உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை குறித்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.@Udhaystalin அவர்கள் எழுதியுள்ள கடிதம்.
ஆட்சி அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழினத்திற்காகவே வாழ்ந்து வழிகாட்டிய தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய உரை.
இப்படிதான் உண்மையை கொண்டு சேர்க்கனும்.. அதும் இளம் பெண்கள் வழியே இதே ஆரவாரத்துடன் ஆக்ரோசத்துடன் கொண்டு சேர்க்க வேண்டும்🔥🔥🔥
தேர்தல் காலங்களில் மட்டுமல்ல.. தொடர் நிகழ்வுகளாக இந்த மாதிரியான பரப்புரைகளை திமுக செய்ய வேண்டும்..
தற்குறிகளாவதை தடுக்கலாம்!
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!
🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?
🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?
🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!
நாங்கள் கேட்பது #FairDelimitation!
#DelimitationDanger: Is India sliding into dictatorship?
Do not turn a calm South into a storm.
Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South.
❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out?
❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today?
❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections?
❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide?
❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship.
❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered?
🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North.
💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may.
The South demands #FairDelimitation!
மணப்பாறை, திருவரங்கம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
தலைமைக் கழகம் அறிவிப்பு
22.2.2026 ஞாயிற்றுக்கிழமை, கோவை, கருமத்தம்பட்டி, கணியூர் டோல்கேட் அருகில் கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு
#ஸ்டாலின்_தொடரட்டும்
தி.மு.க. சட்டத்துறையால் நியமிக்கப்பட்ட
தி.மு.க. சட்டத்துறை மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (DLC) – சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் (CLC-2) – மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிக்கை
தி.மு.க. சட்டத்துறை மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (DLC) – சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் (CLC-2) – மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 14-02-2026 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை அவர்கள் தலைமையில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சிறப்புரையாற்றிட கழக சட்டத்துறை இணைச் செயலாளர்கள் - துணைச் செயலாளர்கள் - தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொள்ள நடைபெறும்.
இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறையால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (DLC) – சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் இருவர் (CLC-2) – மாவட்ட கண்காணிப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொருள் : SIR குறித்து
என்.ஆர்.இளங்கோ, எம்.பி.,
செயலாளர், தி.மு.க. சட்டத்துறை
"அண்ணா அறிவாலயம்"
சென்னை-18.
நாள்: 04-02-2026.
உலக ட்ரெண்டிங்கில் “#வெல்வோம்_ஒன்றாக” !
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயனத்தில் ஒருவரையும் பிந்தங்க விடமாட்டோம்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள “#வெல்வோம்_ஒன்றாக” என்ற முன்னெடுப்பு, சமூக வலைதளங்களில் இந்திய அளவில் இரண்டாம் இடத்திலும், உலகளவில் 11-ஆவது இடத்திலும் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது!
#CMMKStalin #DMKGovt #DravidianModel #VelvomOndraga #KalaignarSeithigal
வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள்!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன்!
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்! இதுதான் #DravidianModel!
தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம்!
தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி @AsiriyarKV அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு #DravidianModel நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!
20 BLOs across 7 states are dead!
Each BLO is set with a target to digitize 800 to 1000 forms in a single day, on top of distributing and collecting them. DMK has been saying from the beginning that the SIR process is unrealistic and will only panic voters and overburden BLOs. But the EC never listened. And we still have two more months to go.
Not to forget that this is the same institution that claims it is ready for 'One Nation One Election'!
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
@ECISVEEP@mkstalin@arivalayam@DMKITwing@legalwingofdmk
திராவிட மாடல் ஆட்சியில், #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு! 🚀📈
புதுமைப்பெண் திட்டம்: அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் திட்டம் (மாதம் ரூ.1000).
நான் முதல்வன் திட்டம்: படித்த இளைஞர்களை, பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பும் தகுதியானவர்களாக மாற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பசியின்றி பள்ளிக்கு வா, அறிவொளி பெற்றுப் போ! - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புரட்சித் திட்டம்.
தமிழ்ப்புதல்வன் திட்டம்: அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் திட்டம் (மாதம் ரூ.1000).
இல்லம் தேடிக் கல்வி: கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க, தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று கல்வி வழங்கும் திட்டம்.
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை திட்டம்: SC/ST மாணவர்கள், உலகின் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில நிதியுதவி வழங்கும் திட்டம்.
உயர்வுக்குப் படி திட்டம்: 12-ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதை உறுதிசெய்து, அவர்களுக்கு வழிகாட்டும் திட்டம்.
வெற்றி நிச்சயம் திட்டம்: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை இலவசமாக வழங்கும் திட்டம்.
கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!
#ஓரணியில்_தமிழ்நாடு
#WATCH | “தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமைகிறது. இதன் மூலம் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்..”
-டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை அமைச்சர்
#SunNews | @TRBRajaa | #Tuticorin | #ShipBuillding | #VOCPort
நம் மாநிலத்தின் மண் - மொழி - மானம் காக்க திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் முழங்கியுள்ள "தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன்" தீர்மான உறுதி ஏற்புக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. அனைவரும் ஓரணியில் நின்று ஆதிக்க சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்.
#தமிழ்நாடு_தலைகுனியாது
தமிழ்நாட்டின் அடையாளங்களில் கல்விக்கென தனி இடத்தை உருவாக்கி இருக்கிறது நம் #திராவிட_மாடல்_அரசு!
இதன் ஒரு பகுதியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 பேருக்கு ஆசிரியர் பணிக்கான நுழைவுநிலைப் பயிற்சியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.122 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 76 பள்ளிக்கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.310 கோடி மதிப்பில் தமிழ்நாடு பாரத சாரண – சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 263 புதிய பள்ளிக்கட்டடங்களை கட்டுவதற்கு நம் முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.
அறிவும் – ஆற்றலும் நிறைந்த நாளையச் சமூகத்தை உருவாக்கும் அறப்பணியைத் தொடங்கவிருக்கும் ஆசிரியர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@KN_NEHRU@Subramanian_ma@Anbil_Mahesh