தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.
கரூர் சி.பி.ஐ. வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா? பா.ஜ.க.வை உறுதியாக விமர்சித்துப்பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியையெல்லாம் கேட்டு, ஒரு முதலமைச்சராக நீங்கள் அரசுக் கூட்டத்தில் கலந்துகொண்டதை உங்களைப் மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை.
கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள்.
#TVKFails
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது!
அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK
| தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி - அறிவிப்புப் பலகை | SPOC - ITW தேர்தல் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!
@DMKITwing செயலாளர் - முனைவர் @TRBRajaa அவர்கள் அறிவிப்பு!
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற தொகுதி வாரியாக SPOC (Single Point of Contact) -IT Wing தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொறுப்புகள்:
தேர்தல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப பணிகளை ஒருங்கிணைத்தல் மாவட்டக் கழகத்துடன் இணைந்து செயல்படுதல் War Room (Firewal) பணிகளை முன்னெடுத்தல் - சமூக வலைத்தளப் பிரச்சாரங்களை தீவிரப்படுத்துதல்
அனைத்து SPOCகளும், மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து,அணி நிர்வாகிகளுடன் நேரடி ஆலோசனைகள் நடத்தி, தேர்தல் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
முக்கிய குறிப்பு:
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் IT Wing செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். War Room அமைப்புகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தனது 73-வது பிறந்தநாளையொட்டி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தி எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தார்
#HBDCMMKStalin
பல்வேறு இனம், மொழி, மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் நமது நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்க முயலும் ஆதிக்க சக்திகளிடமிருந்தும், அவர்களுக்கு அடிபணிந்தவர்களிடமிருந்தும் நம் மாநிலத்தை மீட்டெடுத்து, சமூக நீதி, சுயமரியாதை, மொழி உணர்வு, மாநில உரிமை போன்ற உயிர்நாடிக் கோட்பாடுகளில் உறுதியாக நின்று, கல்வி வளர்ச்சி, மகளிர் முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு, நவீன தொழில்நுட்பங்களை ஜனநாயகப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக வார்த்தெடுத்து, தமிழையும் - தமிழரையும் - தமிழ்நாட்டையும் தலைநிமிரச் செய்திருக்கும் எனது மதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.