நேத்து சலூன்ல. "அட அப்பா ஒண்ணும் சொல்லமாட்டாருன்ணா.." என தனக்கு வேண்டியபடி பள்ளிச் சிறுவன் சொல்ல கண்களை மூடி லயித்திருந்த என் மைண்ட் வாய்ஸை அப்படியே ஒலித்தது இன்னொரு குரல். 'ஏண்டா நாங்கல்லாம் அந்தக்காலத்துல..எங்க அப்பாலாம் இப்பிடி விடமாட்டாரு.." ஆஹா என சாய்திருந்தவன் நிமிர எத்தனிக்கும்போது அக்குரல் தொடர்ந்தது. 'எங்கப்பாலாம் வீடியோகால்ல வந்து இன்னும் க்ளோசா வெட்டும்பாரு" என்றது. சாந்திருந்தவன் இன்னும் சாய்ந்து இன்னும் கண்களை இறுக்கிக்கொண்டேன். "வீடியோகால்ல வந்த தலைமுறைக்கே 'அந்தக்காலத்துல' பதம் வந்துவிட்டதெனில்..ஆத்தாடீ ஆத்தா..தட் வங்கெழடு சமீபித்துவிட்டது. கண்களை மூடிக்கொள்ள இமைகளைக் கொடுத்த இயற்கை காதுகளை இப்படி அனாதை ஆக்கிவிட்டதே எனும் உளவியல் விச்சாரங்களின் மாச்சர்யத்தோடு மல்லாந்து கிடக்கிறேன். 😏😁
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
மு.வரதராசன் :
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
காலம் :
கலைஞர்.
❤️
"அதுல ஒருத்தி க்ராத்தே பழகிருப்பா போல ஏத்துனா பாரு" என்ற வடிவேலு டயலாக்தான் 'ஒன்லைன்' இந்த Blast படத்துக்கு 😁.
அந்தஹாலத்துல மதுர மாப்ளவிநாயகர் தியேட்டர்ல வர்ற புரூஸ்லீ ஜாக்கிச்சான் படங்கள் மாதிரியான ஒன்னு. தரமான சண்டைக்காட்சிகள்.வால்ட்டர் வெற்றிவேல் தம்பி கேரக்ட்டர் போல விவேக் பிரசன்னா பாத்திரம்னு நினைச்சா.. 🔥. லாஜிக் இல்லா செம மேஜிக்.
Btw, ஆரம்பத்துல சொன்ன வடிவேலு டயலாக் மாதிரி இன்னும் அவரோட பல பஞ்ச்கள வச்சு சில பல படங்கள் வந்ருக்கோ?..வரலாம்தான்.