighbouring Thoothukudi and former DMK Minister Geetha Jeevan.
@dinamalarweb@polimernews@the_hindu@AadhavArjuna@TVKVijayHQ@ndtv@IndiaToday@sathiyamnews@RahulGandhi@thirumaofficial@VanniTamizhVCK
@VetriNewsX @CMOTamilnadu
புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவைச் சார்ந்தவர்களும், திமுக ஆதரவு அறிவுஜீவிகளும் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தொடுத்து வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் ஆளுநரின் நிலையும்
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சிக்கோ, அணிக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சி என்ற நிலையை தவெக பெற்றது.
அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் தவெக-வை ஆட்சி அமைக்க ��ளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அறுதிப் பெரும் பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை, அந்த எண்ணிக்கைக்குரிய ஆதரவு கடிதங்களை அளித்தால்தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று கூறிவிட்டார். இதற்கு, ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கம் “தவெக 108, காங்கிரஸ் 5 என 113 இடங்கள் என்று குறிப்பிட்டு கடிதம் அளித்தனர். 113 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே என்று உறுதியாக அவ��்களே தெரிவித்த பிறகு எப்படி ஆட்சி அமைக்க அழைக்க முடியும், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் அவர்கள் உரிமை கோரவில்லை” என்பது. ஆனால், பெரும்பான்மையை சட்டப்பேரவை யில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகையில் அல்ல என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு கூறியுள்ளதை நாம் அறிவோம்.
சிபிஐ(எம்) முன்னால் இருந்த மூன்று வாய்ப்புகள்:
இத்தகைய சூழ்நிலையில் சிபிஐ(எம்)-க்கு முன்னால் மூன்று வ���ய்ப்புகள் இருந்தன.
1. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.
2. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமை��்பதற்கு ஆதரவு அளிப்பது.
3. எவரும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சி அமையும். இல்லையென்றால் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வது.
மேற்குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர வேறு வாய்ப்புகள் எதுவுமில்லை. மேற்கண்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு விவாதித்தது.
குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் அனுமதிக்கக��� கூடாது?
உடனடியாக மற்றொரு சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தேர்தலை அனுமதிப்பதா இல்லையா என்பதும் ஒன்றிய பாஜக அரசின் கையில்தான். ஆளுநர் மூலமாக தாங்களே நேரடியாக ஆட்சி நடத்த ஒரு வாய்ப்பு வரும்போது நிச்சயமாக அதை அவர்கள் தவற விடமாட்டார்கள்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய நோக்கமும் பாஜக - அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வழிவகுப்பது மேற்கண்ட அரசியல் நிலைபாட்டிற்கு எதிரானதாகும். பிறகு, தேர்தல் நடந்தாலும் அது ஒன்றிய பாஜக ஆட்சி யின் கட்டுப்பாட்டில்தான் நடக்கும் சூழல் இரு��்கும். எனவே, எக்காரணங்கொண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதை அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம்.
மக்கள் அளித்த தீர்ப்பும் இடதுசாரிகளின் முடிவும்:
இந்தத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சி என்ற நிலையை தவெக பெற்றுள்ளது. சட்டப்படியும் முதல் வாய்ப்பு இந்தக் கட்சிக்கே உள்ளது. ஏறத்தாழ 1.72 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது ‘ஆட்சி மாற்றம்’ - அதாவது ��ிமுக - அதிமுக அல்லாத ஒரு ஆட்சி வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்று இரண்டு இடதுசாரி கட்சிகளும் தீர்மானித்தன.
யார் ஆட்சி அமைத்தாலும் இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் நிலைமை. எனவே, இந்த மிக முக்கிய பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையுடன் கட்சி இதை அணுகியது.
“அதிமுக - ���ிமுக கூட்டு” யோசனை நிராகரிப்பு:
அதிமுக ஆட்சி அமைப்பது - திமுக ஆத ரிப்பது; அதற்கு இடதுசாரிக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும். இந்தத் தேர்தலின் மையமான அம்சமே பாஜக - அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். மக்களும் தோற்க டித்திருக்கிறார்கள். அதிலும் பாஜக ஒரு தொகுதியில் ஆயிர��் வாக்குக்கும் குறைவாகப் பெற்று வாக்கு சதவிகிதமும் பெருமளவு குறைந்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்துள்ளது. தோல்வியடைந்த ஒரு கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமில்லாமல் வேறு என்ன? எனவே, அதிமுக - திமுக அணியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்ற யோசனையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்தது.
