ஒரு பெண் இறந்துவிட்டார் இனியாவது அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள்...
உல்லாசத்திற்கு அழைத்த பெண் இதுதான் ஒரு பெண்ணின் மரணத்தை விவரிக்க நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பா
ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்
அந்தப் பெண்ணும் யாரோ ஒருவரின் மகள். யாரோ ஒருவரின் அன்புக்குரியவர். அவளுக்கென்று கனவுகள் இருந்திருக்கும்; ஆசைகள் இருந்திருக்கும்; அவளை நம்பி வாழ்ந்த உறவுகள் இருந்திருக்கும். இன்று அவள் உயிருடன் இல்லை. தன் தரப்பு உண்மையைச் சொல்லவும் முடியாது; தன் பெயரின் மீது சுமத்தப்படும் களங்கத்தைத் துடைக்கவும் முடியாது.
**அவள் இறந்துவிட்டாள் என்பதற்காக அவளுடைய கண்ணியமும் இறந்துவிட வேண்டுமா?
மரணத்தைக்கூட மனிதநேயத்துடன் அணுக முடியாத அளவுக்கு நமது ஊடக அறம் சிதைந்துவிட்டதா?
ஒரு பெண்ணின் மரணத்தைச் செய்தியாக்குவது உங்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் அவளுடைய குணத்தைச் சித்தரிப்பதும், அவளது தனிப்பட்ட வாழ்க்கையைப் பரபரப்புக்கான விற்பனைப் பொருளாக்குவதும் எந்த வகையில் நியாயம்?
உண்மையை எழுதுங்கள். குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் வெளியிடுங்கள். விசாரணையின் முடிவுக்காகக் காத்திருங்கள். ஆனால், **தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கவே முடியாத ஓர் உயிரின் மீது வார்த்தைகளால் கல்லெறியாதீர்கள்...
நாளை இதே தலைப்பை உங்கள் வீட்டுப் பெண்ணைப் பற்றி யாராவது எழுதினால், உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ளுமா? அந்தத் துயரத்தை ஒரு கணம் உங்கள் குடும்பத்தின் இடத்தில் வைத்துப் பாருங்கள். அப்போதுதான் ஒரு தலைப்பின் பின்னால் எத்தனை இதயங்கள் உடைகின்றன என்பது புரியும்.
ஊடகத்தின் பணி மரணத்தைச் சுற்றிப் பரபரப்பைக் கிளப்புவது மட்டுமல்ல; மனிதர்களின் கண்ணியத்தையும் உண்மையையும் காப்பதும்தான். ஒரு செய்தி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கலாம்; ஆனால் அது இறந்தவரின் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.
இறந்தவரால் பதில் சொல்ல முடியாது என்பதற்காக, அவரைப் பற்றி எதையும் எழுதிவிடாதீர்கள். பேச முடியாதவர்களின் கண்ணியத்தைக் காப்பதில்தான் உண்மையான மனிதநேயம் இருக்கிறது
ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த மரணமே அவளுக்குப் போதுமான துயரம். அதற்குப் பிறகும் அவளது பெயரையும் கண்ணியத்தையும் கொல்லாதீர்கள்.
மனிதநேயம் இருந்தால் உண்மையை எழுதுங்கள்; மனசாட்சி இருந்தால் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்
பத்திரிகை அறம் இருந்தால் தலைப்பைத் திருத்துங்கள்
ஒரு பெண்ணின் மரணத்தைவிட உங்கள் தலைப்புச் செய்தி பெரிதல்ல. மனிதநேயத்தைவிடப் பரபரப்பு முக்கியமல்ல
இதெல்லாம் பாத்த இது இந்தியவா இல்ல பாக்கிஸ்தான் டவுட் தான் வருது 🥴😵💫.
நான் பாத்து வளர்த்த இந்திய இது இல்ல 😭😭
ஓட்டு அரசியலுக்கு மக்கள எப்படி மாத்தி வெச்சுருக்கானுங்க 🤧
@mkstalin@RahulGandhi@Iuml@thirumaofficial 🤧🤧
65 டீம் Anti Norcotic Force ?
135 கிலோ 800 முதல் 1000 கோடி மதிப்பிலான போதை பொருள்
இது தமிழ்நாட்டு வரலாற்றுல இப்படி ஒரு நிகழ்வு நடக்கல ?
இதை ஒன்றிய அரசின் போதை பிரிவு கண்டுபிடிச்சு கைது பன்றாங்கன்னனா ?
நீங்க போட்ட Force எங்க போச்சு ?
கையாலாகத அரசு இது
'காரணம் எல்லாம் கேட்காதீங்க சார், அடிங்க' moment.. 😑
ஆனா, இவ்ளோ mis-information & cinematic liberty எல்லாம் இருந்தும்.. படம் சுமாரா கூட இல்லங்குறதுதான் கொடுமை 🤦
#WATCH | சென்னை அமைந்தகரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு.
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
#SunNews | #PowerCut | #Vijay | #மின்வெட்டு
#BREAKING | “ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்வது ஊழல்..”
மின் துறை பொறியாளர் அமைப்பைச் சேர்ந்த சா.காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.
#SunNews | #TNEB | #TVK | #Nirmalkumar