பல்துறை ஆற்றல் படைத்த பண்பாளர்,
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர்,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனைவியாக மட்டுமல்ல - திரையுலகிலும் அரசியல் உலகிலும் அவருக்குப் பக்கபலமாக விளங்கிய வி.என்.ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு அவரது சிறப்புகளை எடுத்துரைத்தேன்!
The Hon'ble Chief Minister, Shri M K Stalin, made a thoughtful gesture when he paid a visit to Selvam Karthi's home in Ariyalur and immediately gifted him and his family a new house to stay on seeing the current house condition.
Thank you, sir, for such a wonderful gesture; it will inspire us to go the extra mile to help Tamil Nadu Hockey.
Very Special thanks to our Treasurer Shri Sekar J Manoharan for all his efforts to create history in Tamilnadu Hockey 👏👏👏💐💐💐
இங்குள்ள அரசியல் எதிரிகளைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி விடலாம் என நினைக்கும் இனப் பகைவர்களுக்கு இங்கே இடமில்லை!
கொள்கையும் சாதனைகளுமே நமது வாளும் கேடயமும் எனக் கழக அணியினர் செயலாற்றுங்கள்!
உழைப்புக்கேற்ற வாய்ப்பு தேடி வரும்!
#LetterToBrethren
https://t.co/9Ubt6KhnQW
தமிழர் வரலாற்றின் எத்தனையோ பெருமைகளைத் தாங்கி நிற்கும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில், உள்ளன்போடு அந்த மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் நெஞ்சம் மகிழ பல்லாயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.
தமிழகம் இழந்த பெருமைகளை மீட்போம்!
இதுவரை அடையாத உயரத்தை அடைவோம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
கொள்கை வகுத்து- முதலீடுகளை ஈர்த்து, புதியதொரு தொழிற்புரட்சியில் நமது அரசு ஈடுபட்டுள்ளது. பெரம்பலூரில் 50000 பேருக்கு, அதிலும் பெரும்பாலும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ள #SIPCOT திறந்து வைத்து, காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினேன்.
அனைத்து மாவட்ட வளர்ச்சி, சீரான வளர்ச்சி!
ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை!
பகுத்தறிவைப் பள்ளிப்பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் "வானவில் மன்றம்" அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!
கற்றல் இனிமையாகட்டும்!
கல்வி முழுமையாகட்டும்!
இன்று மெரினா வந்த தங்கை வைஷ்ணவி "Dream Come True" என்கிறார்.
ஆம்! பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது.
சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம்.
உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன்!
On behalf of the people of Tamil Nadu, I extend my greetings and congratulations to Dato' Seri @anwaribrahim on his appointment as the 10th Prime Minister of Malaysia.
Looking forward to enhance our cooperation in culture, trade and investment in future.
"சேலம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்"
- கழகத் தலைவர் @mkstalin அவர்கள்.
விவரம்: https://t.co/vE1yozy2O5
சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல #ConstitutionDay-வில் உறுதிகொள்வோம்!
கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.
திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான @writerimayam நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்!
தனது தந்தை 'தத்துவ மேதை' டி.கே.சீனிவாசன் அவர்களது எழுத்துகளை மீண்டும் அச்சேற்றியுள்ள டி.கே.எஸ்.இளங்கோவனை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
ஏற்கனவே நான் #TwitterSpaces-ல் சொன்னதுபோல், திராவிட இயக்க இளைஞர்கள் தங்களது எழுத்தாற்றலால் படைப்புகள் பல படைத்திட வேண்டுமென மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
கடைக்கோடி, விளிம்புநிலை மக்களை மையமிட்டே நமது அரசு சிந்திக்கிறது, திட்டங்களைத் தீட்டுகிறது! அரசின் கவனம் பெரிதும் தேவைப்படுவோர் மாற்றுத்திறனாளிகள்!
ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடையக் கூடாது!
அவர்களுக்குப் பயனளிக்கும் எந்த ஆலோசனையையும் வரவேற்றுச் செயல்படுத்துவோம்!
#OlympicGoldQuest, #MegaSportsCity, 4 #OlympicAcademies என இளந்திறமைகளை உலக அரங்கில் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளின் வரிசையில், சாதனை வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினேன்.
இதுவரை 1443 பேருக்கு ரூ.41 கோடி வழங்கியுள்ளோம்!
ஊக்குவிப்போம்! வெல்வோம்! புகழ் சேர்ப்போம்!