திராவிடக் கட்���ிகளின் ஆட்சி தொடர வேண்டும் என்ற முறையில் அந்த யோசனை முன்வைக்கப் பட்டது. இவர்கள்தான், அதிமுகவை திராவிட கட்சி என்ற அளவுகோலில் வைக்க முடியாது என்று பல நேரங்களில் கூறியிருக்கிறார்கள் என்பதை நினைவூட்டுகிறோம். மேற்கண்ட கருத்தின் நோக்கமென்ன? திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு யாரும் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த விடக்கூடாது என்பதைத் தவிர இதில் தமிழ்நாட்டின் நலன் வேறு என்ன இருக்கிறது?
���டதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டாலும் திமுக - அதிமுக இதே நிலைபாட்டை மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததன் மூலம்,
1. குடியரசு தலைவர் ஆட்சி அமைவதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.
2. திமுக ஆதரவுடன் அதிமுக கூட்டணி ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்திருக்கிறோம்.
இளைஞர்களின் பேராவேசமும் சமூக வலைதள விமர்சனங்களும் :
இன்றைய இளைய தலைமு���ையினர் தங்களின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து “புதிய ��ாற்று சக்தி” ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பி வாக்களித்துள்ளனர். இங்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இடதுசாரி - வலதுசாரி இரண்டு தரப்புக்கும் வெற்றி கிடைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளனர். நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலேயே இளை ஞர்களின் பேராவேசத்தைக் கண்டோம். எனவே, இங்கு மட்டும் மாற்றமே கூடாது என்பது சரியா?
சமூக வலைதளத்தை சரியாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி தவெகவினர் வ���ற்றி பெற்று விட்டனர், இது ரீல்ஸ் ஆட்சிதானே தவிர ரியல் ஆட்சி அல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆம், திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியைச் சரியாகப் பயன்படுத்தினர். சமூக வலைதளம் மூலம் மக்களின் முன் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் என்ன? ஒன்றிய பாஜக அரசும், மாநில திமுக ஆட்சி யும் கடைபிடித்த நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள�� அவர்கள் உணர்ந்தனர். லஞ்சம், ஊழல், சொத்துக் குவிப்பு, கனிம வளக் கொள்ளை, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள்; திமுக கொடுத்த சில தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும், பல ��ாக்குறுதிகள் காலம் கடந்து நிறைவேற்றப்பட்டதும் உள்ளிட்ட பிரச்சனை களைத்தான் சமூக வலைதளங்களின் மூலம் மக்களிடம் முன்வைத்தனர். நலத்திட்டங்கள் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதை திமுகவினர் உணர வேண்டும்.
தவெகவின் உறுதிமொழியும் கம்யூனிஸ்ட்டுகளின் அனுபவமும் :
ஆதரவு கேட்டு தவெக அளித்த கடிதத்தில் “மதச்சார்பின்மைக் கொள்கையில் எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அனைவ ருக்குமான ஆட்சியாக எங்கள் ஆட்சி இருக்கும். நேர்மையான ஆட்சியைத் தருவோம்” என்று கூறியிருந்தனர். நேரில் சந்தித்தபோதும் இதை உறுதிப்படுத்தினர். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவ ளித்தது. வெளியிலிருந்து ஆதரவு, கூட்டணி ஆட்சி போன்ற அனுபவங்களெல்லாம் வேறு எந்தக் கட்சியையும் விட செழுமைமிக்க அனுபவம் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. புதிய அரசியல் சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த சிறப்பான முடிவு என்று தான் பெரும்பாலானோர் பாராட்டுகின்றனர்.
விமர்சிப்பவர்கள் முன்வைக்கும் கருத்து: திமுக அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெக-வை ஆதரிக்கலாமா? விஜய் அவர்களுக்கு ஆட்சி நடத்தத் தெரியுமா? அரசியல் ��ன்றால் என்ன வென்றே தெரியாதவர்கள், முற்றிலும் புதியவர்கள் என்பது.
ஏற்கெனவே, திமுக ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை ஏற்க முடியாது என்பதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. அடுத்து இருக்கும் ஒரே வாய்ப்பு தவெக ஆட்சி அமைப்பது தான். இல்லையென்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜகவின் மறைமுக ஆட்சிதான் அமைந்திருக்கும். இதை எவரும் ஏற்க முடியாது. எனவே, தவெக-வை ஆதரிப்பத��� என்ற இடதுசாரிக் கட்சிகளின் முடிவு மிகச்சரியானது. இதில் திமுகவினர் கோபம் கொள்வதில் எந்த அடிப்படையும் இல்லை.
