போய் வா
மிக்க நன்றி
ஒரு சிறிய கனவை தந்ததற்கு
ஒரு சிறிய நினைவை தந்ததற்கு
பாலைவன ஒட்டகம்
அருந்தக் கிடைத்த
அந்தச் சிறிய தண்ணீரோடு
நெடுந்தொலைவு செல்லும்.
- மனுஷ்யபுத்திரன்
படித்த, அடிப்படை சிந்தனைத் திறனுள்ள சாதாரணனின் உளவியலை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது .
அரசியலை தூர நின்று பார்க்கும் மக்களின் மந்தை மனங்கள் என்னவெல்லாம் செய்ய முடியுமென வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. காலத்தோடு ஓடத்தான் வேண்டும்.
நடப்பவை நன்மைக்கே.
#tnelectionresult2026
@narsimp பூனை கெடக்குதான்னு பாக்க சொல்லி ரெண்டு பேருக்கு அனுப்பிருக்கேன்...
ஆனா.. ராத்திரி பூரா "வயிறு நெறஞ்ச மாடு அப்பப்ப புல்லுல வாய் வைக்குற மாதிரி ஏதோ கொஞ்சம் படிச்சுட்டு, பெரிய வாசகன்னு நெனச்சுட்டு இருக்கியா, வெண்ணன்னு" என்ன நானே கடிஞ்சுக்கிட்டதுதான் மிச்சம். நல்லாருங்க 🙌..
நான் எதனையுமே மறுபரிசீலனைக்கே விட்டுவிடுகிறேன்
நான் படித்த புத்தகங்கள் என்னைக் கேலி செய்கின்றன
நீ பழைய மனிதன்தான் என்கிறது ஒரு புத்தகம்
புதிய மனிதன்தான் என்கிறது இன்னொரு புத்தகம்
நான் மனிதன்தானா என்று சோதித்துக்கொள்ளும் நிர்ப்பந்தங்கள்
- ஆத்மாநாம்