@sunnewstamil சூர்யா சார் “முட்டாள்”ன்னு சொன்ன உடனே, TVK தற்குறிகள் எல்லாம் அவர கடிக்க கிளம்பிட்டாங்க….
அவங்களுக்கு அவங்க தான் முட்டாள்னு தெரியும்ல…🤣
அதனால யாரை “முட்டாள்”ன்னு சொன்னாலும், சம்பந்தப்பட்ட முட்டாள்களுக்கு மட்டும் உடனே கோபம் வந்துரும்..🤦♂️
உங்கள தாண்டா சொன்னாரு….😀
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
தரமில்லாத தற்குறி அமைச்சர்களிடமிருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும்?
படிப்பறிவும் சிந்திக்கும் திறனும் இருந்தால்தானே இதெல்லாம் யோசிப்பார்கள். தகுதியும் திறமையும் இல்லாதவர்கள் அமைச்சர்களாகும் நிலை வந்ததால் தான் இன்று இப்படியொரு சூழ்நிலை உருவாகியுள்ளது….
நல்ல மாற்றம்’டா….🤦♂️
ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல், அமைச்சர்களின் சொந்தக்காரர்கள், வேண்டியவர்கள் என சிலருக்கு மட்டும் முன்வரிசையில் இடம் கொடுத்து, ஓட்டு போட்ட பொதுமக்களை கீழே சாலையில் கிடந்து உருளும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.
தற்குறிகளிடம் மாற்றத்தை எதிர்பார்த்தால் இப்படித்தான் இருக்கும்…..🤦♂️
@TVKVijay24x7@vinothravi11 ஓ… இவரு அமைச்சரா..
அமைச்சர் யாருன்னே தெரியாத அளவுக்கு தான் செயல்பாடுகள் இருக்குது.
கடந்த நாலு மாதத்துல மக்களுக்கு என்ன செய்திருக்காங்கன்னு கேட்டா, சொல்லிக்கிற அளவுக்கு ஒன்னும் இல்ல..
Reels போட்டு, கேமரா முன்னாடி நின்னுட்டா போதுமா?
மக்களுக்காக ஆக்கப்பூர்வமாக எதாவது பண்ணனும்…🤦♂️
@rajakumaari Aunty ரத்தன் பண்டித்துக்கு போட்டியா வந்துராதீங்க…😂
ஜோசியம் பாக்குறதுல அவரை Beat பண்ணிட்டீங்கன்னா, அடுத்தது அவரே உங்ககிட்ட ஜோசியம் பார்க்க வர வேண்டிய நிலை வந்துரும்….
தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.
*முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்:*
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர்.
இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை https://t.co/O7UnoQXig4 இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
*ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):*
இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன.
*ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):*
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.
*அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு:*
இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.
*அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:*
இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.
1.உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை
2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை
3.DVAC கிரிமினல் வழக்கு .
4.பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment):
5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting):
6.டெண்டரில் வெளிப்படைத்தன்மை