இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கிராம சபை சிறக்கட்டும்!கிராமங்கள் செழிக்கட்டும்!!
#Gramasabai
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.7.2026) சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம், முக்கிய கட்டுமானப் பணிகள், புதிய வழித்தடத்தில் இரயில்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் மற்றும் எதிர்கால மெட்ரோ இரயில் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (10.04.2026, வெள்ளிக்கிழமை) சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், காரைக்குடி டவுன், கண்ணதாசன் மணிமண்டபம் அருகே, நண்பகல் 12.00 மணி முதல் 2.30 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.
அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
SHARE MAXIMUM 🚨📈
இது அவரோட Camera Team da !
They are for capturing his speech and uploading it in the #TVK YouTube Channel 💯 & JanaNayagan Shooting got over by June 02 ✅
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
இசுலாமியச் சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று (18.03.2026, புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி, தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. மேலும் 1000 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை.
அழைப்பிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அழைப்பிதழ் பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
1. சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை தமிழ்நாடு உடனடியாக வெளியிட வலியுறுத்தியும்,
2. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும்,
3. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும், அதனை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்,
கண்டன ஆர்ப்பாட்டம் நேரலை ...
https://t.co/X1lVxrC5l2
தேதி: 12.03.2026
இடம்: சென்னை
தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை.
மேலும்,
நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.
நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.
மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.
சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை.
சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.
கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.
திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு...
எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?
பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?
தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.
தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் மகளிர் தின விழா, நாளை (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் கழகத் தலைவர் அவர்கள் அறிவிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் வரும் 8ஆம் தேதியன்று, (08.03.2026) கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
ஆளுங்கட்சி நிர்வாகியின் வக்கிரம்: பச்சிளம் குழந்தை மரணத்திற்கு நீதி கிடைக்குமா?
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதியில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தாய் இல்லாத நேரத்தில் ஒரு பச்சிளம் குழந்தையிடம் மிருகத்தனமாக நடந்துகொண்ட இச்செயல், மனிதநேயமற்ற செயலின் உச்சமாகும். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர், ஆளுங்கட்சியான திமுகவின் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் என்பதுதான் இதில் உச்சகட்ட அதிர்ச்சியாகும்.
ஆளுங்கட்சி நிர்வாகிக்கே தமிழக காவல்துறையின் மீதோ அல்லது காவல்துறைப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மீதோ துளியும் பயமில்லை என்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்கெட்டுப் போயிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
சமூக நீதியைப் பற்றி மேடைக்கு மேடை முழங்கும் திமுக, முதலில் அதன் நிர்வாகிகளுக்குப் பெண் பாதுகாப்புப் பற்றிய அடிப்படை ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்காதது ஏன்?
வெறும் கைது நடவடிக்கையோடு நிற்காமல், இத்தகைய நபர்கள் மீண்டும் கட்சிக்குள் நுழையாதவாறு நிரந்தரத் தடை விதிக்கப்படுமா? தன் கட்சி நிர்வாகியின் இந்த அருவருக்கத்தக்கச் செயலுக்கு திமுக தலைமை தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கத் தயாரா?
குற்றவாளி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், காவல்துறையினர் மீதோ அல்லது சாட்சிகள் மீதோ அழுத்தம் கொடுக்கப்படாது என்பதைத் தமிழக அரசு எப்படி உறுதி செய்யப் போகிறது?
மேற்கண்ட கேள்விகளுக்கு உரிய பதிலை எதிர்பார்க்கிறோம் சி. எம் சார்!!!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 23ஆம் தேதி) திங்கள்கிழமை, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லமங்கலம் பகுதியில் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும்.
காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கழக நிர்வாகிகளுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
வீரத்திற்கும் தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர், "தென்னாட்டின் ஜான்சி ராணி", தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர், சமூக சேவகர், தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினமான இன்று, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினேன்.
சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர்! நீராதாரத்திற்காகப் போராடியவர், போராட்டக் களத்தில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று அன்றே நிரூபித்தவர்.
தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் வழியில், தீய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க உறுதியேற்போம்!
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.
மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.