முன் அனுபவம் குறித்த விமர்சனங்களுக்கான பதில்:
இரண்டாவது, விஜய் ஒரு நடிகர் என்ற அளவு கோலை வைத்துத்தான் அவருக்கு அரசியல், ஆட்சி என்றால் தெரியுமா என்று கேட்பது. என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் ஆட்சி அமைத்தபோதும் இதுபோன்ற விமர்சனங்கள்தான் முன்வைக்கப்பட்டன. மக்க��ிடம் இந்த விமர்சனம் எடுபடவில்லை என்பதுதான் அனுபவம். அவர்கள் புதிது, முன் அனுபவம் இல்லை என்பது உண்மை தான். ஆனால் மக்கள் தங்களை நம்பித் தேர்ந்தெடுத்திருக்கும் நிலையில், அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மற்றவர்களை விட அவர்களுக்குக் கூடுதலாக இருக்கும். எனவே, மக்கள் நம்பிக்கையைத் தக்க வைக்க நல்ல முறையில் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற அக்கறையுடன் கற்று��் கொள்வார்கள் என்றே கருதுகிறோம்.
மூன்றாவதாக, தவெக 35 சதவிகித வாக்குகளைத்தானே பெற்றிருக்கிறது, 65 சதவிகித மக்கள் எதிராகத்தானே வாக்களித்திருக்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இல்லை. மற்ற கட்சிகளை விட அதிக இடங்களைப் பெறுகிற கட்சி ஆட்சி அமைக்கும் என்பதுதான் நிலை. அகில இந்திய அ���விலும், அனைத்து மாநிலங்களிலும் இதுதான் கடை பிடிக்கப்படுகிறது. எனவேதான் தேர்தல் சீர்திருத்தம் என்பதை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மற்ற கட்சிகளால் இந்த கோரிக்கை முனைப்பாக முன்வைக்கப்படாததால் இது விவாதப் பொருளாக ஆகவில்லை. வரும் காலத்தில் வலுவாக இதை வலியுறுத்த வேண்டும்.
திமுக அல்லது அதிமுக-வை தேர்ந்தெடுப்பது மட்டும்தான் மக்களுக்கு இருந்த வாய��ப்பு என்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ்நாட்டில் ‘இரு துருவ ஆட்சி’ என்று நிலவிய நிலைக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது முக்கிய திருப்புமுனையாகும்.
புதிய ஆட்சியின் முன்னுள்ள சவால்களும் சிபிஐ(எம்)-ன் பார்வையும்:
புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் அரசியல், பொருளாதாரக் கொள்கை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. ஒன்றிய - மாநில அரசுகள் கடைபிடித்த தாராளமய பொருளாதார கொள்கை காரணமாக, பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது கற்பனைக்கெட்டாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் சொத்துக்களின் குவிப்பு; மற்றொரு பக்கம் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அல்லாடும் பெரும்பகுதி மக்கள்.
கௌரவமான, நிரந்தரமான வேலை, உறுதிப் படுத்தப்பட்ட ஊதியம் என்பதெல்லாம் பொய்யாய், கனவ���ய் போய்விடுமோ என்ற அளவுக்கு வேலை யில் இருப்பவர்கள், வேலை தேடுவோர் நிலைமை பதற்றம் நிறைந்ததாக மாறியுள்ளது. இதில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியம். எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து நேர்மையான, ஊழலற்ற ஆட்சி என்பது மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
இதை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் எவையெல்லாம் தவறு, குறை என்று கூறி ஆட்சி��ைக் கைப்பற்றினார்களோ அவற்றையெல்லாம் இல்லாமல் சரி செய்ய வேண்டிய கடமை புதிய ஆட்சிக்கு உள்ளது. மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் அரசுக்கான நிதி வருவாயை எப்படிப் பெருக்குவது என்பது முக்கியமான சவால். தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைக���் தொடர்பாக இவர்கள் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகிறார்கள்? மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவதற்கும் முன் வர வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஒரு கால அவகாசம் தேவை என்பது சரியே.
ஏற்கெனவே, முதல்வர் விஜய் அவர்கள் கொடுத்துள்ள உறுதிமொழிகளுடன், மக்கள் நலன் சார்ந்த சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க���்சி வரவேற்கும், ஆதரவளிக்கும். மக்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்த்துப் போராடுவோம் என்பது தான் இந்த ஆட்சி குறித்த கட்சியின் நிலைப்பாடு என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.
கட்சியின் சார்பில் சில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண முடியும் என்ற எந்த மாயையும் மார்க்சிஸ்ட் கம்யூ னி��்ட் கட்சிக்குக் கிடையாது. அதே நேரத்தில், மக்களின் உரிமைகளைக் காக்க, கோரிக்கைகளை எடுத்துரைத்து, வலுவாகக் குரல் எழுப்ப முடியும். ஆட்சியாளர்களின் தவறுகளை அம்பலப்படுத்த முடியும்.
எனவே, அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரியான அரசியல் நிலைபாட்டையே மே���்கொண்ட���ள்ளது.
More : https://t.co/YtI1MLJIlk