உலகத் தமிழர்களின் தலைவர் தளபதியார் அவர்களையும், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் @Udhaystalin அவர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் அதிமுகவை சேர்ந்த ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டம் இன்று இராஜபாளையத்தில்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கான சமத்துவப் பொங்கல் விழாவில் இன்று நாம் கலந்து கொண்டோம்.
முதலமைச்சர் அவர்களுக்குத் தலைமைச் செயலக பணியாளர்கள் தமிழர் திருநாள் வாழ்த்துகளைக் கூறி அன்புமழை பொழிந்து மகிழ்ந்தனர். நாமும் நம்முடைய பொங்கல் வாழ்த்துகளை அவர்களுக்குத் தெரிவித்தோம்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் அரசு பணியாளர்களின் நலன்களை என்றென்றும் நமது திராவிட மாடல் அரசு பாதுகாக்கும்!
பொங்கல் சிறக்கட்டும்! வளம் பெருகட்டும்!
முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் திரு.கே.எஸ்.ரவிசந்திரன் Ex MLA அவர்கள் தேர்தல்_சம்பந்தமாக #செயல்திட்ட_அறிக்கை ( SIR )குறித்த ஆலோசனைகள் வழங்கினார்
(01.10.2025) தென்காசி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் "கழக வழக்கறிஞர்
அணி நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம்" தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர்-சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா அவர்களின் தலைமையில், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் திரு ராஜாமுகமது ஆகியோர் ...
நாட்டு விடுதலையே வேட்கையென வாழ்ந்து மறைந்த செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று!
சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்திற்குச் சென்று, சிதம்பரனாரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
தன்னலங்கருதாது தமிழ்நிலத்தில் சமரசமின்றி ஆதிக்கத்தை எதிர்த்த கப்பலோட்டியத் தமிழரின் புகழ் ஓங்கட்டும்!
@Subramanian_ma@PKSekarbabu@mp_saminathan@PriyarajanDMK@MMageshkumaar
இருளை அகற்றி வெளிச்சம் பரப்பும் சூரியன் போல், அறியாமை அகற்றி அறிவு ஒளி பரவிடச் செய்யும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ச்சமூகம் அறிவுசார் சமூகமாக வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்தவர்கள் ஆசிரியர்களே!
வகுப்பறையில் தங்களையே மெழுகுவர்த்தியாக ஏந்தி, மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
ஆசிரிய பெருமக்களின் முன்னேற்றத்துக்கு கழகமும் - கழக அரசும் என்றும் துணை நிற்கும்!
#TeachersDay2025
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை #OxfordUniversity-இல் திறந்து வைத்து இருக்கிறார் நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
திராவிட இயக்கத்தின் நீண்ட நெடும் பயணத்தில் மேலும் ஒரு வரலாறுச் சிறப்புமிக்க நாள் இது!
நம் முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் ஆட்சிக்காலத்தில் பெரியார் உலகமயமாவதை காணும் போது மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.
பகுத்தறிவின் துணையோடு சுயமரியாதை உணர்வோடு ஆதிக்கத்தை என்றும் வீழ்த்துவோம்!
வாழ்க தந்தை பெரியார்!
#CMStalinInOxford #Periyar #PeriyarAtOxford
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, #TeachersDay2025-ஆன இன்று, ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’-க்கு தேர்வாகியுள்ள 396 ஆசிரியர்களுக்குப் பதக்கம், சான்றிதழ், பரிசுத்தொகையை @ACLChennai-இல் வழங்கி மகிழ்ந்தோம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தேர்வாகியுள்ள 2810 பேருக்கு, பணி நியமனம் வழங்குவதன் அடையாளமாக, 40 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினோம்.
நல்லாசிரியர் விருது பெற்றோருக்கும், ஆசிரியப்பணி எனும் அறப்பணியை தொடங்குவோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்!
@Subramanian_ma@PKSekarbabu@Anbil_Mahesh@PriyarajanDMK@mageshkumaar@dindigulleoni
Addressed the press today to announce the #IRONMAN5150#Triathlon which will be held in Chennai on January 11, 2026, along the scenic ECR.
Under the visionary #DravidianModel Government led by our Honourable Chief Minister @mkstalin, we are proud that India will be the third country in Asia to host this prestigious endurance event supported by SDAT.
