திருமணங்கள், பெயர்சூட்டு விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள், அறுபதாம் கல்யாணங்கள், விருந்தினர் வருகைகள், மருத்துவ அலைச்சல்கள், பயணங்கள், வார இறுதிப் போக்குவரத்துகள், ஷாப்பிங் மால் திரைப்படங்கள், சந்திப்புகள், கேஒய்சிகள் எல்லாம் முடிந்த பின்பு ஒரு சிறுகதை எழுதலாமென்று இருக்கிறேன்.
பிரக்ஞானந்தா மாபெரும் திறமையாளர். கூரிய அறிவு மட்டுமின்றி அபரிமிதமான மன உறுதியாலும்தான் இந்த உயரத்தை அவர் அடைந்திருக்கிறார். அதே மன உறுதியால் அவர் இதிலிருந்து மீண்டு வருவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
பொது இடத்தில் நாம் கைபேசியில் வீடியோ பார்க்கும்போது மற்றவர்களுக்கு அதில் ஒலி மட்டுமே கிடைக்கிறது. கைபேசியை ஒரு "செல்ஃபி ஸ்டிக்"கில் வைத்துப் பார்த்தால் அவர்களுக்குப் படமும் பார்க்கக் கிடைக்கும்.
இன்றைய செய்திகள்
> "எங்கள் வீட்டில் கறிச்சோறே தின்பதில்லை!!" - நீதிபதி உருக்கம்
> நடிகமணி அரசு முதல் பக்ரீத் சுவாகா
> "சமூகநீதியிலுமா ஜாதி பார்ப்பார்கள்?" - எம்எல்ஏ குமுறல்
> சலோ டமில் தாய் கோ வனக்கம்
> "கோர்ட்டு இப்படியே இருக்குமானால் நம் கதி என்னாவது?" - பெரியார் கேள்வி
மதியம் சாப்பிட வந்த விருந்தாளிகள் இருட்டிய பின்னும் கிளம்பவில்லை. வீட்டில் தேட மாட்டார்களா என்று கேட்கவும் முடியாது. ஏனென்றால் மொத்த வீடும் இங்கேதான் சோபாவில் குந்தியிருக்கிறது.