I warmly invite all endurance enthusiasts to participate in large numbers and make it a grand success.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
இந்திய ஒன்றியத்தின் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் தி.மு.கழகத்தின், ஆற்றல்மிகு அணியான நம் @dmk_youthwing-க்கு ஒன்றியம்-நகரம்-பகுதி-பேரூர்களைத் தொடர்ந்து கிளை-வார்டு-பாகம் வரை உள்ள அமைப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை, இன்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் சந்தித்து ஆற்றவேண்டிய கழக-கொள்கைப் பணிகள் குறித்து உரையாற்றினோம்.
2026-சட்டமன்றத் தேர்தலில் வரலாறு படைக்க, கழக இளைஞர் அணி கடமையாற்றும்.
@arivalayam@PKSekarbabu@Joel_Dmk@VanavilVijay
தி.மு.கழகத்தின் முதன்மை அணியாம் @dmk_youthwing நிர்வாகி என்பது பதவி அல்ல, பொறுப்பு என்ற உணர்வுடன் 2026 தேர்தல் களம் காண்போம். மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், வெற்றிவாகை சூடுவோம்!
#கழக_இளைஞர்_அணி
இயக்கத்தின் இதயமாம் நம் இளைஞர் அணிக்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கொளத்தூர், அம்பத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கழகத்தின் போர்ப்படை வீரர்களான @dmk_youthwing-ன் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்!
@arivalayam@PKSekarbabu@Joel_Dmk@VanavilVijay
சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கொளத்தூர், அம்பத்தூர் மற்றும் திரு.வி.க. நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் @dmk_youthwing-க்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை இன்று மாலை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் சந்தித்தோம்.
கழகப் பற்றுடனும் கொள்கை உறுதியுடனும் உழைத்தால், அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு உயரலாம், கழகம் உயர்த்தும் என்பதை, மேடையில் அமர்ந்திருந்த முன்னோடிகளை எடுத்துக்காட்டி உரையாற்றினோம்.
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில், 200-க்கும் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளில் வெல்ல இந்த இளைஞர் படை துணை நிற்கும்!
@arivalayam@PKSekarbabu@Joel_Dmk@VanavilVijay
தி.மு.கழகத்தின் நாற்றங்காலான, இளைஞர் அணியின் புதிய நிர்வாகிகள் ஒவ்வொருவரும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில், கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டுடன் மக்கள் பணி - கழகப் பணியாற்றிட உறுதியேற்போம்!
@dmk_youthwing #கழக_இளைஞர்_அணி
என் மனதிற்கு நெருக்கமான நம் கழக இளைஞர் அணிக்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்களது உத்தரவின் பேரில், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள், ஊராட்சிக் கிளைகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர், ஆர்.கே.நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் முன்கள வீரர்களாக பணியாற்றவிருக்கும் புதிய @dmk_youthwing நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@arivalayam@rdsekarmla@Joel_Dmk@JJEbenezer1
திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற மாங்காடு நகரக்கழகச் செயலாளர் - நகர்மன்ற துணைத் தலைவர் அண்ணன் பட்டூர் ஜபருல்லா அவர்களுடைய அன்பு மகள் சனோபர் பசீலா - அப்துல் மாலிக் சல்மான் இணையரின் திருமண விழாவில் பங்கேற்றோம்.
மணமக்கள் இருவரும் கலைஞரும் - கழகமும் போல, தலைவர் அவர்களும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@TRBaaluMP@thamoanbarasan@Avadi_Nasar@gselvam_mp@office_krishna@KarunanithiMla
காஞ்சி வடக்கு மாவட்ட கழகம் - மாங்காடு நகரக் கழகச் செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான அண்ணன் பட்டூர் எஸ்.ஜபருல்லா, இன்றைய தினம் திருவேற்காட்டில் நடைபெற்ற அவருடைய மகளின் திருமண விழாவின் போது, @dmk_youthwing அறக்கட்டளைக்கு ரூ.1 இலட்சத்துக்கான காசோலையை நம்மிடம் வழங்கினார்.
மேலும், 6 பெண்களின் திருமணத்துக்கு உதவிடும் வகையில் அவர் ஏற்பாட்டில் தலா ரூ.1 இலட்சம் என மொத்தம் ரூ.6 இலட்சத்துக்கான காசோலைகளை பயனாளிகளிடம் வழங்கி வாழ்த்தினோம்.
அண்ணன் ஜபருல்லா அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்!
@TRBaaluMP@thamoanbarasan@Avadi_Nasar@gselvam_mp@office_krishna@KarunanithiMla